Saturday, January 19, 2013


TET BTs 2 days Training (19.01.2013 - 20.01.2013 ) Modules25.01.2013 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 24.01.2013 அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாக்காளர் உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவு

சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?

பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.

பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள், உள்ளார்ந்து வாசிக்கும் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது.

வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒரு பத்தியை சிறப்பாக படிப்பதற்கு, சில முக்கிய திறன்கள் தேவை. அந்த திறன்கள், முறையான உதவியின் மூலமே பெறப்பட முடியும்.

முதலில், வகுப்பறையில் சக மாணவர்களின் முன்பாக, பயமின்றி வாசிக்கும் பழக்கம் ஒரு குழந்தைக்கு ஏற்பட வேண்டும். இந்த தைரியத்தை, ஒரு ஆசிரியரின் தொடர்ச்சியான உற்சாகத்தின் மூலமாகவே குழந்தை அடையும். குழந்தையின் சிறு தவறுகளை ஆசிரியர் பெரிதுபடுத்துதல் கூடாது. வாசிக்கும்போது, தனது தவறுகளுக்காக தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் குழந்தைகளுக்கு இருத்தல் கூடாது. இதை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், இந்த பயம் இருந்தால், குழந்தையானது முன்னேற்ற பாதையில் செல்வது தடைபடும்.

வாசிக்கும் திறனை வளர்த்தல் என்பது, பதட்டமற்ற மற்றும் தெளிவான மனோநிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அமைதியான மற்றும் தெளிவான மனோநிலையை, நல்ல விளையாட்டுக்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலமாக பெறலாம். மேலும், ஆசிரியரின் பங்களிப்பும் இன்றியமையாதது.

வேகமாகவும், அவசரமாகவும் வாசிப்பதென்பது, படித்தல் செயல்பாட்டிற்கு உதவாது. ஒரு விஷயத்தை சிறப்பாக உள்வாங்க வேண்டுமெனில், நிதானமாகவும், பொறுமையாகவும் வாசிப்பது முக்கியம்.

ஆரம்ப வகுப்பிலிருந்தே, வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையாக புரிந்துகொள்வதோடு, அதன் தொடர்புடைய அர்த்தங்களையும் புரிந்துகொள்ள பழக வேண்டும். இதன்மூலம், படிக்கும் விஷயத்தைப் பற்றிய, பரவலான மற்றும் தெளிவான புரிதல் ஏற்படும்.

ஒவ்வொரு பள்ளியும், கட்டாயம் ஒரு நூலகத்தை வைத்திருக்க வேண்டும். ஒருவேளை, தான் படிக்கும் பள்ளியில் நூலகம் இல்லையெனில், பள்ளிக்கு வெளியேயுள்ள ஊர் பொது நூலகம் அல்லது மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றில் உறுப்பினராகி, ஒர மாணவர், வாசிக்கும் பழக்கத்தை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை, நூலகத்தையே அணுக முடியாத நிலை ஏற்படினும்கூட, தனது பாடப் புத்தகங்களையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி, வாசிக்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கையில், தெரியாத வார்த்தைகளை அறிந்துகொள்ள, அகராதியையும்(dictionary) அருகே வைத்துக் கொள்ளலாம்.

சிறப்பான வாசித்தல் திறனை வளர்த்துக் கொள்வதானது, ஒரு மாணவரின், ஆர்வம் மற்றும் விடா முயற்சியினை பொறுத்தே அமைகிறது என்பதை எப்போதும் மறக்கலாகாது.


அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் எவை?


தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு பெறாத மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்தப் பதிவும், எந்தத் தேர்வும் நடத்தப்படாது. www.tnmgrmu.ac.in என்ற பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் பெயர்கள்
* தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்
கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் - வேலூர்
* பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - கோவை
* ஐ.ஆர்.டி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் - பெருந்துறை
* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - கன்யாகுமரி
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - மேல்மருவத்தூர்
* கற்பக வினாயகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் - காஞ்சிபுரம்
* சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர் - திருச்சி
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - மாங்குடி(அருகில்).
* தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - பெரம்பலூர்
* அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - சென்னை
* கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் - கோயம்புத்தூர்.

கம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்

மனிதனின் இன்றை வாழ்க்கை மனம் மகிழந்த மனைவியோடும், பெற்றெடுத்த பிள்ளைகளோடும், குடும்பத்தோடும் கொஞ்சி விளையாட நேரமில்லா இயந்திர வாழ்க்கையாக மனிதனின் வாழ்க்கை மாறி விட்டன.


இந்நிலையில் உணவுக்கும், உறக்கத்துக்கும் மற்றும் உறவுக்கும் இரண்டாம்பட்ச பணியாக மாறிவிட்டன. அந்தயளவுக்கு கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவும், மனிதனின் மூன்றாவது கரமாக மாறிவிட்டன.

இந்த மூன்றாவது கரத்தின் கம்ப்யூட்டர் பணியால் 24 மணி நேரமும் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளன.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மருத்துவர்கள் தரும் விளக்கங்களைப் பற்றி காண்போம்.

அறிகுறிகள்:
அதிக நேரம் கம்ப்யூட்டரோடு உபயோகத்தில் இருப்பவர்களுக்கு கண்கள் வறண்டும்,கண்ணீரே இல்லாமல் போகும். அடிக்கடி தலைவலி, கண்களில் துடிப்பு எரிச்சல், பார்வையில் மங்கிபோன்ற மாதிரி ஒர் உணர்வுகள் தோன்றும்.

விளைவுகள்: பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெள்ளெழுத்தோடு சேர்ந்து இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சனைகளும் வரும் தொடங்கும். இவை அந்த வயதி வரக்கூடிய ஒன்றுதான் என ஒதுக்கினால் பிரச்சனைகள் விஸ்வரூமாக மாறிவிடும். இந்த பிரச்சனையை ஆரம்ப காலத்திலே அறிந்து அதற்கான சோதனைகளை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் விஸ்வரூபத்துக்கு விடையளிக்கலாம்.

தீர்வுகள்:
1. கம்ப்யூட்டர் பணிக்கு சேருவதற்கு முன்பு கண் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் பாதுகாப்பானது.
2. 20- 20- 20 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கொரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும்.
3. உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து மூடிய கண்களின் மேல் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.
4. கண்களில் வறச்சி காணப்பட்டால் கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். வறச்சியின் அளவை பொறுத்து கண்களுக்கான செயற்கையான கண்ணீர் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
5. தூரப்பார்வையும் இல்லாமல், கிட்டப்பார்வையும் இல்லாமல் நடுத்தர பார்வையோடு கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும்.
6. கம்ப்யூட்டர் பணிக்கான பிரத்யேக கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது ஸ்பெஷல் கோட்டிங்கோடு, நடுத்தரப் பார்வைக்கு என உள்ள கண்ணாடிகளை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும்.
7. கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். கால்களின் பாதங்கள் தரையைத் தொடுகிற வண்ணம் அமர்ந்திருக்க வேண்டும். அதாவது 90 டிகிரி கோணத்தில் அமர்வது சரியானதாகும்.
8. கம்ப்யூட்டருக்கு ஆன்ட்டிரெஃப்ளெக்ஷன் மானிடர் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை செயல்படுத்தி வருகின்றபோது கண்களுக்கு கம்ப்யூட்டரால் ஏற்படும் விஸ்வரூப பிரச்சனைகளுக்கு விடையளிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் (Kalajathas) மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த - SSA உத்தரவு

மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the Competition Topics 
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பல்வேறு கலை இலக்கிய போட்டி நடக்க உள்ளது.இதில், ஒன்று முதல் எட்டு வகுப்புகள் ஒரு பிரிவாகவும்; ஒன்பது முதல், 10 வகுப்புகள் வரை, ஒரு பிரிவாகவும்; 11 மற்றும் 12 வகுப்பு வரை, ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் படுவர். இதில், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு, முறையே, 500, 300, 200 ரூபாயும்; மாவட்ட அளவில், 5,000, 3,000, 2,000 ரூபாயும்; மாநில அளவில், 20 ஆயிரம், 10 ஆயிரம், 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டிகள், இம்மாதம், 21 முதல், 25 வரையிலும்; ஒன்றிய அளவிலான போட்டிகள், 28 முதல், 30 வரையிலும்; மாவட்ட அளவிலான போட்டிகள், பிப்.,முதல், 6 வரையிலும் நடக்கின்றன.

No comments:

Post a Comment