Thursday, January 24, 2013


General Simple Maths Material for 6-10 Classes
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் என்று முதல் வழங்கப்படும் ?


          பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் என்று முதல் வழங்கப்படும் ? என்ற குழப்பம் ஆசிரியர்களிடையே நீடித்து வருகிறது.



          இந்த ஊக்க ஊதியம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் வழங்கப்படுமா? அல்லது அரசானை வெளியிடப்பட்ட 18.01.2013 அன்று முதல் கணக்கிட்டு வழங்கப்படுமா என்ற குழப்பம் ஆசிரியர்களிடையே நீடித்து வருகிறது.

         DA உயர்த்தி வழங்கப்படும் போது முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும். உதாரணமாக 01.07.2012 முதல் DA உயர்த்தி வழங்கப்படும் என தெளிவாக அறிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது அரசாணையில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

           எனவே இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது " கல்வி துறை மூலம் அரசாணை வழங்கப்படும்போது அதை தொடர்ந்து பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்ககல்வி இயக்குனர் ஆணை வழங்குவார். எனவே இது குறித்து விரைவில் இயக்குனரகம் மூலம் ஆணை அல்லது தெளிவுரை வழங்கப்படலாம் " என கூறினார்.

  

10th Standard Maths Study Material




Prepared By - Mr. M. Santhosha Sabharish
B.T. Asst.,
Govt High School,
Arangal Durgam. 



10th Standard Study Material


HAJ Volunteer Service - Apply Last Date: 25.01.2013

வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும்

              தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா கூறினார்.
         தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அவர் அண்மையில் பொறுப்பேற்றார். பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டங்கள், புதிய படிப்புகள் குறித்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு சமுதாயக் கல்லூரி வீதம் மொத்தம் 32 சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

           இதில் முதல்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய 5 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் தொழிற்பயிற்சி தொடர்பான படிப்புகளை நடத்துவதோடு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும். அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 2 மையங்கள் திருச்சி, கோவையில் தொடங்கப்படுகின்றன.

              தொழிலாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்: எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கேமராமேன் உள்ளிட்ட தொழில்களில் முறையான படிப்புகள் இன்றி பல தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான சிறப்பு சான்றிதழ் படிப்புகளை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும், பணியிலிருந்துகொண்டே படிப்பவர்களுக்கும் வழங்கப்படும் மேற்படிப்பை சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்று உறுதியேற்றுள்ளோம்.

                       திறந்தநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றிருந்தால் அரசுப் பணிக்கு அந்தப் படிப்பு தகுதியில்லாத நிலை உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறையினருடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதேபோல், இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பைத் தொடங்குவது குறித்தும் உயர் கல்வித் துறையோடு ஆலோசனை நடத்தப்படும்.

               திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இப்போது 4 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என 110 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துப் படிப்புகளுக்கான புத்தகங்களும் சி.டி. வடிவில் வழங்கப்படும் என்றார் அவர்.


New TAX Calculator - Work Sheet for 2012-13.





Thanks to Mr. MANOGAR .P
VOCATIONAL TEACHER
GOVT HR SEC SCHOOL
KUNNAGAMPOONDI
T.V.MALAI DT-604501

Do you want to New Primary School Open in your Area?

Elementary Dept Temporary Post 3 months continElementary Dept Temporary Post 3 months continuation - DEE Order
பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது


          தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

          பல்வேறான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 22.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1 முதல் 12ம் வகுப்பு வரை, 13.67% சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டில், 20.3 கோடி மாணவர்களே பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

         பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பள்ளி சேர்க்கை விகிதம் 19.1% அதிகரித்துள்ளது. சேர்க்கை விகிதங்கள் இவ்வாறு இருக்க, கிராமப்புற பள்ளிகளில், ஐந்தில், ஒன்றுக்கு குடிநீர் வசதியில்லை. பத்தில், 3 பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியில்லை. ஏறக்குறைய பாதி பள்ளிகளில், விளையாட்டு மைதான வசதியில்லை.

           அதேசமயம், இவற்றில் பல சிக்கல்களும் உள்ளன. பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது என்றும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை

            அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

         பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்தவர்களுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.

             இவ்வகையில், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, முதல்வர் அனுமதி வழங்கி விட்டதாக, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

           எனவே, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.ஏ., இறுதி தேர்வு: மும்பை வாழ் தமிழ் மாணவி முதலிடம்


           சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

          தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

         மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

          மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, "கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,&'&' என, தெரிவித்துள்ளார்.

        பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.


No comments:

Post a Comment