Friday, May 31, 2013

SSLC RESULT - MARCH 2013

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்

              அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. 
          அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப் படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள். 

          இதற்குமுக்கிய காரணம் மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதுதான், என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆங்கில வழியில் படித்தால்தான் எதிர்காலத்திற்கு நல்லது என்று பெரும்பாலோர் நினைப்பது கண்கூடு. தமிழ் வழியில் படித்த முந்தைய தலைமுறையினர் தன் பிள்ளைகளை எவ்வளவு செலவானாலும் ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்க வைக்கவேண்டும். வசதி வாய்ப்பு அற்றவர்களும், படிப்பு வராத மாணவர்களும்தான் அரசுப் பள்ளிகளில்தான் படிப்பார்கள். அவர்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள். நாம் அப்போது வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. நம் அரசு பள்ளியில் சேர்ப்பது கௌரவத்திற்கு இழுக்கானது போன்ற எண்ணங்கள் பல பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.

          இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப் பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் முதல் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்க்கப் பட்டனர். தமிழ்வழிக் கல்வி இருந்தும் பெற்றோர்கள் ஆங்கில வழியையே தேர்ந்தெடுத்தனர். ஒருவர் கூட தமிழ் வழியில் சேராத பள்ளிகளும் உண்டு. சென்னையில் இப்படி சில மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.

            இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அனுமதித்திருக்கக் கூடும். சாதரணமாக 1:40(அதாவது ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள்) என்பது அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமாகும். ஆனால் இப்போது 1:20 அளவுக்கு குறைந்து விட்டது. இதனால் பல பள்ளிகளில் (அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உட்பட) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வர, மாணவர் எண்ணிக்கையோ குறைந்து வர ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை மிக தனியார் பள்ளிகளில் அவர்கள் செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதுவும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த ஆண்டு கணிசமான அளவுக்கு உபரி ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு கட்டாய மாறுதல் செய்யப்பட்டனர். அங்காவது மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எவ்வளவு குறைவாக மாணவர்கள் இருந்தாலும் ஒராசிரியர் பள்ளிகள் கூடாது என்ற விதியின் படி இரண்டு ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 40 க்கும் குறைவாகவே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆசிரியர் ஒய்வு பெற்று விட்டால் அப்பணியிடம் நீக்கப்பட்டுவிடும்

           தொடக்கக் கல்வியைப் பொருத்தவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட இப்போது உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக குறைந்து வருவதால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் காரணமாகவே ஆங்கில மீடியம் தொடங்கப் பட்டால் மாணவர் எண்ணிக்கை கூடும். உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியத் தொகை வீணாகாமல் இருக்கும். உபரி ஆசிரியர்கள் என்பதால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியாது. பணிப்பாதுகாப்பு அளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவது உபரி ஆசிரியர்கள்தான். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா என்பது இந்த ஆண்டு சேரும் மாணவர் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். லட்சங்கள் கொடுத்து நகர்ப்புறங்களுக்கு மாறுதல் பெரும் ஆசிரியர்கள் எப்போது வேறு ஒன்றியத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ தூக்கி அடிக்கப் படுவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்

          அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்து விட முடியும். ஆனால் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் இதுபோன்ற மாறுததல்களுக்கு அதிக வாய்ப்பில்லை. பணிப்பாதுகாப்பு இருப்பதால் ஒய்வு பெறும் வரை உபரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 
           ஆங்கில வழிக் கல்வியால் அதிக மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தனியார் பள்ளிகளைப் போல பல்வேறு விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் மாணவர் பிடிக்கும் வேலையில் இறங்கி வருகிறது. மாணவர் இன்றி சில பள்ளிகள் மூடும் நிலைக்குக் கூட தள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி ஓரளவிற்காவது அப் பள்ளிகளை மீட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆசிரியர்களும் தங்கள் பணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

          ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிதி உதவி பள்ளிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். ஆனால் இப்பள்ளிளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில்சேரும் மாணவர்களை இவர்கள் கவர்ந்து இழுத்து விடுவார்கள் என்ற கருத்தும் உண்டு.

               அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப் படுத்துவதால் காலப் போக்கில் தமிழ் வழிக் கல்வி முறையே இருக்காது. இது அரசே தமிழை அழிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்று கருணாநிதி வைகோ உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
          இதற்கு எதிரான கருத்தைக் கூறுவோர் அரசுபள்ளிகளில் ஆங்கில வழியை எதிர்ப்பவர்கள் ஒருவர்கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தாய்மொழி மூலமே சிறந்த கற்றல் திறனை பெறமுடியும் என்பவர்கள் முதலில் அதற்கு முன் உதாரணமாக விளங்கட்டும் பின்னர் ஆங்கில வழியை எதிர்க்கட்டும். தன் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கவேண்டும் ஏழை மக்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி என்பது எவ்விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி என்ற பெயரில் அவர்கள் முன்னேற்றத்தை தடை செய்வது சரியா என்று கேட்கின்றனர்.

           பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +2 ஆங்கில வழி படிப்பவர் நிறையபேர் உண்டு. ஏன் ஆங்கில வழியில் சேர்ந்தோம் என்று எண்ணி வருந்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில வழி கடினமாக இருக்கும் . அவர்களால் +2 வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிகிறது. முதலில் இருந்தே ஆங்கிலத்தில் படித்தால் இந்த கஷ்டங்கள் இருக்காது என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.தாய்மொழி வழியாக பெறக்கூடிய கல்வியே சிறந்தது. என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்திகூட தாய்மொழி வழிக் கல்வியையே ஆதரித்தார். அது உண்மைதான் என்றாலும் உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டி இருக்கிறது. ஆங்கில வழியில் படித்தவர்களே வேலை வாய்ப்பை அதிக அளவில் பெற முடிகிறது என்று நம்பப்படுவதும் ஆங்கில வழியைவிரும்புவதகு ஒரு காரணமாக அமைகிறது
ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்கு மேல் பணம்கட்ட வழியின்றியோ அல்லது சரியாக படிக்காத காரணத்தாலோ தமிழ் வழியில் சேருபவர்கள், தமிழும் வராமல் ஆங்கிலமும் வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது

            பட்டப் படிப்பு வரை கூட ஆங்கிலத்தில் படித்து விட்டாலும் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதவர் பலர் உள்ளனர். வீட்டில் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிகிறது.

            இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க முடியமா? ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான் தரமான கல்வியை அளிக்க முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன் விரும்புவதில்லை? இவற்றை இன்னும் கொஞ்சம் ஆராய்வோம். இதனால் சமுதாயத்தில் ஏற்பட இருக்கிற சிக்கல்கள் - இடர்பாடுகள் என்ன?
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


 
              இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
                      அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

                    ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

                ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

                  இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

               ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு (மார்ச் - 2013) - நாளை மதிப்பெண் அட்டவணைப்பட்டியல் வெளியிடப்படும்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

விடுவிப்பு படிவம்


செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

           ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
 
            அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
 
          மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

           முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.


2,881 காலி இடங்கள்
           அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.

               அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

நாளை முதல் விண்ணப்பம்
            இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

              விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.

கடைசி நாள்
              விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

           எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் எங்கு கிடைக்கும்?
                முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்திற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்


         சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;– 

              ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 


               அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந் தேதிக்குள் நேரில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்
          தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

     மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

          தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தின் முடிவு, ஜூன் மாதத்தில் அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.

          மாணவர்கள் நலன் கருதி, கல்வியாண்டு துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு "கவுன்சிலிங்" நடத்தி முடிக்கப்படும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர்கள் பொறுப்பு ஆய்வாளர்களாகவே நீடிக்கின்றனர்.

               மாநிலத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்

           முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

         2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

          விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ரொக்கமாக செலுத்தி பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அறிவுரையின்படி எந்தவித தவறுமின்றி ஓ.எம்.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேர்வு கட்டண செலானுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ள வேண்டும்.

              பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் அனுப்பபடும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

              பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகங்களில் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு


          சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

         இதையடுத்து, திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவை, சென்னை பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றது. சென்னை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில், 110க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

          இக்கல்லூரிகளில், இளங்கலை, முதுகலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த, 27ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு ஆசிரியரும், காலையில், 20 தாள்கள், பிற்பகலில், 20 தாள்கள் என, நாளொன்றுக்கு, 40 விடைத்தாள்களை திருத்த வேண்டும்.

           இந்நிலையில், நாளொன்றுக்கு, திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கையை, இளங்கலை வகுப்புகளுக்கு, 40ல் இருந்து, 50 ஆகவும், முதுகலை வகுப்புகளுக்கு, 30ல் இருந்து, 40 ஆகவும் உயர்த்தி, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது.
விடைத்தாள் திருத்தும் எண்ணிக்கை உயர்த்தியதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணி தரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சென்னை எத்திராஜ் கல்லூரி மையம், தியாகராய நகர் மைய ஆசிரியர்கள், 700க்கும் மேற்பட்டோர், விடைத்தாள் திருத்தும் பணிகளை, நேற்று புறக்கணித்தனர். 40 விடைத்தாளாக மாற்றும் வரை, போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வேதியியல் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பார்த்து படித்து, சரியாக திருத்த வேண்டும் என்றால், 40 விடைத்தாள்களை மட்டுமே, ஒரு நாளில் திருத்த முடியும். அதற்கு மேல் விடைத்தாள்களை திருத்தும் போது, ஆசிரியர்களின் பணிதிறன் பாதிக்கப்படும். இதனால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
தற்போது, விடைத்தாள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதால், காலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்தும், மதியம் கூடுதலாக, ஒரு மணி நேரம் இருந்தும் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.
ஒருநாள் அகவிலைப்படியாக, ஆசிரியர்களுக்கு, 120 ரூபாய் வழங்கப்படுகிறது. தினமும், 10 விடைத்தாள் என, நான்கு நாட்கள், 40 விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் கூடுதலாக திருத்துவதால், ஒரு நாள் ஆசிரியர் சம்பளம் மிச்சமாகிறது. பணம் சேமிக்கும் பணிகளை, கல்வியில் மேற்கொள்ள கூடாது. இதனால், கல்வி தரம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் கூறுகையில், "விடைதாள் திருத்தும் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர்களின் வேலை பளுவை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே இருந்த நடைமுறைபடி, நாளொன்றுக்கு, 40 விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தினால் போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
துணைவேந்தர் அறிவிப்பையடுத்து, இன்றிலிருந்து ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்


சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013


          சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

             இந்த 2013ம் ஆண்டில் சென்னை மண்டலம் ஒட்டுமொத்தமாக 91.83% தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி விபரம் வருமாறு;
மாணவர்கள் - 90.07%
மாணவிகள் - 93.92%
பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை
சென்னை மண்டல விபரம் - 2013
பள்ளிகளின் எண்ணிக்கை - 1202
தேர்வு மையங்களின் எண்ணிக்கை - 464



Tuesday, May 28, 2013

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு

Monday, May 27, 2013

School Education BT Assts/BRTE/PET/Spl Trs - Transfer Counseling Schedule Now Announced.
           
     2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.          

28.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டத்திற்குள் )

29.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம் )



           இதற்கு முன்னதாக 27.5.13 அன்று சென்ற வருடம் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
          

Department Exam - DI Paper 1 & 2 & Statistics

Department Exam - EO & Account Test Materials

பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை

              1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி 04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
 
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை
             2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.
 
         காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக மீதமுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மற்றொரு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
           வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களை தமிழில் படித்தவர்களுக்காக நடைபெற்ற இந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
                        தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், ஆசிரியர் கல்வி பட்டம் ஆகியவற்றை முற்றிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்,
             ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் முற்றிலும் தமிழ் வழியில் படிக்காமலேயே தமிழ் வழியில் முன்னுரிமை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆகவேதான் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
               மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்தும், இளநிலை, முதுநிலைப் பட்டத்துக்கு கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்தும், ஆசிரியர் கல்விப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும் சான்றிதழ்களைப் பெற்றுவர வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியாததாலும் பெரும்பாலானோர் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
             மே 27-ல் ஒரு வாய்ப்பு: தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்கெனவே பங்கேற்றவர்கள், இப்போது உரிய சான்றிதழ்களைப் பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை (மே 27) நேரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
PG Botany - Appointment Counseling on 27.05.2013
            
       மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில் (Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. 
 
              தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் 27.05.2013 (திங்கட்கிழமை) அன்று 9.00 மணியளவில் அவரவர் முகவரிக்குட்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்குச் சென்று இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமன ஆணை பெறுமாறு  கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.ஆசிரியர் தேர்வு வாரியம்/தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அனுப்பப்பட்ட தெரிவுக்கடிதத்தின் அடிப்படையில் கல்விச்சான்றுகளை சரிபார்த்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

            தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

            தமிழகத்தில், இந்த ஆண்டு, 8.53 லட்சம், மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். பள்ளி மூலமாக தேர்வு எழுதியவர்களில், 7.4 லட்சம் மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

           இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில், தங்களின் கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

             மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

              புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

              பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.
         "தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

          இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியன இணைந்து, "தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகள்" என்ற தலைப்பில், மண்டல அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை, சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில், நேற்று துவக்கின.

        கருத்தரங்கை துவக்கி வைத்து, மான்தா பேசியதாவது: தொழிற்துறையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், தொழில்நுட்பக் கல்வியின் தரம் மேம்படுவதுடன், மாணவர்கள், படிப்பை முடித்ததும், உடனுக்குடன், வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகும்.
ஆனால், இரு துறைகளுக்கும் இடையே, பெரும் இடைவெளி இருக்கிறது. இதை, சரி செய்ய வேண்டும்.பொது துறை நிறுவனங்கள் பயிற்சிமேலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் துவக்கி உள்ளோம்.

         முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 43 பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், அனைத்து நவீன வசதிகளைக் கொண்டவை.தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 400 மணி நேரம், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

          இதற்காக, மாணவர்கள், கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏ.ஐ.சி.டி.இ., சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, நிதியை வழங்கும். அந்நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு மான்தா பேசினார்.

           பின், நிருபர்களிடம், மான்தா கூறியதாவது: தமிழகத்தில், 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எட்டு பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன்வந்து, மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.

           தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என, அனைத்து மாநிலங்களுக்கும், கடிதம் எழுதினோம். மகாராஷ்டிரா மட்டும், பதில் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட, வேறு எந்த மாநிலங்களும், உயர்கல்வியின் தர மேம்பாடு குறித்து, பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மான்தா கூறினார்.

           தமிழகத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், 1.30 லட்சம் இடங்களே, ஆண்டுதோறும் சராசரியாக நிரம்புகின்றன. மீதம் உள்ளவற்றில், மாணவர்கள் சேர்வதில்லை.

           இந்நிலையில், 17 பொறியியல் கல்லூரிகளை, புதிதாகத் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, இடங்கள் நிரம்பும் என்ற நிலையில், கல்லூரி ஒன்றுக்கு, தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், காலியாகவே இருக்கின்றன.

           புதிதாகத் துவக்கப்படும் கல்லூரிகளிலும், இதே நிலை காணப்படும்.இந்த நிலையைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், இடங்களை நிரப்ப, மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா!

          நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.

பழங்காலந்தொட்டே, மருத்துவ துறையில், இந்தியாவிற்கென்று ஒரு தனிப் பாரம்பரியமே உண்டு. சாரகா மற்றும் சுஸ்ருதா போன்றவர்கள், இந்திய மருத்துவப் பெருமைக்கு சில உதாரணங்கள். இன்றைய நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல மாணவர்களும்கூட, இந்தியா வந்து மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள்.
சீனாவைப் பின்பற்றி...
சமீப வருடங்களில், குறைந்த மற்றும் தரமான மருத்துவப் படிப்புக்கேற்ற வெளிநாடாக சீனாவே விளங்கி வருகிறது. உலகத் தரத்திலான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சீனாவை நோக்கி வெளிநாட்டு மாணவர்கள் செல்வதற்கு முக்கிய காரணங்கள். ஆனால், கடந்த சில வருடங்களில், இந்தியாவும் சுதாரித்துக்கொண்டு, மருத்துவ துறையில் அதிக முதலீடுகளை செய்து, மருத்துவக் கல்வியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைப் புதுப்பித்து, சீனாவின் வழியில் தானும் பயணப்பட துவங்கியுள்ளது.
தரப்படுத்தும் நடவடிக்கைகள்
இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்களிலிருந்து தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில், அரசு, பல கொள்கை முடிவுகளை வகுத்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணம், தனியார் மருத்துவப் பல்கலைகளை தீவிரமாக கண்காணித்தல், மருத்துவ நுழைவுத்தேர்வில் கண்டிப்பான, கடினமாக முறைகளை கையாளுதல், பாடத்திட்டங்களை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மாற்றங்களை கொண்டுவருதல், புதிய ஆராய்ச்சிகளில் மருத்துவ பேராசிரியர்களை ஈடுபடுத்தல், நவீன மருந்துகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதன் மூலமாக, வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் செயல்பாடு நடைபெற்று வருகிறது.
அனைத்திற்கும் வாய்ப்பு
பலவிதமான மருத்துவ சிகிச்சை முறைகளை பின்பற்றும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கே, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பல்வேறான மருத்துவ துறைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ துறையிலும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளதோடு, அவற்றுக்கென்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிர்வாக அமைப்புகளும் உள்ளன.
இந்தியாவிலுள்ள சில மருத்துவ கல்லூரிகள், உலகளவில், சிறந்ததாக கருதப்படுகின்றன. உலகளவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களில், பல இந்தியர்களும் அடங்கியுள்ளனர். அவர்கள், மேல்படிப்பை வெளிநாடுகளில் முடித்தவர்களாயினும், தங்களின் ஆரம்பநிலை மருத்துவப் படிப்பை, இந்தியாவில்தான் மேற்கொண்டனர். அதுதான் அவர்களின் படிக்கல்.
இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவமனை
இந்திய மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரு மாணவர், தனது இரண்டாமாண்டு படிப்பின்போதே, மருத்துவமனை செல்லாம். ஆனால், சீனாவிலோ, (2, 3 மற்றும் 4வது செமஸ்டரின்போது ஏற்பாடு செய்யப்படும் வகுப்புகளுக்காக தவிர) இன்டர்ன்ஷிப்பின்போது மட்டுமே மருத்துவனை செல்ல, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்மூலம், சீனாவை விட, இந்தியாவில் மருத்துவம் படிப்பவர்கள், அதிகளவிலான நடைமுறை மருத்துவ அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாட்டின் மருத்துவ மாணவர்கள், நடைமுறை மருத்துவ அனுபவம் மற்றும் அறிவைப் பெறுவதற்கு, புகழ்பெற்ற மருத்துவர்களின் குழுவிலும் இணைய அனுமதி உண்டு.
இந்தியாவின் பல புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல வெளிநாட்டு மாணவர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் மருத்துவம் படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, கடுமையான விசா கெடுபிடிகள் என்று எதுவுமில்லை. இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்புவோர், மருத்துவ கல்வித்துறையில் உள்ள பெயர்பெற்ற அமைப்புகளிடம் விசாரித்து, அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
இந்திய மருத்துவ சேர்க்கை நடைமுறைகள்
இந்திய மருத்துவப் பல்கலைகளில், மருத்துவ சேர்க்கை செயல்பாடு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் தொடங்குகிறது. அறிவியலை முக்கியப் பாடமாக கொண்டு, பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வுகள், பொதுவாக, 2 முறைகளில் நடத்தப்படுகின்றன. அகில இந்திய நிலை மற்றும் மாநில அளவிலான நிலை போன்றவையே அவை.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள், பொது PC பிரிவு மாணவர்கள் 45%, OBC/SC/ST பிரிவினர்(OBC-non creamylayer) 40% பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும், குறைந்தபட்சம், 17 வயதை கடந்திருக்க வேண்டும். அதேசமயம், 25 வயதை தாண்டியிருக்கக்கூடாது.
இந்தியாவிலுள்ள சில புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனங்கள்
AIIMS - DELHI
CMC - VELLORE
JIPMER - PONDYCHERRY
ARMED FORCES MEDICAL COLLEGE - PUNE
MAULANA AZAD MEDICAL COLLEGE - DELHI
GRANT MEDICAL COLLEGE - MUMBAI
MADRAS MEDICAL COLLEGE - CHENNAI
ST. JOHN&'S MEDICAL COLLEGE - BANGALORE
BANGALORE MEDICAL COLLEGE - BANGALORE
STANLEY MEDICAL COLLEGE - CHENNAI
OSMANIA MEDICAL COLLEGE - HYDERABAD

Friday, May 24, 2013


கல்வித்துறையில் ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களா நீங்கள்..?
syllabus



இந்த இணைப்பில் Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) - http://www.tnschools.gov.in/Draft-Syllabus-For-XI-XII.html உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தின் வரைவைப் படியுங்கள். 

அடுத்த 10 ஆண்டுகளுக்கு,  பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளதா?

இப்போது அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களை உள்ளடக்கி புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? 

புதிய பாடத்திட்டம் திருப்தி அளிக்கிறதா? இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கலாம்? 




உங்கள் கருத்துகளை இம்மாதம் (மே) 27-ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். 


(குறிப்பு: புதிய பாடத்திட்டம் தொடர்பாக  நீங்கள் அனுப்பும் கருத்துகளை, scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in என்ற பள்ளிக் கல்வித் துறையின் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிடவும்.)



Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)


This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancydownload                             
Advance Tamildownload
Bio-Botany download
Bio-chemistrydownload
Bio-Zoologydownload
Business MathematicsXI , XII
Chemistry download
CommerceXI-1 , XI-2 , XII-1 , XII-2
Communicative Englishdownload
Computer Sciene download
Economicsdownload
Englishdownload
Ethics & Indian Culturedownload
Geographydownload
Historydownload
Home Science download
Mathematics download
Microbiology download
Nursing download
Nutrition & Dietetics download
Physicsdownload
Political Sciencedownload
Statistics download
Tamil XI , XII

AEEO Revised Seniority List for 2013-14 | திருத்தி அமைக்கப்பட்ட 1 லிருந்து 813 வரை வரிசையிலுள்ள 01.01.2013ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற தகுதியான ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியீடு
+2 உடனடி தேர்வு ஜூன் 2013 கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு


தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் 2 பேர் பணியிட மாறுதல் ஆணைகளை பெற்றனர். இந்த கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதாக இதில் பங்கேற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர், நெல்லை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான புதிய பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்படுமா?

தமிழகத்தில் கல்வித்துறை கடந்த 20ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக நடந்தது. தொடந்து, முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வு நடத்துவதற்கு முன் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 50 மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட் டது. ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு மே 20ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சட்டசபையில் முதல்வர் இந்த கல்வி ஆண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

மேல்நிலைப் பள்ளியாக தகுதி பெறும் 100 பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் என 900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50 தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 500 பேராவது நியமிக்கப்படலாம்.

எனவே, தரம் உயர்வு பெறும் 150 பள்ளிகளின் பெயர் பட்டியல்களை கலந்தாய்வுக்கு முன் உடனடியாக வெளியிட வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கத்தினரும் வலியுறுத்துகின்றனர். ஒருவேளை தாமதமாக பட்டியல் வெளியிடப்பட் டாலும், இதனால் உருவாகும் புதிய பணி இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தி, மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்களுக்கு உதவும் தகவல் மையம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.2013-14 கல்வி ஆண்டிற்கான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவுள்ளது. நுழைவுத்தேர்வுகள் ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்படுகிறது.இந்நிலையில் மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பங்கள் பெறுவது குறித்தும் அறிந்து கொள்ளவும் பல்கலைக்கழக நிர்வாகி உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட அலுவலகத்தில் கே பிரிவு அலுவலகம் அருகே தகவல் உதவி மையம் (MAY I HELP YOU) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள மாணவர்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மையத் தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

தேதி பின்னர் அறிவிக்கப்படும்: உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தக் கலந்தாய்வுகளுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. 

           அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.  
               ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்
Posted: 24 May 2013 04:44 AM PDT
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2001 டிச., 31ல், முதல் நிலை மொழியாசிரியர்கள், பணி நியமனம் பெற்றவர்கள், பி.எட்., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. 

மற்ற பாட ஆசிரியர்களுக்கு, 2013, ஜன., 1 வரையிலான பதவி மூப்பு, கருத்தில் கொள்ளப்பட்டது. தமிழ் மொழியில், பி.லிட்., பட்டம் பெற்றவர்கள், நேரடியாக தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், பி.எட்., பட்டம் பெறாததால், தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியாது. 

கடந்த, 2001டிச., 31க்கு முன், பி.எட்., பட்டம் பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே, தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதில் தமிழ், தெலுங்கு மொழி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த தெலுங்கு ஆசிரியர் சந்திரசேகர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் நடக்கயிருந்த, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 

விருதுநகர் முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) அமுதவள்ளி கூறுகையில், "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, கோர்ட் தடை உத்தரவு வழங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.