நம் பூர்வீக மண்ணையும் உறவுகளையும் கண்டு வருவோம்... இனிய காணும் பொங்கல்
காணும் பொங்கல் ஏன்? யோசித்து பார்கையில். இப்படியாக இருக்குமோ?...
அன்று மட்டும் பூர்வீக கிராமத்தில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு தவறாமல் சென்று, காலில் விழுந்து, அவள் முந்தானையில் முடித்து வைத்திருக்கும் ஒன்றி
"குந்து நைனா" என்று என்னை எதிரே அமரவைத்து, என் தலை மீது கைவைத்து ஐந்து நிமிடம் கிராமத்து நடையிலே என்னை ஆசீர்வதித்து, கண்ணீர் மல்க உச்சி முகர்ந்தது முத்தமிட்டு முகம் தடவி அனைக்கும் போது நான் நகைப்பேன் சிறுவனாக இருந்த போது. இவர் தோத்தா, மாமா, பங்காளி, மச்சான், பெரியப்பன், சித்தப்பன், முறை பெண் என்றும் சில நுணுக்கமான உறவு முறைகளை அவள் கூறும் பொது புரிந்தது போல் தலையாட்டி தப்பிப்பேன்.
இந்த வரப்பு நமது, கைனி , கொள்ளி என ஏதேதோ சொல்லி அதன் விளைச்சல்களையும் சொல்லுகைகள் அத்தனை பெருமை அவள் குரலில். இறுதியாக எங்கள் குல தெய்வ வழிபாடும் விருந்தும் உறவுகளோடு. மறுநாள் பள்ளிக்கு போகணுமே என சிறுவனாக இருந்த போது நான் அழ "நாநாள் இருந்துட்டு போகட்டுமே" என் பாட்டி கெஞ்ச, சமூக, பொருளாதார, நாகரீக தேவைக்காக மூன்று தலைமுறைக்கு முன்னால் நகரத்திற்கு வந்த எங்கள் குடும்பங்கள் அன்று ஒரு "இன்வர்டர்" இல்லாமல் இருப்பதே பெரிய சாதனையாக கருதுகிறது. உங்கள் பூர்வீக கிராமத்தின் பெயர் உங்களுக்கு தெரியுமா ?...நம் பூர்வீக மண்ணையும் உறவுகளையும் கண்டு வருவோம்... இனிய காணும் பொங்கல் ......
|
ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம்
|
"TET Marks Relaxation in Other States" - Related Full Collection of Documents
|
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல்
|
இந்த ஆண்டும் தேர்வு நேரத்தில் மின்வெட்டு அபாயம்- Dinamalar
கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்த போதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு, விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும், இதுவரை கல்வித்துறையிலோ, தேர்வுத்துறையிலோ துவங்கவில்லை. கடந்த பொதுத்தேர்வில், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க, ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் எனவும், அதற்கான செலவை, பின்னர் அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பெரிய பள்ளிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த ஜெனரேட்டர்களை வைத்து, பள்ளி நிர்வாகங்கள், சமாளித்தன. ஆனால், பெரும்பான்மை பள்ளிகளில், பாதிப்புகள் ஏற்பட்டன.மின்வெட்டு பிரச்னை, விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் எதிரொலித்தது. மின்சாரம் இல்லாமல், பல்வேறு இன்னல்களுக்கு இடையே, ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தினர்.
வாடகைக்கு ஜெனரேட்டர்களை வாங்கி, தேர்வுகளை நடத்திய பள்ளி நிர்வாகிகள் பலருக்கு, இதுவரை அந்தப் பணத்தை அரசு, திரும்ப தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் பொதுத்தேர்வை நினைத்து, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலங்கிப்போய் உள்ளனர்.
சென்னையைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில், கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது. "இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை தீர்ந்துவிடும்" என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதில் இருந்து, மார்ச், ஏப்ரலுக்குள் மின் பிரச்னை தீராது என்பது உறுதியாகி உள்ளது. கிராமங்களில், ஒரு நாளைக்கு, 15 மணி நேரம் முதல் 17 மணி நேரம் வரை, மின்வெட்டு இருந்து வருகிறது.
இரவில், மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 10 தேதிக்குப்பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கு, இப்போது இருந்தே, தீவிரமாக தயாராக வேண்டிய நிலையில், மாணவ, மாணவியர் உள்ளனர். ஆனால், மின்வெட்டு பிரச்னை, மாணவர்களை, பாடாய்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டாவது, முன்கூட்டியே இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, தேவையான முன் ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "தேர்வுக்கு, இன்னும் பல நாட்கள் உள்ளன. தேர்வு நெருங்கும் போது, இந்த விவகாரம் குறித்து விவாதித்து, ஒரு முடிவை எடுப்போம்,&'&' என, தெரிவித்தனர்.
தேர்வுக்கு இன்னும், 6 மாதங்கள் இருப்பதுபோல், கல்வித்துறையும், தேர்வுத்துறையும் மெத்தனமாக இருந்தால், மாணவ, மாணவியரை பெரிதும் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.
|
குரூப்-1 தேர்ச்சி மட்டும் போதுமா? பயிற்சி வேண்டாமா...
அரசின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, வனத்துறை அதிகாரிகளாக பொறுப்பேற்கும் இளம் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும், இப்பயிற்சியில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.
குரூப்-1 போட்டித்தேர்வில் தேர்ச்சி பெறும் பலரும், வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர்களாக தேர்வாகின்றனர். இவர்களுக்கு, வனப்பகுதிகளில் ஏற்படும் மண் சரிவு, நிலச்சரிவை தடுப்பது, நீர்பிரி முகடு பகுதிகளில் தடுப்பணை அமைத்து வன விலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகினறன.
மத்திய அரசின் சார்பில் உயிர்ச்சூழல் மண்டலங்களில், களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் களப்பயிற்சிகள் பெரும்பாலும், ஊட்டியில் அளிக்கப்படுகின்றன. மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில், வன நிலங்களின் அமைப்பு, நீராதாரங்கள், அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கப்படுகின்றன.
தடுப்பணை அமைத்து, வெள்ளப்பெருக்கின் வேகத்தை கட்டுப்படுத்துவது, அதன் மூலம் வெள்ள சேதங்களை தவிர்ப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மூலம் வன வளத்தை 100 சதவீதம் பாதுகாக்க கூடிய வழிமுறைகளை அதிகாரிகள் கற்றுக் கொள்கின்றனர்.
ஊட்டியில் அவ்வப்போது நடக்கும் இத்தகைய பயிற்சியில், ஜம்மு- காஷ்மீர், சிக்கிம், அசாம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத் என, பல மாநிலங்களில் இருந்தும், இளம் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆசியாவின் மிகச்சிறந்த உயிர்சூழல் மண்டலமான, நீலகிரி மலையில், பிற மாநில வனத்துறை அதிகாரிகள் பயிற்சி பெற்று செல்லும் நிலையில், தமிழக வனத்துறையில், உதவி வன பாதுகாவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்பதில்லை.
மாநிலத்தில், புதிதாக பணியில் சேர உள்ள இளம் அதிகாரிகளுக்கு, இத்தகைய களப்பயிற்சிகளை வழங்க வன உயரதிகாரிகள், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், தமிழக வனத்துறை அதிகாரிகள், இத்தகைய பரிந்துரையை செய்வதில்லை, எனக் கூறப்படுகிறது.
மெல்ல குறையும் வனப்பரப்பு, வன விலங்குகள் அழிவு உட்பட பல பிரச்னைகளை தமிழக வனங்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை தவிர்க்க சரியான திட்டமிடலை வகுக்க வேண்டியது அவசியம். அதற்கு, இத்தகைய களப்பயிற்சிகள் உதவும், என்பதை உணர்ந்து, மாநில வனத்துறையில் பணியில் சேரும் இளம் அதிகாரிகளுக்கு, இத்தகைய களப்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயிற்சியாளர்கள் விரும்புகின்றனர்.
|
மகளிர் முன்னேற்றத்திற்கான அவ்வையார் விருது: விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு, 2012-13ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி கலெக்டர் ராஜேஸ் வெளியிட்ட அறிக்கை: இந்த விருது வரும் மார்ச், 8ம் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடும் நாளில், தமிழக முதல்வரால் வழங்கப்படும். இதனுடன், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு மற்றும் எட்டு கிராம் மதிப்புள்ள தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும்.
இந்த விருதினை பெற விண்ணப்பிப்போர், 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மூன்று நகல்களில் சமர்பிக்க வேண்டும். சாதனை புரிந்த விபரம் புத்தக கட்டாக விண்ணப்பத்தில் பெயர் மற்றும் முகவரி, மொபைல்ஃபோன் எண், பிறந்த தேதி, கல்வித்தகுதி, தற்போது பணிபுரியும் தொண்டு நிறுவனத்தின் பெயர் மற்றும் பதவி, ஏற்கனவே விருது பெற்றிருப்பின் விருதின் பெயர், யாரிடம் இருந்து விருது பெற்றது, வருடம் போன்றவற்றின் விபரம், மகளிர் முன்னேற்றத்திற்காக பணிபுரிந்த வருடங்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் சேவையின் விபரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வரும் 18ம் தேதிக்குள் "மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி-1" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
|
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Wednesday, January 16, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment