Tuesday, June 25, 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

            இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
          இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்  என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். 
 
                ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய (24.06.2013) தலைமையாசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்:
ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

          நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


ஐ சி டி தேசிய விருதுகள் கருத்துருக்கள் பரிந்துரை செய்யும் பொது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் குறித்து உத்தரவு 
பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளிதழ் செய்தி
             பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
             தமிழகம் முழுவதும், பள்ளிகள் இயக்கப்படும், 9:30 மணிக்கு, அரசு, தனியார் அலுவலகங்களும் செயல்படத் துவங்குகின்றன. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களைத் தவிர, அரசு பேருந்துகளில், சொந்த வாகனங்களில் செல்லும் மாணவர்கள், இதனால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் போதுமான அளவு இல்லாத நிலையில், வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் மாணவர்கள் சிக்கி, உரிய நேரத்தில் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், "ஷிப்ட்" அடிப்படையில் பள்ளிகளை இயக்கலாமா? என்ற, ஆலோசனையும் இருந்தது. சில தனியார் பள்ளிகள், இம்முறையை பின்பற்றியும் வருகின்றன.

               இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன், பஸ் நேரத்திற்கு வராததால், பால் வேனில் சென்ற மாணவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தை மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதன்படி, இன்று முதல், காலை, 9:30 மணிக்கு பதில், 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும் என்றும், மாலை, 4:30 மணிக்கு பதில், 4:15 மணிக்கு முடியும் என்றும், 2013-14ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், "பள்ளி நேரத்தில் மாற்றமில்லை" என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

             இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு, போதிய உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீதி போதனை, உடல்நலம், வாழ்க்கை, சுற்றுச்சூழல் கல்விகள், முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள், இன்றைய காலகட்டத்தில், மாணவ, மாணவியருக்கு அவசியம். மேலும், பள்ளி செயல்பாடுகள், மாணவர்களுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழக அரசு, கடந்தாண்டு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மதிய இடைவேளைக்குப் பின், வாய்ப்பாடு சொல்லுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை, இறுதி வகுப்பில், மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

            இதனை செயல்படுத்த, பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கூறியதன் பேரில், அவர்களை கொண்டு ஒரு குழு அமைத்து, பாடவேளைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக மாதிரி பாட கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.இதேபோல், பாடவேளை நேரங்களை, பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு உட்பட்டு, மாற்றி அமைத்துக் கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

           பாட கால அட்டவணையில் மட்டுமே, மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே, பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறானது. பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக, தற்போது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பள்ளி துவங்கும், முடியும் நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால், நாள்காட்டி தகவலும், இந்த அறிவிப்பும் மாணவர்களை குழப்பமடைய செய்யும் வகையில் உள்ளன.
ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி
           தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
 
              அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராம மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில், ஆங்கில வழிக் கல்வியை அரசு செயல்படுத்தியது. இந்தாண்டு, மதுரை மாவட்டத்தில் 194 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், 178 தொடக்க பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தலா 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.

             தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மீடிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை. ஜூன் 10ல் வகுப்புகள் துவங்கிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி நடத்தும் ஆசிரியர்கள் விவரம், பாட அட்டவணை குறித்தும் பள்ளிகளில் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று, பெற்றோர் கூறுகின்றனர்.

           ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆங்கில வழிக் கல்வி வகுப்பில், ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஆங்கில வழிக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கவில்லை. கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "புத்தகங்கள் விரைவில் வந்துவிடும். அதுவரை ஆங்கில அடிப்படையை கற்றுக்கொடுங்கள்" என்கின்றனர். இதனால், தமிழ் வழிக் கல்வி புத்தகங்களை வைத்துத்தான் பாடம் நடத்துகிறோம், என்றனர்.

           மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி கூறுகையில், "தாமதமாக ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் தான் இப்பிரச்னை உள்ளது. உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சென்று ஆசிரியர்கள் வாங்காமல் உள்ளனர். ஒரு வாரத்திற்குள் அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும்" என்றார்.


  

No comments:

Post a Comment