BHARATHIAR UNIVERSITY B.ED 2013 DISTANCE MODE ADMISSION
| |
ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள்: ஜூன் 17ல் விற்பனை
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது.
பல ஆசிரியர்கள் பணியில் இருந்தும், தகுதி தேர்வில் தேர்ச்சியடையவில்லை.இதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்,கடந்த முறை மாவட்ட கல்வி அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஜூன் 17 முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அதே பள்ளிகளிலே வழங்கலாம். விண்ணப்பங்கள் விற்பனை செய்யவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவது குறித்து , அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய்.
| |
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆர்வம் குறைவு
ஈரோட்டில் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கிய 15 நாளில் 127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
ஆண்டுதோறும், 40 ஆயிரத்து 710 மாணவர்களும், 63 ஆயிரத்து 350 மாணவியருமாக மொத்தம், ஒரு லட்சத்து 4,060 பேர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடிந்து வெளியேறுகின்றனர். இப்பயிற்சி பள்ளியில் ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர் பணிக்கு முன் பயிற்சி, பணியிடை பயிற்சி என இருவகையான பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பயிற்சியின் மீது மாணவர்களுக்கு ஆர்வமின்மை காரணமாக, அட்மிஷன் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
நடப்பு 2013-14 கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேருவதற்கு, தமிழகம் முழுவதும் மே., 27 முதல் ஜூன்., 12 (இன்று) வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாய் ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிய இடத்திலேயே ஜூன்., 12ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது.
மாணவர்கள் சேர்க்கை ஆன்-லைன் வழியில் நடக்கவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்திலும், பெருந்துறை "டயட்" நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கி 15 நாட்களாகியும், ஈரோட்டில் வெறும் 127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆர்வம் குறைவால், பெருந்துறையில் 108 விண்ணப்பங்களும், ஈரோட்டில் வெறும் 19 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன. துவக்க நாளில் இருந்து மொத்தம் 127 விண்ணப்பம் மட்டுமே விற்றுள்ளன, என்றார்.
| |
தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் குவிந்தன: தர வரிசை பட்டியல் தயாரிப்பு தீவிரம்
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு, 6765 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இந்த ஆண்டு சென்டாக் கன்வீனராக அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்டாக் குழுவினர், விண்ணப்பங்கள் வினியோகம், தரவரிசைப் பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
கடந்தாண்டு, பல்வேறு மையங்களில் சென்டாக் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்டாக் அலுவலகத்தில் பெறப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் அலைகழிக்கப்படாமல், அவர்களது சிரமத்தை குறைக்கும் வகையில், "ஆன்-லைன்" மூலம் விண்ணப்பிக்கும் முறை இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 16ம் தேதி முதல், சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. சென்டாக் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் தகவல்களைப் பூர்த்தி செய்து, மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மேலும், இணைய விண்ணப்பத்துடன், சான்றொப்பம் இடப்பட்ட நகல் சான்றிதழ்களை இணைத்து, சென்டாக் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 30ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இணைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டிய கடைசி தேதி, ஜூன் 10ம் தேதியாகும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி முடிந்துவிட்ட நிலையில், புதுச்சேரி முழுவதும் இருந்து 6250 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 515 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தம் 6765 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு, புதுச்சேரி மாணவ மாணவிகள் 6112 பேர், வெளிமாநிலங்களுக்கான இடங்களுக்கு 925 பேர், என மொத்தம் 7037 பேர் விண்ணப்பித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலிங் எப்போது விண்ணப்பங்களை பாட வாரியாகவும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பிரித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, சென்டாக் அலுவலகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனடிப்படையில், தகுதிப் பட்டியல், விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது தொடர்பான தீர்ப்பு, ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இதற்குப் பிறகே, சென்டாக் கவுன்சிலிங் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
| |
அரசு அங்கீகாரமின்றி மாணவர்கள் சேர்ப்பு: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்துள்ளார்.
மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட 44 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளை அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் சேர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விருத்தாசலம் கோட்டத்தில் திட்டக்குடி இந்தியன் பள்ளி, கருவேப்பிலங்குறிச்சி ஜே.வி.சஸ், ராஜேந்திரபட்டிணம் பாரதி, சத்தியவாடி எஸ்.டி.எஸ்., புதுக்குப்பம் நேரு பள்ளி உட்பட 16 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளது.
இவற்றிலிருந்து, மாற்றுச்சான்றிதழை பெற்று, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்திட அந்தந்த பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை, பெற்றோர்கள் அணுகுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மாற்று பள்ளிகளில் சேர்த்து கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். மேலும், மூடப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாது.
மாறாக, சேர்க்கையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஆர்.டி.ஓ., கூறினார்.
| |
இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்
1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
செலவு மற்றும் மேலாண்மை கணக்கிடுதல் செயல்பாட்டை, திறம் வாய்ந்த நிர்வாக அமைப்பாக மாற்றுவது, இச்செயல்பாட்டிலுள்ள அறிவியல் அம்சங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன், இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு http://icmai.in
| |
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இனி வெளிநாடுகளிலும்...
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் சர்வதேச கிளைகளை தொடங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி., ) திட்டமிட்டுள்ளது. இதன்படி முதன்முறையாக கத்தார் நாட்டில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என (எம்.எச்.ஆர்.டி., ) தகவல்கள் தெரிவிக்கின்றன. | |
மெர்ச்சன்ட் நேவி
மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை என்பது ராணுவத்தோடு தொடர்புடையது.
இந்தியாவில் ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங், எஸ்ஸார், சவுகுளே ஷிப்பிங் ஆகியவை இது போன்ற மெர்ச்சன்ட் நேவியை நடத்துகின்றன. பன்னாட்டு வாணிபத்தில் மெர்ச்சன்ட் நேவி தான் முக்கிய பங்காற்றுகிறது.
இத்துறையில் மூன்று முக்கிய பணிகளுக்கு நபர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். கப்பலின் மேல்தளம், இன்ஜின், சேவைப்பிரிவு ஆகியவற்றுக்கு ஏராளமான நபர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். கேப்டன், தலைமை அதிகாரி, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அதிகாரி, பிற இளநிலை அதிகாரிகளுக்கும் முக்கிய பணிகள் உள்ளன.
கடற்பயணத்தை வழிநடத்தவும், கார்கோ மற்றும் பயணிகளை பாதுகாக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். சீப் இன்ஜினியர், ரேடியோ ஆபீசர், எலக்ட்ரிகல் ஆபீசர், ஜூனியர் இன்ஜினியர் ஆகியோர் இன்ஜின் பிரிவில் பணியாற்றுகிறார்கள். கிச்சன், லாண்டரி, மருத்துவச் சேவை மற்றும் பிற சேவைகளுக்கானவர்கள் சேவைப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
மெர்ச்சன்ட் நேவி பணிகளில் கவர்ச்சிகரமான ஊதியம் தரப்படுகிறது. இலவச உணவு, தங்குமிடம், சம்பளத்தோடு கூடிய விடுமுறை, இலவச பயணப்படி, குடும்பத்திற்கான சலுகைகள் ஆகியவை மெர்ச்சன்ட் நேவி பணிகளில் கிடைக்கிறது. இது தவிர போனஸ், விடுமுறைப்படி போன்றவைகளும் தரப்படுகின்றன.
வருமான வரி இல்லாத தொகையாக இவற்றைப் பெற முடிகிறது என்பது கூடுதல் தகவல்.
நேவி படிப்புகளில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை நாடிகல் சயின்ஸ், மரைன் இன்ஜினியரிங், கேட்டரிங் போன்ற படிப்புகளைப் படிப்பவர்கள் மெர்ச்சன்ட் நேவி பணிகளில் சேரலாம்.
| |
B.E Rank List 2013
| |
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Thursday, June 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment