பள்ளி, கல்லூரிகள் முன் போலீஸாரின் சுவரொட்டிகள்: மாணவியருக்கு அறிவுரை
பள்ளி செல்லும் மாணவியர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸார் தென் கிழக்குத் தில்லியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளின் முன்பாக ஒட்டியுள்ளனர்.தில்லியில் கடந்த மாதம்,
ஓடும் பஸ்ஸில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சுவரொட்டிகளில் மாணவியருக்கு போலீஸார் தெரிவித்துள்ள அறிவுரை வாசகங்கள் விவரம்:
பள்ளி முடிந்ததும் நேரமாக வீட்டுக்குச் செல்லுங்கள், முன்பின் தெரியாத நபர்கள் பேச்சுக் கொடுத்தால் அதைத் தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், பரிசுப் பொருள்கள் கொடுத்தால் அதை வாங்கக்கூடாது.முன்பின் தெரியாத நபர்களின் வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டாம். வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட காகிதத்தைப் பையில் வைத்திருங்கள். வெளியே நண்பரின் இருப்பிடங்களுக்குச் செல்வதாக இருந்தால் பெற்றோரிடம் தகவல் தெரிவியுங்கள்.கேலி, கிண்டல் செய்யும் நபர்களாக இருந்தாலும், சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தாலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தயக்கமின்றி தகவல் தெரிவியுங்கள்.ஆசிரியர் அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தை விட்டுச் செல்லாதீர்கள்'' என அந்த சுவரொட்டியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment