Monday, January 21, 2013

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
2009-2010 - இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு

click here to download the GO 18 for BTs for 2nd Increment for M.phil/ PHd/ M.Ed  

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டத்தை நீக்கிவிட்டன. இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது.

எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இவர்களது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற உயர் கல்வி தகுதியாக எம்.எட் மட்டுமே என்பதற்குப் பதிலாக, எம்.எட். அல்லது எம்.பில் அல்லது பி.எச்டி. பெற்றிருந்தாலும் அதை உயர் கல்வியாகக் கருதி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.எனினும், ஒரு ஆசிரியரின் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வட்டார அளவில் உண்டு உறைவிடப் பயிற்சி 04.02.2013 முதல் 07.02.2013 வரையும், 11.02.2013 முதல் 14.02.2013 வரையும், 18.02.2013 மற்றும் 19.02.2013 ஆகிய நாட்களில் வட்டார அளவில் நடத்த SCERT உத்தரவு

மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம், பயிற்சி, வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு

SSLC March 2013 - Examination Time Table


23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அந்நகலினை உடன் அனுப்ப - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு



CLICK HERE TO DOWNLOAD THE FILE



23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனத்திற்கு  ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பின் அந்த நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின்   நியமனங்களை உடன் இரத்து செய்து ,

அவ்வனையினை உரிய பள்ளிகளுக்கும் , அந்நகலினை இயக்ககத்திற்கும் உடன் அனுப்ப கல்வி அலுவலர்களுக்கு - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 
மாணவர்களின் மனநிலையை புரிந்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

"மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்" என, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.

டி.இ.டி., தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், ஆசிரியர்களாக சேர்ந்துள்ளனர். புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  கடந்த 2 நாட்களாக நடந்தது.

பயிற்சி முகாமில், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது: புதியதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். அனைத்து துறையிலும் வல்லுநர்களை உருவாக்குவது, ஆசிரியர்களாகிய நீங்கள் தான். 

பணம் ஈட்டுவது பெரிய விஷயமல்ல, பெயர் ஈட்டுவது தான் சிறப்பானது.மாணவர்களின் குணநலன்கள், மனநிலையை புரிந்து அரவணைத்து, ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மன நிலையை நன்கு புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடக்க கல்வி அலுவலர் லட்சுமணன் பேசும் போது, "ஆசிரியர் பணி என்பது சிறப்பான ஒன்று; ஓய்வு பெறும் வரை, உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். சிறந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது" என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் வாசு பேசுகையில், "ஆசிரியர்கள், தங்களின் சிறப்பான பணியின் மூலம், மாணவர்கள் சிறந்து விளங்கி, அதன் பயன் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். இப்பயிற்சியில் கூறப்படும் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி, நன்றாக பயன்படுத்தி, சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அர்ஜூனன், ஆர்.எம்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் என். ஆர்ஜூனன், பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்தும் என எதிர்பார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
(மேற்காணும் எண்ணிக்கைகள் கூடுதல் பெற வாய்ப்புண்டு)
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி முழு நிதியுதவியுடன் கூடிய முழுமை பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைத்தொழில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 2010 ஆக.23க்கு பிறகு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களுக்கே மானியம் விடுவித்தல் வேண்டும். 

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தற்காலிக பட்டச்சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 ஆண்டுக்குள் அசல் பட்டச்சான்றினை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மாநிலக் கணக்காயரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநிலக் கணக்காயர் மற்றும் துறை அதிகாரிகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் இறுதி கற்பிப்பு மானியத்தை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தொடர் அங்கீகாரம் ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். சுயநிலைப்பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. பள்ளி செயலர் நியமனங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : விழுப்புரம் சி.இ.ஓ. அறிவுரை

 பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.


தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற 18,000 பேர்களுக்கு ஆன் லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணையை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 

இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 596 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறை, பாடத்திட்டம் குறித்த நிர்வாக பயிற்சி முகாம் ஜனவரி 19, 20ம் தேதிகள் என இரு நாள்கள் நடைபெற்றன. 

விழுப்புரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கிய இப்பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி பேசியது:

 மாவட்டத்திலுள்ள 509 அரசு பள்ளியில் பணிபுரியவுள்ள நீங்கள், மாணவர் கல்விக்கு முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் மீது குறை கூறக்கூடாது. பள்ளிக்கு ஆசிரியை, ஆசிரியர்கள் சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்டுகளை அணிந்து வரக்கூடாது. ஆசிரியர்கள் சட்டையில் பட்டன்களை முறையாக போட வேண்டும்.
மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க பாடுபட வேண்டும்  என்றார்.  
+2 March - 2013 - Science Practical Exam Instructions | மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க திட்டம்: 50 பேராசிரியர்ளுக்கு நிதியுதவி

அரசு கல்லூரி பேராசிரியர்களிடம், ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில், "சிறிய ஆய்வு திட்டத்தை" அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், 50 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆய்வுக்கு, 1 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள, அரசு கல்லூரி பேராசிரியர்கள், புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர, சிறிய ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், சேர விரும்பும் ஆசிரியர்கள் குறித்து, தகவல்களை அனுப்ப, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இதில், பேராசிரியர்கள் மேற்கொள்ளும் ஆய்வு தலைப்பு மற்றும் விவரங்கள், ஆய்வினால் சமுதாயத்திற்கு ஏற்படும் பயன் உள்ளிட்ட, தகவல்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின், எம்.பில்.,-பி.எச்டி., படிப்பின் ஆய்வு தலைப்புகளை, இத்திட்டத்தில் பயன்படுத்த கூடாது. ஒரு ஆண்டிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும். ஆய்வுக்காக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
முடிக்காத நிலையில், ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அதிலும் முடிக்கவில்லையெனில், சம்பளத்தில் இருந்து, ஆய்வு தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், அரசு கல்லூரி பேராசிரியர், தங்கள் ஆய்வு தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை, 100க்கும் மேற்பட்ட, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மூவர் குழு இந்த விண்ணப்பங்களிலிருந்து, சிறந்த ஆய்வு தலைப்பை தேர்ந்தெடுக்க, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழு, இத்தலைப்பில் ஆய்வுகள் வந்துள்ளதா, ஆய்வு மக்களுக்கு உதவுமா உள்ளிட்டவை குறித்து, ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது: 

அரசு கல்லூரி ஆசிரியர்களிடம், ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு கல்லூரிகளின் கல்வி, ஆராய்ச்சி தரம் உயரும்; தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளை போல, அரசு கல்லூரிகளும் மேம்படும். இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன்: அப்துல் கலாம்
"மனித சமுதாயம், மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.


ராமநாதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது: நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பதின் மூலம் மனநிறைவோடு வாழலாம். 

மகாத்மா காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அவரது தாயார், "மகனே, உன் வாழ்வில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து, அவரது வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நீ மனிதனாக பிறந்ததற்கான பலனை அடைந்து விடுவாய்" என்றார். 

எனவே, அந்த அறிவுரையை பின்பற்றி, நீங்கள் அடுத்தவர் துன்பப்படும் வேளையில், அவர்களது துன்பங்களை துடைத்து, துணையாக இருக்க வேண்டும். உலகில் யாராக இருந்தாலும் சாதிக்க முடியும், அதற்கு நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருந்தால் சாதனை எளிது, என்றார். 

அணு மின்சாரத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என, கலாமிடம் சிலர் கேட்டதற்கு, அவர், "நீர் மின்சாரம், அணு மின்சாரம் தூய்மையானது, மற்றவை சுற்றுசூழலை பாதிக்கக்கூடியது. இதனால், அணுமின்சாரத்தை வரவேற்கிறேன்,'' என்றார். 

மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, நான் ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன், இதுதான் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.

எல்லையில் ராணுவ வீரர்கள் தலையை வெட்டி எடுத்த சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, மனித சமுதாயம் மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என்று கலாம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment