Tuesday, June 18, 2013


    அதிக கட்டணம் வசூலிக்கும் மழலையர் பள்ளிகள்: கண்காணிக்குமா அரசு? - Dinamalar

      தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகளும், 4,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும், 650க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

        நர்சரி, பிரைமரி பள்ளிகளில், அடிப்படை வசதியில்லை என கூறி, 900 பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள பள்ளிகளை மூட, நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

          அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டதாகக் கூறி, இப்பள்ளிகளை மூடி வரும் நிலையில், தமிழகத்தில், "கிண்டர் கார்டன்", "ஆப்பிள் கிட்ஸ்", "ஆரஞ்ச் இன்டர்நேஷனல் ஸ்கூல்", "பிளே ஸ்கூல்", "பப்ளிக் ஸ்கூல்" என பல பெயரில் மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன.

          இதில், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரம் வகுப்புகளுக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசின் அங்கீகாரமின்றி இப்பள்ளிகள் செயல்படுகின்றன.
பணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளிகளை, அரசு கண்காணிப்பதில்லை. பொறியியல் படிப்பு கட்டணத்தை விட, அதிக பணம் வசூலிக்கும் இப்பள்ளிகளை முறைப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

         அதுபோல, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., கேம்பிரிட்ஜ் பள்ளி என, பல்வேறு பெயர்களில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 10ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு கல்விக் கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இவற்றை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

          இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர், நந்தகுமார் கூறியதாவது: குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத, எந்தவித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகளை மூடுவது வரவேற்கத்தக்கது.

           500க்கும் மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகள் பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும், காத்திருந்தும் அப்பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது.

          சமச்சீர் கல்வித் திட்டம் காரணம் காட்டி, தரமான கல்வி வழங்குவதாகக் கூறி, புதிதாக 500க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, அனுமதி வழங்கியுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறாமலே செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

              தமிழகத்தில், மூடப்பட்டு வரும், 900 மழலையர், துவக்கப் பள்ளிகளில், 200க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள் தனியாகச் செயல்படுகின்றன. "மழலையர் வகுப்புகளுக்கு கட்டாய கல்விச் சட்டத்தின்படி அங்கீகாரம் பெற வேண்டியதில்லை" என டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

          இந்நிலையில், கட்டாய கல்வி சட்டம் காட்டி, தற்போது, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்பட உள்ளன. எனவே, மழலையர் பள்ளிக்கு அங்கீகாரம் பெற வேண்டுமா, இல்லையா என்பதை, மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
அண்ணா பல்கலையில் பொறியியல் கலந்தாய்வு துவங்கியது

          பி.இ. சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் இன்று துவங்கியது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர, 1.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், இடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         இன்று தொடங்கிய விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, வரும் 19ம் தேதி வரை, நடக்கிறது. கடந்த ஆண்டு வரை, இந்த பிரிவில், 100 இடங்கள் மட்டும் இருந்தன. முதல்வர் ஜெயலலிதா, 100 இடங்களை, 500 இடங்களாக உயர்த்தி அறிவித்தார். அதன்படி, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும், 500 இடங்கள், நிரப்பப்பட உள்ளன.

           வரும் 20ம் தேதி, மாற்றுத் திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 21ம் தேதியில் இருந்து, ஜூலை, 30 வரை, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
இக்னோ பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

         இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான, இக்னோவில் வழங்கப்படும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

          இதுகுறித்து, "இக்னோ" சென்னை மண்டல இயக்குனர் அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பல்கலையில் வழங்கப்படும் பொருளாதாரம், சமூகவியல், பொது நிர்வாகம், அரசியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

          இதில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பங்களை, "ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், 407, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35" என்ற முகவரியில் உள்ள, சென்னை மண்டல அலுவலகத்திலும், வேளச்சேரி குருநானக், திருநின்றவூர் ஜெயா கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிகளில் உள்ள பயிற்சி மையங்களில் பெறலாம்.

         விண்ணப்ப விலை, 200 ரூபாய்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அபாரத தொகை, 500 ரூபாயுடன், ஜூலை, 31ம் தேதி வரையும் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2431 2766, 2431 2979 என்ற எண்களில் தகவல்களை பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலை கல்லூரிகளில் விண்ணப்பங்களை விட சிபாரிசு கடிதங்கள் அதிகரிப்பு

          கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர்களின் விண்ணப்பங்களை விட, அரசியல் கட்சியினரின் சிபாரிசு கடிதங்கள் குவிந்து உள்ளதால், கல்லூரி முதல்வர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

          தமிழகத்தில், 63 அரசு கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் முடிந்து, தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

           மாணவர்களும், தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்து, கலந்தாய்விற்காக காத்திருக்கின்றனர். பெற்றோரும், தங்களின் பிள்ளைகளை, நல்ல கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், என, பல்வேறு தரப்பினரை நாடி செல்கின்றனர்.

          எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள், அமைச்சர்கள் என, பல தரப்பினரின் சிபாரிசு கடிதங்களுடன், கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட செயலர்கள், வட்ட செயலர்கள், என, பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து, குறிப்பிட்ட மாணவருக்கு, இடம் கொடுக்குமாறும் கல்லூரி முதல்வர்களிடம் சிபாரிசு செய்கின்றனர்.

          இந்தாண்டு, மாணவர்களின் விண்ணப்பங்களை விட, சிபாரிசு கடிதங்கள் அதிகளவில் குவிந்து உள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:

         கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கு, சிபாரிசுக்கு வந்துள்ள கடிதங்களின் எண்ணிக்கை அதிகம். நாங்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல், அரசியல் கட்சியினர் தரும் சிபாரிசு கடிதங்களை வாங்கி வைப்போம். பெரும்பாலும், அவை குப்பை தொட்டிக்கே செல்கின்றன.

           சமீபத்தில் குறிப்பிட்ட மாணவருக்கு, இடம் கொடுக்க கூறி, எம்.பி., ஒருவர், கல்லூரிக்கு வந்தார். உடனே, நாங்கள் தரவரிசை பட்டியலை காண்பித்ததுடன், மாணவர் சேர்க்கை விதிமுறைகளையும் தெரிவித்தோம். சரியான முறையில், மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர், என, கூறி விட்டு அவர் கிளம்பினார். இவ்வாறு பல சம்பவங்கள், தினமும், கல்லூரிகளில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

           இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி கூறியதாவது: அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்து, கவுன்சிலிங் வராத மாணவர்களின் இடங்கள், இடம் கிடைத்தும், சேராத மாணவர்களின் இடங்களும், கடைசி நேரங்களில், காலியாக இருக்கும். இதுபோல, கலை கல்லூரிகளில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டாலும், பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் பட்சத்தில், கலை கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறுகின்றனர்.

           இவ்வாறு காலியாகும் இடங்கள், "வாரன்ட் அட்மிஷன்" என்ற பெயரில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், கடைசி நேரத்தில் நிரப்பப்படுகின்றன. இந்த காலி இடங்களை, சில கல்லூரி முதல்வர்கள் மட்டுமே விதிமுறைகளை பின்பற்றி நிரப்புகின்றனர். பெரும்பாலானோர், இந்த இடங்களை, சிபாரிசு கடிதங்களின் அடிப்படையில் நிரப்பி கொள்கின்றனர்.

          அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை, மாவட்ட செயலர்கள், வட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், அமைச்சர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இடங்களை ஒதுக்கி, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றனர்.இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.

பள்ளிக்கல்வி - சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில், முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி 17.6.2013 முதல் 19.6.2013 வரை நடைபெறவுள்ளது
சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லதுhttp://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்தத

No comments:

Post a Comment