Friday, June 28, 2013

தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.


பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பெனின் தேவகுமார் தமிழக கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு விவரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பணிவரன் முறை செய்யப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற பாடங்களுக்கு 7 பாடவேளை இருப்பதுபோல், சமூக அறிவியல் பாடத்துக்கும் 7 பாடவேளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


மொபைல் பாங்கிங் பற்றி சில டிப்ஸ்

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்துள்ளது. மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம்.

ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.


உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.



தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.


`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல் பாங்கிங்’ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
(குறிப்பு: நல்ல அறிமுகமான, நம்பகமான நண்பரிடம் இதன் விழி முறைகளை கற்று பின்பு பயன்படுத்துவது, தவறுகள ஏற்படாமல் இருக்க உதவும்.)

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) இணைய வழியில் விவரங்களை தொகுக்க / பராமரிக்க 03.07.2013 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

PG TRB Hall Ticket- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

              இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில...

*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.


*  சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்.

*  தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும்.

*  தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

*  தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும்.

*  முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

*  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இதர பயன்களையும் அளிக்கப் போகும் இந்த தகுதித் தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

*  6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

*  ஒவ்வொரு பாடத்தையும் வாசித்து விட்டு அதில் 30/30, 60/60 எடுத்துவிடுவேன் என்ற நிலையை அடைந்த பிறகு அடுத்த பாடத்திற்கு செல்வது மிகவும் பயனளிக்கும்.

இவ்வாறு உங்களின் திட்டமிடுதல் இருந்தால் பிற பாடங்களை படிக்க முடியாமல் போனாலும் கூட அதிலிருந்து எப்படியும் 12/30 மதிப்பெண்களை பெற்று விடலாம்.

அதாவது 30+30+12+12+12=96 தகுதி மதிப்பெண்களை பெறுவது மிகவும் எளிது.
*  தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  சைக்காலஜிக்கென்று கண்டதையெல்லாம் வாங்கி படிப்பதைவிட பேராசியர்.கி.நாகராஜன் அவர்களால் எழுதப்பட்ட கல்வி உளவியல் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.

*  தமிழ், கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பின்னர் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

*  எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

*  ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த நிலைக்கு தயாராகுங்கள்.

No comments:

Post a Comment