Thursday, January 17, 2013

BHARATHIYAR SONGஅரசுப் பள்ளிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் தங்கமணி

         அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கேட்டுக்கொண்டார்.

     திருச்செங்கோடு எஸ்.பி.கே. பள்ளியின் 11-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் செங்கோடன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சுகந்தி வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
 விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
 பெற்றோர் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அதைப் படிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.  அப்போதுதான் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

          அரசுப் பள்ளியில் படித்தால் குறைந்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது தவறான கருத்து. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள் நிறைய பேர் சாதனைப் படைத்துள்ளனர். மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு தந்துள்ளது. அவற்றை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

       விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜகந்நாதன், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, டிஎஸ்பி சுஜாதா, பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பள்ளிப்பாளையம் செந்தில், திருச்செங்கோடு பாலசுப்பிரமணியம், பள்ளி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 முன்னதாக, தலைமை ஆசிரியை சூசன் வரவேற்றார்.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள். 
         ஆனால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை. நுனிநாக்கு ஆங்கிலம் அவர்களுக்கு அத்துப்படி.
       இந்தக் கிராம மாணவர்களின் அனைவரது வீட்டிலும் ஆங்கில உரையாடல்களே ஒலிக்கின்றன. படிப்பறிவு இல்லாத அந்தப் பெற்றோர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, ‘நம்ம பிள்ளையும் தஸ் புஸ்னு இங்கிலீபீஸ்ல பேசுதே’ என்கிற பூரிப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

        நரையன்குளம் ஒத்தப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானோர் தலித் மாணவர்கள்.

          ‘நம் கிராம மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனும் முக்கியம்’ எனக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்குத் தங்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இங்குள்ள பள்ளி ஆசிரியர்கள். இவர்களில் ஒருவரான ஜெயக்குமார் கூறும்போது,

           “நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகம் செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தர்றாங்க. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அந்த அளவுக்கு வசதி கிடையாது. தற்போது அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கென தனி வகுப்புகள் கிடையாது. இங்கிலீஷ் ஒரு பாடமாக இருந்தாலும் அது ஏட்டுக் கல்வியாக இருக்கிறதே தவிர, மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை.

        இந்த நிலையில் ஒரு தனியார் அகாடமி மூலம் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கலாம் என்று தோன்றியது. பின்னாட்களில் அவர்கள் மேற்படிப்புகளுக்காக நகரங்களுக்குச் செல்லும்போது ஆங்கிலம் பேசுவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்கக் கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறோம். மாணவர்கள் தங்களிடையே பேசிக் கொள்ளும்போதும் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாடும் போதும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகச் சொல்கிறோம்.

           இப்படித்தான் எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் பாட்டியிடம் சென்று, ‘ஹாய் கிராண்ட்மா... வேர் ஆர் யூ கோயிங்?’ என்று கேட்டிருக்கிறான். ஆங்கில வாசனையையே அறியாத அந்தக் கிராமத்து மூதாட்டி, தன் பேரன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு, பூரித்துப் போன பாட்டி தன் சுருக்குப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து பரிசாகக் கொடுத்துள்ளார்” என்று பூரிப்புடன் கூறுகிறார் ஜெயக்குமார்.

          ’ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமி நடத்தி வரும் சிவசுப்பிரமணியன் பகுதி நேரமாக இப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார். ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், உரையாடல்கள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகிறார் இவர்.

       ”முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்குறதுல சிரமம் இருக்குமே என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் பசுமரத்தாணி போல் சொல்லிக் கொடுக்கும் இங்கிலீஷை உடனடியாக உள்வாங்கிக் கொண்டனர். நான் எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் இங்கிலீஷ்லதான் கொடுப்பேன். அதை எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். பதிலும் இங்கிலீஷிலேயே சொல்லுவார்கள். நான் பேசுவதற்கான அனைத்து பயிற்சிகளும் கொடுத்துடுவேன். அதன்பின் இப்பள்ளி ஆசிரியர்கள் தான் இங்கிலீஷ்ல எழுத்துப் பயிற்சி, வாசிப்புத்திறன் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கின்றனர்” என்கிறார் சிவசுப்பிர
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்


       முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
        பணி நியமனம் பெற்றுள்ள 2,300 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல், அவர்களின் ரேங்க் பட்டியல், தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம், கட்-ஆஃப் மதிப்பெண் போன்ற விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.உயிரியல் தவிர மீதமுள்ள பாட ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரியல் பாடத்தில் தேர்வுப் பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

          கேரளாவில் அரசு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், முதல்வர் உம்மன்சாண்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. 
     கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்தது. இதற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி,  கடந்த 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினர். இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. முதல் நாளே 60 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்தனர். நாளுக்கு நாள் பணிக்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
           இதற்கிடையே, பணிக்கு வந்த ஊழியர்களை பல இடங்களில் போராட்டக்காரர்கள் தாக்கினர். கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
             இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவு முதல்வர் உம்மன்சாண்டி, நிதி அமைச்சர் கே.எம். மாணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 2 மணி வரை இது நீடித்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.

புத்தக கண்காட்சிக்கு திட்டமிடாமல் வந்தால் ஏமாற்றம்...

         பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளி மாநிலங்களில் வசிப்போர், குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

        சென்னை, புத்தக கண்காட்சி அரங்கில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், சுமார் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு, தினமும், பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புத்தகங்களை தேடுவதாக, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
         அதிலும், திட்டமிட்டு புத்தகங்களை தேடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேடுவோரில், புத்தகங்களுக்கான பட்டியலை தயாரித்து எடுத்து வந்து, குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களை காண முடிந்தது.
இப்படி பட்டியல் தயாரித்து வந்தவர்களில் ஒருவர், அம்பத்தூரை சேர்ந்த இளங்கோவன். அவரிடம் கேட்ட போது, "நான் வேடிக்கை பார்க்க இங்கு வரவில்லை. பொழுது போக்கவும் வரவில்லை. எனக்கு, சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி முன்பே தெரிந்து பட்டியல் வைத்துள்ளேன். கடந்த ஆண்டு முழுவதும் இந்த பட்டியலை தயாரித்தேன்" என்றார்.
           மேலும், "இதை வைத்துக்கொண்டு புத்தகத்தை தேடுகிறேன். அதில் கிடைத்தவற்றை வாங்கிக் கொள்கிறேன். இந்த தேடலுடன் புதிய புத்தகங்கள் ஏதாவது வந்துள்ளதா என்பதையும் கவனிக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறேன். இது சுலபமாக இருக்கிறது" என்றார்.
இவர் போல் இல்லாமல், திட்டமிடாமல் வந்து, விரும்பிய புத்தகத்தை வாங்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. புத்தகங்களைத் தேடி வந்து, வெறுங்கையுடன் திரும்பி சென்றவர் தாம்பரத்தை சேர்ந்த ஜான்சன். இவர் கூறுகையில், "மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை தேடி வந்தேன்.
          நவீன அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிப்பதில், எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இந்த தலைப்பில் எந்த வகையான புத்தகங்கள் வந்துள்ளன என்பது குறித்து, எனக்கு பெரிய அளவில் தெரியாது. அவற்றை தேடி கண்டு பிடிப்பதிலும் சிரமம் உள்ளது" என்றார்.
         மேலும், "புத்தக அட்டையில் உள்ள கருத்து அடிப்படையில், புத்தகங்களை தேர்வு செய்வதால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்ற அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அடிப்படையில், நான் தேடி வந்தவற்றை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களால், ஏமாற்றமாக உள்ளது" என்றார்.
          நவீன விவசாயம், ஜோதிடம், சமையல் போன்ற புத்தகங்களை வாங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. விவசாயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி கொண்டிருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த, அய்யப்பனிடம் கேட்ட போது, "பொதுவாக, எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.
           சென்னையில், இப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. நஞ்சு கலந்த உணவை சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்" என்றார். மேலும், "இது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உயிர் வேளாண்மை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்களைத் தேடுகிறேன்.
         நகரில் இது சார்ந்து, நான் எந்த செயலையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரிகிறது. ஆனால், நஞ்சில்லா வேளாண்மை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு இவற்றை வாங்குகிறேன்" என்றார்.
           வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர், புத்தகங்களைத் தேடி சந்தைக்கு வந்திருந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த, பாபு கூறுகையில், "புத்தகங்கள் வாங்குவதற்கு என, குறிப்பிட்ட தொகையை நான் மாதம் தோறும் சேமிக்கிறேன். அந்த தொகையை மூலம், நான் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்.
           நான் சமூகவியல் தொடர்பான கல்லூரி ஆசிரியராக பணியாற்றுவதால், அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்லூரி நூலகத்தில் இது தொடர்பான புத்தகங்கள் வந்தாலும், வளர்ச்சி சார்ந்து உலகின் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்களைத் தேடி இங்கு வருகிறேன்" என்றார்.

சுயஉதவி குழுவின் தாக்கம்: விவரம் சேகரிப்பு பணியில் மாணவர்கள்

        பெண்களிடம், சுயஉதவி குழு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான களப்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

         தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம், மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படுகின்றனர். இதில், பெண்கள் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
        இதன் ஒரு கட்டமாக, மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றம், பொருள்கள் தயாரிப்பில் உள்ள குறைபாடுகள், களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
        இதற்கான களப் பணியில், பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலாண்மை கல்வி படிக்கும் மாணவர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், சுய உதவி குழுக்களால் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதா, உற்பத்தி பொருள்களில் உள்ள குறைபாடுகள், தரம் உயர்த்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சேகரிக்க பணியில், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
         முதல் கட்டமாக, புது வாழ்வு திட்டம், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும், பெரம்பலூர், விழுப்புரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெண்களிடம், மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கின்றனர்.
         இவர்கள், புகைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் தங்கள் தகவல்களை பதிவு செய்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக, 30 மாணவர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

       இவர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து, களப்பணியில் ஈடுபடுகின்றனர். யுனிசெப் நிறுவனமும், இப்பணியில் இணைந்துள்ளது. மாணவர்களிடம், முழு தகவல்களை அறிவிக்கப்பட்டு, களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மகளிர் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment