கல்லுõரிகளில் ஆசிரியர் பணி, உதவித் தொகையுடன் பிஎச்.டி., ஆய்வு செய்வதற்கு தேசிய அளவில் "நெட்" தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டு புதிய விதிமுறைகளின்படி, டிச.,30ல் நெட் தேர்வு நடத்தப்பட்டது. புதிய விதிமுறைகளின் படி, தேர்ந்தெடுத்த பாடப் பிரிவு, வகுப்பு அடிப்படையில், முதல் 15 சதவீதத்திற்குள் வரும் மாணவர்களே தகுதி பெறுவர், என யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
நெட் தேர்வு, மூன்று தாள்களை கொண்டது. புதிய விதிமுறைகளின் படி மூன்று தாள்களிலும் கேள்விகள் அப்ஜக்ட்டிவ் வகையில் கேட்கப்பட்டது. தாள் 1ல் கேட்கப்பட்ட 60 கேள்விகளில், ஏதேனும் 50 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். தாள் 2, தாள் 3ல் கேட்கப்படும் 50, 75 கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும்.
தாள் 1ல் கேள்விகள் பொது, ஆய்வு அடிப்படையிலும், தாள் 2, 3 ல், மாணவர்கள் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவு அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு எழுதிய மூன்று தாள்களிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது பொது பிரிவினர் தாள் 1,2 ல் 40 சதவீத மதிப்பெண்களும், தாள் 3ல் 50 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர், தாள் 1,2 ல் 35 சதவீத மதிப்பெண்களும், தாள் 3ல் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் . மற்றவர்கள் தாள்1, 2ல் 35 சதவீதமும், தாள் 3ல் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், தாங்கள் தேர்ந்ததெடுத்த பாடப்பிரிவு, வகுப்பு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, முதல் 15 சதவீத இடத்திற்குள் வரும் மாணவர்களே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment