Thursday, November 1, 2012

NEWS 2.11.12


news.gif
நேர்முக உதவியாளர் பணியிடம் முதல் துப்புரவுப் பணியாளர் பணியிடம் முதற்கொண்டு காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தூய்மையான இந்தியாவை உருவாக்கிட, தூய்மை மேம்பட்ட உறுதிமொழியை தினமும் பள்ளி பிராத்தனைக்கு பிறகு எடுக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

ராய்பூரில் 21 முதல் 28.11.12 வரை நடைபெறும் கையெழுத்துப் பயிற்சிக்கு 30 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் பங்கேற்க அனுமதியளித்து - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மைய அரசின் திட்டம் (IDMI) - நிதி உதவி கோரி சிறுபான்மையினத்தவர்களால் நடத்தப்படுகின்ற பள்ளிகளிலிருந்து பெறப்படுகின்ற கருத்துருக்களை பரிசீலினை செய்து அனுப்ப கோருதல் தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளின் விலையில்லா சீருடைகள் வழங்குவது குறித்து விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

பச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களின் வகைகள் மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் பச்சை நிற மையை பயன்படுத்த அதிகாரம் வழங்கி முக்கிய அரசாணைகள்

DGE: Application for National Means cum Merit Scholarship Exam 2013


பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு  பண்டிகை முன்பணம் ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு. விரைவில் இதற்கான அரசாணை நம் இணையதளத்தில் வெளியிடப்படும். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகளுக்கு நவம்பர் 20ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டித்து - தேர்தல் ஆணையம் உத்தரவு

மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை


மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல் போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது.
ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன.
பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும். 

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்


மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.

மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன். 

திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment