வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அவர் அண்மையில் பொறுப்பேற்றார். பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய படிப்புகள் குறித்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு சமுதாயக் கல்லூரி வீதம் மொத்தம் 32 சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய 5 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் தொழிற்பயிற்சி தொடர்பான படிப்புகளை நடத்துவதோடு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும். அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 2 மையங்கள் திருச்சி, கோவையில் தொடங்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்: எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கேமராமேன் உள்ளிட்ட தொழில்களில் முறையான படிப்புகள் இன்றி பல தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான சிறப்பு சான்றிதழ் படிப்புகளை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும், பணியிலிருந்துகொண்டே படிப்பவர்களுக்கும் வழங்கப்படும் மேற்படிப்பை சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்று உறுதியேற்றுள்ளோம். திறந்தநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றிருந்தால் அரசுப் பணிக்கு அந்தப் படிப்பு தகுதியில்லாத நிலை உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறையினருடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதேபோல், இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பைத் தொடங்குவது குறித்தும் உயர் கல்வித் துறையோடு ஆலோசனை நடத்தப்படும். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இப்போது 4 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என 110 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துப் படிப்புகளுக்கான புத்தகங்களும் சி.டி. வடிவில் வழங்கப்படும் என்றார் அவர்.
|
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்
|
"ஸ்மார்ட் கார்டு" தகவல்கள் பதிவேற்றும் பணி - சர்வர் பழுதால் தாமதம்
மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள் பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால், தேர்ச்சி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்மார்ட் கார்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், பெற்றோர் பெயர், வருமானம், ரத்த வகை, சகோதர, சகோதரிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இத்தகவல்களை, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளத்தில், பதிவேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான, அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டு உள்ளது. அவை பல இடங்களில் செயல்படுவது இல்லை. மேலும், தேர்தல் நேரங்களில், வாக்காளர்களை கண்காணிக்க, பள்ளி மடிக்கணினிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
அப்போது அவற்றின், செயலாக்க மென்பொருள் அழிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பின் அவைஅப்படியே பள்ளிகளுக்குஅனுப்பப்படுகின்றன. பல பள்ளிகளில் கணினி இருந்தாலும், இணைய வசதி இருப்பதுஇல்லை. கூடுதல் கட்டணத்தில், டேட்டாகார்டு மூலமாக, சில இடங்களில் இணைய வசதிகளை ஏற்படுத்தி பள்ளி சம்பந்தப்பட்ட பணிகளைமேற்கொள்கின்றனர். கணினி, இணையம் உள்ளிட்டவசதிகள் உள்ள, பள்ளிகளில் மின்தடை நேரங்களில், கணினியை பயன்படுத்த, இன்வெர்ட்டர் இல்லை. இந்நிலையில் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், தனியார் இணைய மையங்களில், பள்ளியின் கணினி பணிகளை மேற்கொள்கின்றனர். தனியார் கல்லூரிகளில், பள்ளிகளில், இதுபோன்ற கணினி வசதி குறைபாட்டால், திருத்தணி மற்றும் பொன்னேரியில் உள்ள, தனியார் கல்லூரி வளாகங்களில், ஸ்மார்ட் கார்டு தகவல் பதிவேற்றும் பணி, பள்ளி கணினி ஆசிரியர்களை கொண்டு மேற்கொள்ள ப்படுகிறது.
செய்முறை தேர்வு பாதிப்பு நேற்று முன்தினம் முதல், நடந்து வரும் இந்த பணியில், திருத்தணி கல்லூரியில் - 57 பள்ளி கணினி ஆசிரியர்களும், பொன்னேரி கல்லூரியில் - 83 பள்ளி கணினி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வரும் ஜன., 31ம் தேதிக்குள் பணியை முடிக்க உத்தரவு இடப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம் (பிப்ரவரி) செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், கணினிஆசிரியர்கள், தகவல் பதிவேற்றும்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார் படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிடவிரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சில மாதங்களாக மாணவர்களின் ஜாதி சான்றிதழ், ஆசிரியர்கள் விவரம், விலையில்லா மடிக்கணினி போன்ற தகவல்கள், கணினியில் பதிவேற்றும் பணியை செய்தோம் என்றார். மேலும் தற்போது தேர்வு நேரத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்யும்பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.இதனால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியவில்லை. தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது. என்றார்.
வேறு வழி இல்லை இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு குறித்த பதிவேற்றப் பணி, ஜன., 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவு இட்டு உள்ளது. அதன்படி, இப்பணிகள் நடந்து வருகிறன. தற்போது, இப்பணிகளை செய்யாவிட்டால், பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுதேர்வு, விடைத்தாள் திருத்தும் பணி என, தொடர்ச்சியாக பணி உள்ளது. எனவே, ஒரு வாரத்திற்குள் இப்பணியை விரைந்து முடித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சர்வர் பழுதால் பணி தாமதம் மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றும் பணி முழுவதும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் நாளொன்றுக்கு, 100 பேரின், குறிப்புகளை பதிவேற்றம் செய்யவேண்டும். ஆனால், சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால், பதிவேற்றும் பணி முற்றிலும்முடங்கியது. இதனால், ஒரு நாளுக்கு, 40 பேரின் விவரங்கள் தான் பதியமுடிகிறது. இதனால், வரும், 31ம் தேதிக்குள், பணி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது என, ஒரு கணினி ஆசிரியர் தெரிவித்தார்.
|
காமராஜர் பல்கலை வழங்கும் தொலைநிலை பி.எட்., படிப்பு
காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பானது, NCTE(National Council for Teacher Education) மற்றும் DEC(Distance Education Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பின்வருமாறு,
* மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
* , பி.லிட்., ஆங்கிலம், கணிதம், அப்ளைடு கணிதம், இயற்பியல், ஜியோ-பிசிக்ஸ், பயோ-பிசிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயோடெக்னாலஜி, உயிரியல், வரலாறு, புவியியல், அப்ளைடு புவியியல், கணிப்பொறி அறிவியல், ஐடி போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* முதுநிலையில், ஹோம் சயின்ஸ், பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று, ஆசிரியர்களாய் இருப்பவர்கள்.
* 10, 12 மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பை முறையாக முடித்திருக்க வேண்டும்.
* 2 வருட முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில், பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
விண்ணப்பம் மற்றும் விபரக் கையேட்டை நேரில் பெற ரூ.800ம், டிடி மூலமாக பெற ரூ.850ம் செலுத்த வேண்டும்.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில், நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பம், ஜனவரி 24ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெற கடைசி நாள் பிப்ரவரி 25. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மார்ச் 24.
இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.mkudde.org என்ற வலைத்தளம் செல்க.
|
தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு
|
|
தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
தேசிய வாக்காளர் தினம் வரும் 25ம் தேதி நாடு முழுவதும் கொண்டப்படுகிறது. இந்த நாளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வரும் 25ம் தேதி மிலாடி நபி வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றையை தினம் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் பாதிக்கப்படும் என கருதப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறை செயலாளர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தினத்தில் மிலாடி நபி வருவதால் அன்றை தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் வாக்குசாவடி உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் திறந்து இருக்க வேண்டும். அன்றையை தினத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும். தேசிய வாக்காளர் தினம் தொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். இதை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பாலியல் புகாரில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் எதிர்த்து மாணவிகள் மறியல்
பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் 1000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் 300 மாணவிகள் படிக்கின்றனர். வேதியியல், இயற்பியல் பாட ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடு ப்பதாக புகார் எழுந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் செங்கல் பட்டு கல்வி மாவட்ட அலுவலக அதிகாரிகள் விசாரித்து புகழேந்தி, நாகராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர். இந்நிலையில், நேற்று காலை அனைத்து மாணவி களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர். அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து 1000 மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வெளியே வந்த மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளியின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக நகர செயலாளர் குமாரசாமி, நகர பொருளாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிமுகவினரும் இதில் பங்கேற்றனர். செங்கல்பட்டு டிஎஸ்பி மூவேந்தன், மாவட்ட கல்வி அலுவலர் சகுந்தலா, தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் வந்து பேசினர். 2 ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு களை திரும்பப் பெறும்படி மாணவிகள் கோஷமிட்டு, மாவட்ட கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசியும் அவர்கள் சமாதானம் அடையாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ அனகை முருகேசன், ஆர்டிஓ செல்லப்பா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் சுமார் 5 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் கொடுத்த மாணவிகள் 7 பேரில் 2 பேரிடம் சமூக நலத்துறை அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழு சம்பவம் குறித்து விசாரித்தது. அப்போது, ஒரு ஆசிரியையின் தூண்டுதலின் பேரில், இதுபோன்று புகார் தெரிவித்ததாக அந்த மாணவிகள் அழுது கொண்டே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூண்டியதாக கூறப்படும் ஆசிரியை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள், மாணவிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.
|
ஜன.23: இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 116 வது பிறந்த நாள் இன்று. இதை ஒட்டி நேதாஜியின் மீது பற்றுள்ளவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்திய தேசிய காங்கிரஸில் அங்கம் வகித்த நேதாஜி பின்னாளில் ராணுவ அமைப்பின் மூலம் பிரிட்டிஷ் அரசைத் தோற்கடித்து நாட்டை மீட்க முயன்றார். காங்கிரஸ் தலைவர் பதவி இல்லாமலே என்னால் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர முடியும் என்றார் நேதாஜி. சுவாமி விவேகானந்தரின் வேதவாக்கைத் தமது வாழ்நாளில் கடைப்பிடித்தவர் நேதாஜி. 1897ல் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். மெட்ரிக் குலேஷன் தேர்வில், மாநிலத்திலேயே இரண்டாவது மாணவனாகத் தேறினார். பின், தந்தையின் ஆசைக்காக லண்டனில் ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸானார். ஆங்கிலேயரிடம் அடிமை வேலை பார்க்க விரும்பாமல், ஐ.சி.எஸ். பதவியைத் தூக்கி எறிந்த முதல் இந்தியர் நேதாஜிதான். காங்கிரஸின் மிதவாதக் கொள்கைகள் பிடிக்காமல், தீவிர கருத்து உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ‘ஸ்வராஜ் கட்சி’ தொடங்கியபோது, அதை வளர்ப்பதற்காக ‘ஃபார்வர்ட்’ என்ற நாளிதழை தொடங்கினார் நேதாஜி. இந்தக் கட்சி கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெறவே, 25 வயதில் நகரசபை கமிஷனர் ஆனார் சுபாஷ். மக்களிடையே சுபாஷ் செல்வாக்கு உயர்வதை விரும்பாத ஆங்கிலேய அரசு, காரணமின்றி அவரை அடிக்கடி சிறையில் தள்ளியது. அவரது உடல்நிலை மிக மோசமாகவே, இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது. 1937&ம் வருடம் தடை நீங்கிய பின்னரே சுபாஷ் இந்தியா வந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆனார். மீண்டும் சிறைப்பட்டபோதுதான், இரண்டாம் உலகப்போரை இந்திய விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தேசத்தில், சிறையில் இருந்து தப்பி, ராணுவப் போருக்குத் தயாரானார். 1944-ல் இந்திய எல்லையில் சுமார் 2 லட்சம் ஜப்பானியரும், இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 6,000 இந்தியர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டார்கள். எதிர்பாராத பெரும் மழையால், சேறும் சகதியுமாக இருந்தது போர்க்களம். ஆங்கிலேயர்கள் நவீன கருவிகளுடன் போரிட்டுக்கொண்டு இருக்க வயர்லெஸ், ஜீப், மோட்டார் சைக்கிள், டெலஸ்கோப் போன்ற எந்த சாதனங்களும் இல்லாமல், உணவும், மருத்துவ வசதிகளும் இல்லாமல் இந்தியப் படை போரிட்டது. அமெரிக்க விமானப் படை ஜப்பானியர்களை மொத்தமாகக் கொன்று போட்டது. உடனே, ஜப்பான் பிரதமர் போரை நிறுத்திவிட்டு, மிச்சமுள்ள தன் வீரர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டார் நேதாஜி. அவரது வீரமும் நெஞ்சின் ஈரமும் என்றும் நினைவு கூரத்தக்கது. மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்றே பின்னடைவைச் சந்தித்தாலும், நம்பிக்கையோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினார். இன்று... இந்தியரின் மனதில் நீங்கா இடம்பெற்று இன்றளவும் இருக்கிறார்! ஜெய் ஹிந்த்!
|
சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?- Dinamalar
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.
இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில், "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.
தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.
|
திறந்தநிலை பல்கலையில் படித்தால் சிக்கலா?
"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: தற்போது, திறந்தநிலை பல்கலையில், 110 வகையான கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இவை இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்துறையினரின் தேவையை கருத்தில் கொண்டும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு சமுதாய கல்லூரியை துவக்கி, ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், சமுதாய கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"வீடியோ கான்பரன்சிங்" வழியில், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தநிலை பல்கலையில் படித்தால், அரசு வேலைவாய்ப்புகளுக்கு தகுதியில்லை என்று கூறவில்லை. எனினும், 107வது அரசாணை, ஏற்கனவே படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த அரசாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்துவேன்.
எம்.எட்., படிப்பை மீண்டும் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு என்ற வரிசைக்கு மாறாக, பள்ளிப் படிப்பை படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பில் சேர்ந்து, பட்டங்களை பெற்ற பலர், அரசுப் பணிகளில் உள்ளனர்.
அதேபோல், படித்த பலர், அரசு வேலையை எதிர்பார்த்தும் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில், முறையான வரிசையில் படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பு படித்தால், அது, அரசு பணிக்கு தகுதியானதாக கருதக் கூடாது என, தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இதை பின்பற்றி, 107வது அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை அமல்படுத்தினால், பல ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் வரும். தற்போது, இந்த அரசாணையை, திரும்பப் பெறுவது தொடர்பாக, முதல்வரிடம் வலியுறுத்துவேன் என, திறந்தவெளி பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியுள்ளார்.
|
|
250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை
அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்தவர்களுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.
இவ்வகையில், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, முதல்வர் அனுமதி வழங்கி விட்டதாக, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை: பிப்ரவரியில் சிறப்பு முகாம்
அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு, மாவட்டத்திற்கு, ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின், மாணவ, மாணவியருக்கு, பொது சுகாதார துறை, பல் பரிசோதனை முகாம் நடத்தியது. அதில், 40 சதவீத மாணவர்களுக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை, பொது சுகாதார துறை, அடுத்த மாதம் துவக்க உள்ளது.
இதுகுறித்து, இத்துறையின் கல்வி பிரிவு இணை இயக்குனர் வடிவேலன் கூறியதாவது: இனிப்பு பண்டங்களை அதிகளவில் உட்கொள்வது; முறையாக பல் துலக்காதது போன்ற காரணங்களால், சிறுவர்களுக்கு, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறு தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
குழந்தைகள் பிறந்ததில் இருந்து, 13 வயது வரை, பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும். இந்த வயதிற்குள், பல் சம்பந்தமான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், நிரந்தர பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். இதை கருத்தில் கொண்டு, மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பல் பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதில், பல் சொத்தை, பற்குழி, சீரற்ற பற்கள், உடைந்த பற்கள், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட, 16 வகையான, பல் நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், பல் மருத்துவர், உதவி பல் மருத்துவர், செவிலியர் அடங்கிய, 5 பேர் கொண்ட மருத்துவக் குழு சென்று முகாமை நடத்தும்.
பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கி, நான்கு மாதங்கள், முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு வடிவேலன் கூறினார்.
|
இலவச மடிக்கணினியில் வகுப்பு நடத்த புதிய திட்டம்
அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு, கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அளிக்கும் இலவச மடிக்கணினி மூலம், வகுப்பு நடத்தும் வகையில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு, கணினி குறித்த அறிவை வளர்க்கும் வகையில், கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆறு மாத பயிற்சி, கணினி குறித்த பொது அறிவு, மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்டவை கற்று தரப்பட உள்ளன. முன்னணி, கணினி நிறுவனங்கள், இந்தப் பயிற்சியை அளிக்கின்றன.
அரசு கல்லூரிகளில், இலவச மடிக் கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை சரியாக பயன்படுத்தும் வகையில், கல்லூரி ஆசிரியர்களுக்கு மென்பொருள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பேராசிரியர்கள், தங்களின் பாடங்களுக்கு, அவர்களே மென்பொருளை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம், கணினி உதவியுடன், மாணவர்களுக்கு பாடங்களை கற்று தரவும் முடியும்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது: ஒரே முறையில் மாணவர்கள் கல்வி கற்பதால், விரைவில் சலித்துவிடுகிறது. தற்போது அறிமுகப்படும் புதிய முறையால், "ஸ்மாட் கிளாஸ்" முறை உருவாகிறது.
மாணவர்கள் மடிக்கணினியை கல்லூரிகளில் பயன்படுத்த முடியும். திட்டத்துக்கான செலவு, ஆசிரியர்களுக்கு, மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்தல் போன்றவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். இவ்வாறு சிந்தியா பாண்டியன் கூறினார்.
|
வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சியளிக்க 118 மையங்கள்
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4,615 வி.ஏ.ஓ.,க்களுக்கு, பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 118 பயிற்சி மையங்களை அமைக்கப்பட உள்ளன. இதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பணியாற்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,)க்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில், பணித்திறன் மேம்பாடு அடைந்திருக்க வேண்டும். இதற்கு, அவர்களுக்கு தேவையான, கிராம நிர்வாக பயிற்சி மற்றும் நில அளவை தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.
இதை கருத்தில் கொண்டு, சமீபத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட, 4,615 வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், 118 பயிற்சி மையங்கள் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த மையங்களுக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் இதர செலவினங்களுருக்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
பேரிடர் குறித்து எச்சரிக்க மொபைல் போனில் வரைபடம்
"பேரிடர்கள் குறித்த தகவல்களை, மக்களுக்கு முன்கூட்டி தெரிவிக்க, மொபைல் போனில் வரைபடம் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்,'' என, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியின், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி., சென்னை சார்பில், பேரிடர் மேலாண்மையில் முன்னேற்றம் காண்பது குறித்த, நான்கு நாள் கருத்தரங்கம், ஐ.ஐ.டி., வளாகத்தில் துவங்கியது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், கனமழை, வெள்ளம், வறட்சி காட்டு தீ போன்ற பேரிடர்களால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இக்கருத்தரங்கில், விஞ்ஞானிகள் விரிவாக விவாதிக்கின்றனர்.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், நெம்மேலியில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருமான, கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஆஸ்திரேலியாவில், காட்டு தீ போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது, அதுகுறித்து, முன்கூட்டியே அப்பகுதி மக்களின் மொபைல் போன்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், எந்த பகுதியில், காட்டு தீ பரவி வருகிறது. அங்கிருந்து தப்பிக்க மக்கள், எப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்த, வரைப்படம் மொபைல்போனில் அனுப்பப்படுகிறது.
இதன் மூலம், பேரிடர்களில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது. அது போல, இந்தியாவிலும், சுனாமி, கனமழை, வெள்ளம் உள்ளிட்ட, பேரிடர்கள் எந்த பகுதியில் ஏற்படுகிறது, எங்கு அவசர உதவிகள் கிடைக்கிறது உள்ளிட்டவை குறித்த வரைபடம், மொபைல் போனில் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்.
டில்லி பல்கலையிலும், மும்பை, டாடா சமூக அறிவியல் மையத்தில் மட்டுமே, பேரிடர் மேலாண்மை குறித்த பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த, விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், பேரிடர் மேலாண்மை குறித்த, புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும். சுனாமிக்கு பின், "இன்காஸ்" தொழில்நுட்பம் மூலம், சுனாமி குறித்து முன்கூட்டி அறியும் வசதி, கடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
|
சி.ஏ., இறுதி தேர்வு: மும்பை வாழ் தமிழ் மாணவி முதலிடம்
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ள
|