Friday, June 14, 2013

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு
பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ல் தொடக்கம்
பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
         பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
        ஜூன் 20-க்குள் புத்தகங்கள்: பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாக பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
          வரும் 20-ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான இலவசப் புத்தகங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.
         அதேபோல், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும். மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
               பள்ளிகள் தொடங்கும் தினத்தில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிடும்.
          அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்தவுடன், ஜூலை 15-ஆம் தேதி முதல் சில்லறை விற்பனையில் புத்தகங்கள் கிடைக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகிறவர்களும் பாடப் புத்தகங்களை வாங்கிச் செல்வதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
           1 முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் சில்லறை விற்பனையில் கிடைக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
3 ஆம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க இன்று (14.06.2013) கடைசி நாள்
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 
 
மிழகத்தில் 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அரசு முடிவு செய்தது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் கடந்த 31ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஆரம்பமானது. 

விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க இன்று (14ம் தேதி) கடைசி நாளாகும். இதனால் கடந்த ஒரு சில நாட்களாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முதுகலை பட்டதாரிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையானது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி) கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வுக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஜூன் 23ல் இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு
இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) மற்றும் பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) இணைந்து நடத்தும், தேசிய தகுதித் தேர்வு, நாடு முழுவதும், 26 மையங்களில் நடக்க உள்ளது.

தேர்வில், 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, காரைக்குடி மையங்களில் நடக்கிறது. காரைக்குடி மையத்தில் 6,400 பேர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட், தபாலில் அனுப்பப்படாது. www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

ஹால் டிக்கெட்டில், போட்டோ இல்லை எனில், தேர்வு அன்று, இரண்டு பாஸ்போர்ட் போட்டோ மற்றும் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றை, கொண்டு வர வேண்டும். 

காலை 9 முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் தேர்வு; மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை, வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல் தேர்வும் நடக்கும். 

தேர்வு மையத்தில், ஹால்டிக்கெட் நகல் வழங்கப்படாது. தேர்வு மையத்திற்கு மாணவர்கள், 30 நிமிடத்திற்கு முன், வரவேண்டும். விபரங்களுக்கு, 04565- 241 400, 94438 50679, 94436 09776 என்ற எண்கள்; swamy23@rediffmail.comnpswamy@cecrires.in என்ற , மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்" என சிக்ரி விஞ்ஞானி மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரிவு வாரியாக எம்.பி.பி.எஸ். இடங்கள்
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 322 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 1823 இடங்கள், வரும், 19ம் தேதி துவங்கும் பொது கலந்தாய்வு மூலம், நிரப்பப்பட உள்ளன. 
 
இவை தவிர, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்களும், முதல்கட்ட கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்களும், கலந்தாய்வில் நிரப்பட உள்ளன. 

தனியார் கல்லூரிகளில் பிரிவு வாரியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment