பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு 2012- 2013 .(HALF YEARLY EXAM KEYS).
| ||
TNPSC - GROUP - I SERVICES MAIN WRITTEN EXAM RESULTS RELEASED
| ||
"TET Marks Relaxation Must" - Related Full Collection of Documents
| ||
இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்கள் "டபுள் டிகிரி கோர்ஸ்" மூலம் ஒரு வருடத்தில் (பிஏ, பிகாம்) போன்ற இளங்களை பட்டம் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்ற வந்தனர். இதனால் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது.ஆனால் தற்போது தகுதித்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஒரே வருடத்தில் இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. | ||
பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கக் கூடாது - பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட 10 கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வுக்காக அரசு 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளது. அவை வருமாறு:
* பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் 31.12.2012 அன்று குறிப்பிட்ட பாடத்தில் இளங்களை பட்டச் சான்று, பிஎட் பட்டச் சான்று வைத்திருக்க வேண்டும். (குறைந்த பட்சம் புரோவிஷனல் சர்டிபிகேட்டாவது இருக்க வேண்டும்)
* வெளி மாநில சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெறாதவர்களை எந்தக் காரணம் கொண்டும் பட்டியலில் சேர்க்கக் கூடாது.
கடைசியாக பெறப்பட்ட உயர் கல்வித் துறை அரசு ஆணைப்படி பதினோராம் வகுப்புக்கு (பழைய எஸ்எஸ்எல்சி) பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து பின்னர் தொலை தூரக் கல்வி மூலம் இளங்கலை பட்டம் பெற்றவர்களை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிகிரிக்கு இணையாகக் கருதி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
* 1.1.2010 அல்லது அதற்கு பின்னர் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ஆசிரியர்கள் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட, மொழி ஆசிரியர் பதவி உயர்வை தற்காலிகமாக துறந்தவர்கள், ஏற்கனவே பட்டதாரி ஆச¤ரியர், சிறுபான்மை மொழி ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர் பட்டியலில் எந்தக் காரணத்தை கொண்டும் இடம் பெறக் கூடாது.
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1995ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்ந்த விவரங்கள் அளிக்கும் போது, அவர்கள் தேர்வு செய்யப்பட¢ட ஆண்டு, தர எண் தவறாமல் குறிப்பிட
வேண்டும்.
* ஆசிரியர்களின் பிறந்த தேதி, நியமன முறை, கடந்த 5 ஆண்டுகளில் தண்டனை ஏதும் இருந்தால் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இருந்தால் அதன் வ¤வரம் போன்றவற்றை உறுதி செய்து அளிக்க வேண்டும்.
* நகராட்சி பள்ளிகளில் 1.6.1986க்கு முன்பு நகராட்சி ஆணையரால் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுதல் கூடாது.
.
* தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழியில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால், அந்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் பாடம், மொழி வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு அனுப்ப வேண்டும்.
* தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் 1.9.92, 1.6.2006ல் முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆசிரியர்களின் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள் பணி பதிவேட்டை சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.
* சென்னை ஐகோர்ட் 14.8.2012 நாளிட்ட தீர்ப்பின்படி ஓராண்டு முறையில் இரட்டை பட்டம் பெற்றவர்கள் 1.1.2012ம் ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டதால், தற்போதைய முன்னுரிமை பட்டியலில் அவ்வாறு பயின்றவர்களின் விவரங்கள் இடம் பெறக் கூடாது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
| ||
பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின்,
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட்ட, பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்புவகுப்புகளும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வுக்கு, மாணவ, மாணவியரை தயார் செய்ய, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில், இரவு, 8:00 மணி வரை கூட, சிறப்பு வகுப்புகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. | ||
கேட் தேர்வு முடிவுகள் - 10 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்!
2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 4 பேர் 99.99% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒடிசா, உத்திரபிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தற்போது இறுதியாண்டு மாணவிகள். மொத்தம் 255 மாணவர்களும், 1,640 மாணவர்களும் 99%க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பல ஐஐஎம்.,கள், பொறியியல் சாராத மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் பாயின்டுகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன்மூலம், வகுப்பறைகளில், ஒரு நல்ல கலப்பு சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு அவை செயல்படுகின்றன.
கேட் தேர்வை, கடந்த 2012ம் ஆண்டு, அக்டோபர் 11 முதல் நவம்பர் 6 வரையிலான தேதிகளில், மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 642 பேர் எழுதினர் என்பது நினைவுகூறத்தக்கது.
| ||
இயற்கை சாயம் தயாரிப்பில் அண்ணா பல்கலை மாணவிகள் அபாரம்
ராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், சென்னை அண்ணா பல்கலை மாணவியர் சரண்யா, திவ்யா லட்சுமி, உஷா ஆகியோர் கோவை அரசு கலை கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி மேற்பார்வையில் இயற்கை சாயங்கள் தயாரிப்பு என்ற தலைப்பில் கடந்த ஒரு வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச் உள்ளிட்ட 8 சாயங்களை தூய செந்தூர் பொடி,மஞ்சள், சோத்துக்கத்தாலை, வேப்பம், மாதுளை, மாசிக்காய், ஓம விதை மற்றும் பொடி, கருந்துளசி, ராமர் துளசி உள்ளிட்ட இயற்கை தாவரங்களில் மைக்ரோ என் கேப்சுலேன் மற்றும் கிராஸ் லிங்கிங் தொழில்நுட்ப முறை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசு கலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ரவி கூறுகையில், "ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது. தற்போது அண்ணா பல்கலை எம். டெக் மாணவியர் 3 பேர் இயற்கை சாயம் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியை செய்து வருகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சாயங்கள் 15 தடவை நீரில் அலசினாலும் சாயம் போகாது மேலும் உணவு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சியை இந்த ஆராய்ச்சி உருவாக்கும். அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால், இந்த மாணவிகளால் பெரிய அளவில் செய்து சாதிக்க முடியும், &'&' என்றார்.
ஆராய்ச்சியில் மாணவிகள் கூறுகையில், "தொடர்ந்து இந்த ஆராய்ச்சிகள் 2 அல்லது 3 ஆண்டுகள் முயற்சித்தால் ரசாயண சாயங்களுக்கு மாற்றாக இயற்கை சாயங்களை பயன்படுத்த முடியும். உணவு துறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ரசாயன சாயங்கள் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவால் புற்றுநோய் உட்பட பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதை அடிப்படையாக வைத்து இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினோம். பல தாவரங்களை ஆராய்ச்சி செய்து தொழில்நுட்ப உதவியுடன் எட்டு நிறங்களை உருவாக்கியுள்ளோம். இயற்கை முறையில் அனைத்து சாயங்களையும் உருவாக்குவது சாத்தியமே என்று மாணவிகள் தெரிவித்தனர்.
| ||
இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்கள்: அரசுக்கு இயக்ககம் பரிந்துரை
ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவர்கள், பணிக்காக குறைந்தபட்சம், 200 கி.மீ., பயணம் செய்ய வேண்டி உள்ளதால், ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இப்பணியிடங்களை நிரப்பும்போது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு, முக்கியத்துவம் தர வேண்டும் என, இந்திய முறை மருத்துவர்கள் கோரி உள்ளனர்.
இதுகுறித்து, நெல்லை மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணிபுரியும் சித்த மருத்துவர் கூறியதாவது:
எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், மாதத்திற்கு, 12 நாட்கள் பணிபுரிய, அங்கேயே தங்க முடியாது. எங்கள் ஊரில் தங்கியபடி, 200 கி.மீ.,க்கு மேல், பயணிப்பதால், சம்பளத்தில் பெரும் பங்கு, பயண செலவிற்கே போய்விடுகிறது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, இந்திய முறை மருத்துவ பணியிடங்களை நிரப்பும்போது, மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
"ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இந்திய மருத்துவ முறை பணியிடங்களை, அங்கு பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்டே, கவுன்சிலிங் மூலம் நிரப்பினால், மருத்துவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். இதற்கான பரிந்துரை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என, இந்திய முறை மருத்துவ இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| ||
மாணவர்களின் நடமாட்டத்தை அறிய மைக்ரோ சிப்: அமெரிக்க கோர்ட் ஒப்புதல்
அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்" நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்" மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது" என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
"பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது" என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்" பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்" சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்" என்றனர்.
இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், "பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்" அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு," என்றார்.
|
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Friday, January 11, 2013
11.1.13 NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment