TET - 15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது.
ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.
பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு
உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 58 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.
உ.பி.யில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக இருந்தது. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 8ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும்.
இந்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளன. இலவச கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். உ.பி.யில் இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் கட்டாயக்கல்வி சட்டத்தை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Patta and Chitta, adangal documents verification through online… ( For Tamilnadu )
Tamil Nadu Government has provided electronic services through online to view and verify your patta and chitta extract.. This online procedure is very easy to handle with some needful information’s…
After submission of these information’s, you will get detailed information of the respective land…
You just click the link given below and you will get the webpage of "Land Records e-Services"…
Tamil Version : http://edistrict.tn.gov.in/
English Version : http://edistrict.tn.gov.in/ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
List of Indian Prime Ministers (1947-2012)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
9 மற்றும் 10ம் வகுப்பு நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10 முதல் 30வரை பயிற்சி - Each Subject 4 Days Only
தமிழகத்தில் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 24ம் தேதி ஆரம்பமாகிறது.தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ சார்பில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில் முதற்கட்டமாக சென்னையில் கணிதம், திருச்சியில் ஆங்கிலம், கோவையில் அறிவியல், மதுரையில் சமூக அறிவியல், தஞ்சாவூரில் தமிழ் பாட முதன்மை கருத்தாளர்களுக்கு 24 மற்றும் 25ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 20 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை தொடர்ந்து 26 மற்றும் 27ம் தேதிகளில் கருத்தாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பின்னர் ஜூலை மாதம் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் இப்பயிற்சிக்காக 20 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் சுமார் 1,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாட வாரியாக பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட அலுவலர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்ப குருக்கள், செல்வநாயகம் மற்றும் ஆறுமுகராஜன் செய்துள்ளனர். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டி.இ.டி., தேர்வில் நுண்ணறிவை சோதிக்கும் வினாக்கள்
"ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள் நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில் நிபுணர்கள் பேசினர்.
வரும் ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி., தேர்வு) இலவச பயிற்சி முகாம், தினமலர் நாளிதழ் சார்பில், மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நேற்று நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1க்கு, காலை அமர்விலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 க்கு, மாலை அமர்விலும் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
அவர்கள் பேசியதாவது: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் (சூழ்நிலையியல், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், குடிமையியல்): இது போட்டித் தேர்வல்ல. தகுதித் தேர்வு. இடைநிலை ஆசிரியர்கள் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்துவர் என்றாலும், 6 முதல் 10ம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும். வினாக்கள் நேரடியாக இல்லாமல், உங்கள் நுண்ணறிவை சோதிப்பதாக, பகுப்பாய்வு செய்து, விடையளிப்பதாக இருக்கும். கணிதத்தில் அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணியல், சராசரி, அல்ஜிப்ரா, சூத்திரங்கள், லாபநஷ்ட கணக்கு, வட்டிவீதம், வடிவியல், புள்ளியியல் முக்கியமானவை. சூழ்நிலையியலில் விண்வெளி, தேசிய சின்னங்கள், நீராதாரங்கள், வனம், சூரியகுடும்பம், நோய்கள் முக்கியமானவை. அறிவியலில் பெரும்பாலும், ஒருவிஷயத்தின் சிறப்பம்சத்தை (ஸ்பெஷாலிட்டி) மையமாக வைத்து, வினாக்கள் கேட்கப்படுகின்றன. வரலாறு பாடத்தில், வெளிநாட்டு பயணிகள், இந்திய அரசியலமைப்பு, குடிமையியலில் உள்ளாட்சி மன்றங்கள் போன்றவற்றை அறிய வேண்டும். கடந்தாண்டு காலியிடங்களைவிட, குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றதால், 90 மதிப்பெண் எடுத்தவருக்கும் வேலை கிடைத்தது. இம்முறை காலியிடங்களுக்கும், தேர்வு பெறுவோருக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் என்பதால், அதிக மதிப்பெண் பெற்றால் தான், அரசு பணி வாய்ப்பு கிடைக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாசலபதி (ஆங்கிலம்): தமிழை போன்றதல்ல ஆங்கிலம். ஆங்கிலம் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். படிக்க படிக்கத்தான் புரியும். பள்ளியில் மாணவர் தேர்ச்சி பெறும் வகையில், வினாக்கள் இருக்கும். |
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Monday, June 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment