Thursday, January 3, 2013

பள்ளிகல்வித் துறையில் 2013-2014 ஆம் கல்வி ஆண்டின் பட்டதாரி/சிறப்பாசிரியர்/ இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவியுயர்வு/ நேரடி நியமனம் மூலம் பட்டதாரி பணியிடமாக நிரப்ப காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீடு விவரம் கோரி பள்ளிகல்வித்துறை உத்தரவு

திருச்சி மண்டலத்தில் 05.01.2013 அன்று நடைபெறும் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் 2011-12ஆம் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் என 15 பள்ளி தலைமையாசிர்யர்களுக்கு கேடயம் வழங்க பள்ளிப்பெயர் பட்டியல் வெளியீடு.

State Public Sector Undertakings/Statutory Boards-Recruitment through Employment Exch ange- Priority for Destitute Widows- Extension of the orders to State Public Sector Undertakings/Statutory Boards-regarding

TOFEL(டோபல்) தேர்வு என்றால் என்ன?

       ஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.       ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது.
    மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

      ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம். டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்குத் தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்களை எவை என்பதைப் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
       இந்த டோபல் தேர்வு, எங்கெல்லாம் ஏற்கப்படுகிறது?
          வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
         மேலும், குடியேற்ற ஏஜென்சிகள்(United Kingdom Border Agency போன்றவை) மற்றும் உதவித்தொகை ஏஜென்சிகள்(Fulbright போன்றவை) ஆகியவற்றால், ஒரு மாணவரின் மொழித்திறனை சோதிக்க, இத்தேர்வு பயன்படுகிறது. டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் முழு பட்டியல்http://www.ets.org/Media/Tests/TOEFL/pdf/univo708.pdf என்ற வலைதளத்தில் கிடைக்கிறது.
       டோபல் தேர்வை எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
       உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் பல்கலைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது.
       மொத்தம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவுசெய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.
  இத்தேர்வை எழுதுவதற்கான செலவு?
       சர்வதேச மதிப்பில் 165ம், இந்திய மதிப்பில் ரூ.7,500ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டோபல் தேர்வுக்கு, ஒருவர் தயாராகும் வழிமுறைகள் என்னென்ன?
         டோபல் தேர்வுக்கான கையேட்டின் 4ம் பதிப்பு, மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டில், 3 முழு நீள தேர்வுகளும், நூற்றுக்கணக்கான தேர்வு கேள்விகளும், essay தலைப்புகளும், பல ஆலோசனைகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த கையேடு, மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டை, ETS வடிவமைத்துள்ளது. ETS என்பது டோபல் தேர்வு மேம்படுத்துனர் ஆகும்.
           டோபல் ப்ரோகிராமானது, எந்த பயிற்சி வகுப்புகளையும் தற்சமயம் வழங்கவில்லை. மாறாக, பலவிதமான தயாராதல் உபகரணங்களை வழங்குகிறது. இந்த தயாராதல் உபகரணங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு http://www.toeflgoanywhere.org/content/toefl%C2%AE-test-prep-official-tools-help-you-prepare என்ற வலைத்தளம் செல்க.
              டோபல் தொடர்பாக, இந்தியாவில் ஏதேனும் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
         இந்தியாவில், மூன்றாவது ஆண்டாக, டோபல் உதவித்தொகை ப்ரோகிராமை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2013 டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
டோபல் தேர்வில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?
          கடந்த நவம்பர் மாதம், TOEFL iBT வாசித்தல் பகுதியானது,          சுருக்கப்பட்டது. இதன்மூலம், அப்பகுதியானது, 5 பத்திகளுக்கு பதில், 4 பத்திகளையேக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து ரீடிங் பத்திகள் மற்றும் கேள்விகள், மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாணவர்கள் தங்களை சிறப்பாக தயார் செய்துகொள்ள முடியும்.
          இவைத்தவிர, ஒரு கேள்வியை விட்டுவிட்டு, அடுத்தவற்றுக்கு சென்று, பின்னர் மீண்டும் விடுபட்டவற்றுக்கு விடையளிக்க முடியும் மற்றும் தங்களின் பதிலையும் மாற்ற முடியும். இந்த மாற்றம், தேர்வர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும், மதிப்பெண்களை, எலக்ட்ரானிக் முறையில், 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
      IELTS மற்றும் Pearson Test of English போன்ற தேர்வுகளிலிருந்து, டோபல் தேர்வு எவ்வாறு மாறுபட்டு திகழ்கிறது?
           டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் summarising passage போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, testing மற்றும் marking process போன்ற செயல்பாடுகளை தனிப்படுத்துகிறது. இதன்மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதிசெய்யப்படுகிறது.
         மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான rater -களை பயன்படுத்துகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவுசெய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.
            இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் automated மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன்மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.
           இந்தியாவில் டோபல் தேர்வெழுதுவோருக்கு, இலவச ஹெல்ப்லைன் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை உள்ளனவா?
       ஒரு மாணவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்து, டோபல் தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட TOEFL India costomer support centre உங்களுக்கு துணை புரியும். தொலைபேசி வாயிலாக, திங்கள் முதல் வெள்ளி வரையில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அதற்கான இலவச எண் 000-800-100-3780. மேலும் TOEFLsupport4India@ets.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
         இவைத்தவிர, இந்திய மாணவர்களுக்கு உதவ, TOEFL program resource centre என்ற மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 919711237111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 
மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்.
      டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 
 
        முதல்நிலைதேர்வில், ‘ஆப்டிடியூட்’ என்ற புதிய பாடமும், மெயின் தேர்வு பொதுஅறிவு தாளில் ஆங்கில பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.குரூப்–1 தேர்வு துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்–1தேர்வு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகின்ற இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது ஆகும். இதுவரையில், முதல்நிலை தேர்வில் பொது அறிவு தொடர்பாக 200 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்விலும் பொது அறிவில் தலா 2 தாள்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு80 மார்க் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
           அதிரடி மாற்றம் இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் டி.என்.பி.எஸ்.சி. அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதல்நிலை தேர்வில் பொதுஅறிவில் புதிதாக ‘ஆப்டிடியூட்’ என்ற பாடம் சேர்க்கப்படுகிறது. ஆப்டிடியூட் என்பது ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன் சம்பந்தப்பட்டது ஆகும். பொதுஅறிவில் கேள்விகள் 150 ஆக குறைக்கப்பட்டு எஞ்சிய 50 கேள்விகள் ஆப்டிடியூட் பாடத்தில் இருந்து கேட்கப்படும்.முதல்நிலை தேர்வை போன்று மெயின் தேர்விலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி, கூடுதலாக 300 மதிப்பெண்ணுக்கு பொதுஅறிவு தாள் ஒன்று புதிதாக சேர்க்கப்படுகிறது. அதோடு பொது அறிவில் ஆங்கில பாடமும் (கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல் போன்றவை) புதிதாக இடம்பெறுகிறது. 
 
        விண்ணப்பதாரரின் ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் வகையில் இதில் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு 120 மார்க் மெயின் தேர்வில் புதிதாக 300 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டு இருப்பதால் மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 600–லிருந்து 900 ஆக உயர்ந்துவிடும்.தற்போது, நேர்முகதேர்வுக்கு 80 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஆக அதிகரிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான குரூப்–1 தேர்வு வரும் 27–ந்தேதிநடத்தப்பட உள்ளது. இதில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 7–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், 8 துணை கலெக்டர்களும், 4 டி.எஸ்.பி.க்களும், 7 வணிகவரி உதவி கமிஷனர்களும், மாவட்ட பதிவாளர் ஒருவரும், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளும் என மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

12th Standard Half Yearly Exam - (2012-13) Maths Key Answer

12th Std - Study Materials

மாணவர்களுக்கு வினாடி-வினா கேள்வித்தாள்: போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

        சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்த, போக்குவரத்து கழகம் சார்பில், "வினாடி- வினா" கேள்வித்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

         அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், சாலை பாதுகாப்பு குறித்து வினாடி - வினா தாள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சாலை விதிகள், மோட்டார் வாகன சட்டம் தொடர்புடைய 50 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குரிய விடைகள், "ஆப்ஜெக்டிவ்" முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.

         இந்த வினாக்களுக்குரிய விடைகளை தெரிந்து கொண்டாலே, சாலை விதி குறித்து பல விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். வெறுமனே வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பேரணி, ஊர்வலம் செல்வது, கோஷம் எழுப்புவது போன்ற நடவடிக்கைகளை காட்டிலும், இத்தகைய வினாடி- வினாவில், அதிகளவு மாணவ, மாணவியரை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
         இதற்கு, கல்வி துறை உயரதிகாரிகள் உற்சாகம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் மாணவ, மாணவியரை முழு அளவில் போய் சேரும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை: 300 பள்ளிகளுக்கு விரைவில் தீர்வு

        "மதுரை மாவட்டத்தில் 300 பள்ளிகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,&'&' என்று, தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

 
     மாவட்டத்தில், கிழக்கு ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை, ஒத்தக்கடை, சிட்டாம்பட்டி, கள்ளந்திரி, திருப்பாலை, நரசிங்கம், சக்கிமங்கலம் உட்பட, 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுமார் 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தற்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 
     இப்பள்ளிகளுக்கு 2009லிருந்து மின் கட்டணம் செலுத்தாததால், ரூ. பல லட்சம் வரை பாக்கி உள்ளது. இதனால், 2012 ஜனவரி முதல் அந்த பள்ளிகளுக்கான மின் இணைப்புகளை, மின்வாரியம் துண்டித்தது.

     அந்த பள்ளிகளில் கணினி வழி கற்றல் உட்பட மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது. இப்பிரச்னை குறித்து, கல்வித்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. பல பள்ளிகளில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயில்கின்றனர். அங்கு மின்வசதி இல்லாததால் தண்ணீரின்றி கழிப்பறைகள் செயல்படாமல் முடங்கியுள்ளது, மாணவிகளை மனரீதியாக பாதித்துள்ளது என, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

         தமிழ்நாடு தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "மாவட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து "பில்"களையும் செலுத்துவதற்கு இன்னும் இரு தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
 
குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

        குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
      துணை கலெக்டர் பணியிடம் - எட்டு, டி.எஸ்.பி., - நான்கு, வணிக வரித்துறையில், உதவிக் கமிஷனர் - ஏழு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் - ஐந்து, மாவட்ட பதிவாளர் - ஒருவர் என, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 30ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என, தேர்வாணையம் அறிவித்திருந்தது. பின், இம்மாதம், 27ம் தேதிக்கு, தேர்வை ஒத்தி வைத்தது. 
இந்நிலையில், தேர்வுக்கு, இம்மாதம், 7ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment