Friday, May 31, 2013

SSLC RESULT - MARCH 2013

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்

              அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. 
          அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப் படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள். 

          இதற்குமுக்கிய காரணம் மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதுதான், என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆங்கில வழியில் படித்தால்தான் எதிர்காலத்திற்கு நல்லது என்று பெரும்பாலோர் நினைப்பது கண்கூடு. தமிழ் வழியில் படித்த முந்தைய தலைமுறையினர் தன் பிள்ளைகளை எவ்வளவு செலவானாலும் ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்க வைக்கவேண்டும். வசதி வாய்ப்பு அற்றவர்களும், படிப்பு வராத மாணவர்களும்தான் அரசுப் பள்ளிகளில்தான் படிப்பார்கள். அவர்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள். நாம் அப்போது வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. நம் அரசு பள்ளியில் சேர்ப்பது கௌரவத்திற்கு இழுக்கானது போன்ற எண்ணங்கள் பல பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.

          இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப் பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் முதல் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்க்கப் பட்டனர். தமிழ்வழிக் கல்வி இருந்தும் பெற்றோர்கள் ஆங்கில வழியையே தேர்ந்தெடுத்தனர். ஒருவர் கூட தமிழ் வழியில் சேராத பள்ளிகளும் உண்டு. சென்னையில் இப்படி சில மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.

            இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அனுமதித்திருக்கக் கூடும். சாதரணமாக 1:40(அதாவது ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள்) என்பது அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமாகும். ஆனால் இப்போது 1:20 அளவுக்கு குறைந்து விட்டது. இதனால் பல பள்ளிகளில் (அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உட்பட) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வர, மாணவர் எண்ணிக்கையோ குறைந்து வர ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை மிக தனியார் பள்ளிகளில் அவர்கள் செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதுவும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த ஆண்டு கணிசமான அளவுக்கு உபரி ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு கட்டாய மாறுதல் செய்யப்பட்டனர். அங்காவது மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எவ்வளவு குறைவாக மாணவர்கள் இருந்தாலும் ஒராசிரியர் பள்ளிகள் கூடாது என்ற விதியின் படி இரண்டு ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 40 க்கும் குறைவாகவே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆசிரியர் ஒய்வு பெற்று விட்டால் அப்பணியிடம் நீக்கப்பட்டுவிடும்

           தொடக்கக் கல்வியைப் பொருத்தவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட இப்போது உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக குறைந்து வருவதால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் காரணமாகவே ஆங்கில மீடியம் தொடங்கப் பட்டால் மாணவர் எண்ணிக்கை கூடும். உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியத் தொகை வீணாகாமல் இருக்கும். உபரி ஆசிரியர்கள் என்பதால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியாது. பணிப்பாதுகாப்பு அளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவது உபரி ஆசிரியர்கள்தான். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா என்பது இந்த ஆண்டு சேரும் மாணவர் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். லட்சங்கள் கொடுத்து நகர்ப்புறங்களுக்கு மாறுதல் பெரும் ஆசிரியர்கள் எப்போது வேறு ஒன்றியத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ தூக்கி அடிக்கப் படுவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்

          அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்து விட முடியும். ஆனால் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் இதுபோன்ற மாறுததல்களுக்கு அதிக வாய்ப்பில்லை. பணிப்பாதுகாப்பு இருப்பதால் ஒய்வு பெறும் வரை உபரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 
           ஆங்கில வழிக் கல்வியால் அதிக மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தனியார் பள்ளிகளைப் போல பல்வேறு விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் மாணவர் பிடிக்கும் வேலையில் இறங்கி வருகிறது. மாணவர் இன்றி சில பள்ளிகள் மூடும் நிலைக்குக் கூட தள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி ஓரளவிற்காவது அப் பள்ளிகளை மீட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆசிரியர்களும் தங்கள் பணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

          ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிதி உதவி பள்ளிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். ஆனால் இப்பள்ளிளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில்சேரும் மாணவர்களை இவர்கள் கவர்ந்து இழுத்து விடுவார்கள் என்ற கருத்தும் உண்டு.

               அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப் படுத்துவதால் காலப் போக்கில் தமிழ் வழிக் கல்வி முறையே இருக்காது. இது அரசே தமிழை அழிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்று கருணாநிதி வைகோ உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
          இதற்கு எதிரான கருத்தைக் கூறுவோர் அரசுபள்ளிகளில் ஆங்கில வழியை எதிர்ப்பவர்கள் ஒருவர்கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தாய்மொழி மூலமே சிறந்த கற்றல் திறனை பெறமுடியும் என்பவர்கள் முதலில் அதற்கு முன் உதாரணமாக விளங்கட்டும் பின்னர் ஆங்கில வழியை எதிர்க்கட்டும். தன் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கவேண்டும் ஏழை மக்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி என்பது எவ்விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி என்ற பெயரில் அவர்கள் முன்னேற்றத்தை தடை செய்வது சரியா என்று கேட்கின்றனர்.

           பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +2 ஆங்கில வழி படிப்பவர் நிறையபேர் உண்டு. ஏன் ஆங்கில வழியில் சேர்ந்தோம் என்று எண்ணி வருந்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில வழி கடினமாக இருக்கும் . அவர்களால் +2 வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிகிறது. முதலில் இருந்தே ஆங்கிலத்தில் படித்தால் இந்த கஷ்டங்கள் இருக்காது என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.தாய்மொழி வழியாக பெறக்கூடிய கல்வியே சிறந்தது. என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்திகூட தாய்மொழி வழிக் கல்வியையே ஆதரித்தார். அது உண்மைதான் என்றாலும் உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டி இருக்கிறது. ஆங்கில வழியில் படித்தவர்களே வேலை வாய்ப்பை அதிக அளவில் பெற முடிகிறது என்று நம்பப்படுவதும் ஆங்கில வழியைவிரும்புவதகு ஒரு காரணமாக அமைகிறது
ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்கு மேல் பணம்கட்ட வழியின்றியோ அல்லது சரியாக படிக்காத காரணத்தாலோ தமிழ் வழியில் சேருபவர்கள், தமிழும் வராமல் ஆங்கிலமும் வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது

            பட்டப் படிப்பு வரை கூட ஆங்கிலத்தில் படித்து விட்டாலும் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதவர் பலர் உள்ளனர். வீட்டில் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிகிறது.

            இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க முடியமா? ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான் தரமான கல்வியை அளிக்க முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன் விரும்புவதில்லை? இவற்றை இன்னும் கொஞ்சம் ஆராய்வோம். இதனால் சமுதாயத்தில் ஏற்பட இருக்கிற சிக்கல்கள் - இடர்பாடுகள் என்ன?
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


 
              இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
                      அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

                    ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

                ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

                  இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

               ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு (மார்ச் - 2013) - நாளை மதிப்பெண் அட்டவணைப்பட்டியல் வெளியிடப்படும்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

விடுவிப்பு படிவம்


செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

           ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
 
            அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
 
          மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

           முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.


2,881 காலி இடங்கள்
           அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.

               அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

நாளை முதல் விண்ணப்பம்
            இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

              விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.

கடைசி நாள்
              விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

           எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் எங்கு கிடைக்கும்?
                முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்திற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்


         சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;– 

              ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 


               அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந் தேதிக்குள் நேரில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்
          தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

     மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

          தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தின் முடிவு, ஜூன் மாதத்தில் அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.

          மாணவர்கள் நலன் கருதி, கல்வியாண்டு துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு "கவுன்சிலிங்" நடத்தி முடிக்கப்படும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர்கள் பொறுப்பு ஆய்வாளர்களாகவே நீடிக்கின்றனர்.

               மாநிலத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்

           முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

         2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

          விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ரொக்கமாக செலுத்தி பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அறிவுரையின்படி எந்தவித தவறுமின்றி ஓ.எம்.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேர்வு கட்டண செலானுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ள வேண்டும்.

              பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் அனுப்பபடும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

              பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகங்களில் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு


          சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

         இதையடுத்து, திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவை, சென்னை பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றது. சென்னை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில், 110க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

          இக்கல்லூரிகளில், இளங்கலை, முதுகலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த, 27ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு ஆசிரியரும், காலையில், 20 தாள்கள், பிற்பகலில், 20 தாள்கள் என, நாளொன்றுக்கு, 40 விடைத்தாள்களை திருத்த வேண்டும்.

           இந்நிலையில், நாளொன்றுக்கு, திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கையை, இளங்கலை வகுப்புகளுக்கு, 40ல் இருந்து, 50 ஆகவும், முதுகலை வகுப்புகளுக்கு, 30ல் இருந்து, 40 ஆகவும் உயர்த்தி, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது.
விடைத்தாள் திருத்தும் எண்ணிக்கை உயர்த்தியதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணி தரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சென்னை எத்திராஜ் கல்லூரி மையம், தியாகராய நகர் மைய ஆசிரியர்கள், 700க்கும் மேற்பட்டோர், விடைத்தாள் திருத்தும் பணிகளை, நேற்று புறக்கணித்தனர். 40 விடைத்தாளாக மாற்றும் வரை, போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வேதியியல் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பார்த்து படித்து, சரியாக திருத்த வேண்டும் என்றால், 40 விடைத்தாள்களை மட்டுமே, ஒரு நாளில் திருத்த முடியும். அதற்கு மேல் விடைத்தாள்களை திருத்தும் போது, ஆசிரியர்களின் பணிதிறன் பாதிக்கப்படும். இதனால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
தற்போது, விடைத்தாள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதால், காலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்தும், மதியம் கூடுதலாக, ஒரு மணி நேரம் இருந்தும் விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.
ஒருநாள் அகவிலைப்படியாக, ஆசிரியர்களுக்கு, 120 ரூபாய் வழங்கப்படுகிறது. தினமும், 10 விடைத்தாள் என, நான்கு நாட்கள், 40 விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் கூடுதலாக திருத்துவதால், ஒரு நாள் ஆசிரியர் சம்பளம் மிச்சமாகிறது. பணம் சேமிக்கும் பணிகளை, கல்வியில் மேற்கொள்ள கூடாது. இதனால், கல்வி தரம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் கூறுகையில், "விடைதாள் திருத்தும் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர்களின் வேலை பளுவை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே இருந்த நடைமுறைபடி, நாளொன்றுக்கு, 40 விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தினால் போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
துணைவேந்தர் அறிவிப்பையடுத்து, இன்றிலிருந்து ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்


சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013


          சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

             இந்த 2013ம் ஆண்டில் சென்னை மண்டலம் ஒட்டுமொத்தமாக 91.83% தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி விபரம் வருமாறு;
மாணவர்கள் - 90.07%
மாணவிகள் - 93.92%
பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை
சென்னை மண்டல விபரம் - 2013
பள்ளிகளின் எண்ணிக்கை - 1202
தேர்வு மையங்களின் எண்ணிக்கை - 464



No comments:

Post a Comment