Thursday, June 27, 2013

அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ஊக்க ஊதியத்திற்க்கு எம்.பில்  MAY 2007  தேர்வு அட்டவணை

 நன்றி .தாமோதரன் ,தமிழ் ஆசிரியர்

CLICK TO DOWNLOAD   page  1
CLICK TO DOWNLOAD  page2


தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

          நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

           மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

          ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

               www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

              இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு

          இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

             இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''

           ''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். 
 
          பல நாடுகளை சேர்ந்த பல ஆசிரியர்களை நான் பார்த்துவிட்டேன். பலர் ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக, வேலையாக தான் பார்க்கிறார்கள். சம்பளத்திற்கான‌ பணி அது, அவ்வளவே. ஒரு மருத்துவரை போல, வழக்கறிஞரை போல, நான் ஒரு ஆசிரியர் என்றே வாழ்கிறார்கள்.

               எவ்வளவு பெரிய தவறான கண்ணோட்டம் அது. நாளைய சமுதாயத்தையே அன்பும் அறிவும் கலந்து கட்டும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதை உணராமலேயே பலர் இயங்குகிறார்கள். பல நாடுகளில் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர கொடுக்கப் படுவதில்லை. ஆசிரியர்கள் பலர் வறுமையில் வாடுகிறார்கள்.

             குழந்தைகளின் வாழ்க்கைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆசிரியரும் முக்கியம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஆசியர்கள் இல்லை. 114 நாடுகளில் இந்த கவலை அதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் 1,815 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தான் இருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 21% ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள்''

-பான் கி மூன் (ஐ.நா பொது செயலாளர்)

பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை

பிளஸ்–1 வகுப்புகள்

          தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

           பிளஸ்–2 படிப்பில் உள்ள மதிப்பெண்தான் உயர்கல்வியையும், அதைத் தொடர்ந்து வாழ்க்கைத்தரத்தையும் நிர்ணயிக்கிறது. எனவே பிளஸ்–2 படிப்புக்கு அடித்தளமாக அமைவது பிளஸ்–1 வகுப்பு.

          இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகராஜன் ஏற்பாட்டில் நன்னெறி பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

          இதில் புதிதாக சேர்ந்த பிளஸ்–1 மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இதே பள்ளியில் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்க பணியில் இருப்பவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

டாக்டர் மெலித்தா கிளாடி

           அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் டாக்டர் மெலித்தா கிளாடி, அவரது தங்கை என்ஜினீயர் ஏஞ்சலின் ஆகியோர். அவர்கள் இருவரும் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள். அதுமட்டுமல்ல இவர்களின் தங்கை என்ஜினீயர் தபிதாவும் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிதான்.

டாக்டர் மெலித்தா கிளாடி மாணவிகள் மத்தியில் பேசியதாவது:–

           நான் இதே பள்ளியில் படித்தேன். எனது அம்மா தமிழ் ஆசிரியை. தந்தை சரத்குமார் டெலிபோன் அலுவலக அதிகாரியாக இருந்தார். வீடு அருகே இருந்ததாலும் அரசு பள்ளியில் படித்து சாதனை படைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் சொன்னார்கள். அதன்படி நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும், பிளஸ்–2 தேர்விலும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன்.

           இந்த மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவ–மாணவிகள் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்குதான் தொடக்ககல்வியை முடித்துள்ளார்.

           மாணவிகளே இந்த பள்ளியில் தகுதியான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் கற்பிக்கும் பாடங்களை வகுப்பறையிலேயே நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். சந்தேகம் இருந்தால் அப்போதே கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும். வீட்டுக்கு போய் நன்றாக படிக்கவேண்டும்.

         ஆரோக்கியமாக இருந்தால்தான் நோய் வராது. நன்றாக படிக்கவும் முடியும். நான் நன்றாக படித்ததால் தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும். எம்.டி. படிப்பை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் படித்து இன்று கிளினிக் நடத்தி வருகிறேன்.

எனவே மாணவிகளே சிரமப்பட்டு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

இவ்வாறு டாக்டர் மெலித்தா கிளாடி பேசினார்.

ஆசிரியை திலகவதி பேசியதாவது:–

தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்

             நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறேன். மாணவிகளே உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போது சாலை விதிகளை கடைபிடித்து போக்குவரத்தை மட்டும் மனதில் கொள்ளுங்கள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

             படிக்கும்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கவனத்தை எந்த நேரத்திலும் சிதறவிடாதீர்கள். கவனச்சிதைவுதான் நமது லட்சியத்தை அடையவிடாமல் தடுக்கும். நீங்கள் தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.

இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.

No comments:

Post a Comment