Friday, May 24, 2013

9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை கையேடு
                                                       IX Standard CCE Tamil
---------------------------------------------------------------------------------------------


TET-ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?
            ''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

             தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)  நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

          தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed)  எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

              தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

             ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

             தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

              150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

                காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

              தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்குhttp://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.'
-----------------------------------------------------------------------------------------------------------------------

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

          பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. 

           அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.  
               ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் - மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
            தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

         தேதி பின்னர் அறிவிக்கப்படும்: உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

             உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

             அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தக் கலந்தாய்வுகளுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

               பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

          பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
          இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இயக்குநர்

              இன்று (மே 24) நடப்பதாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்', தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
          மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
   
                   ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், ""உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு, சிறப்பாசிரியர் பணிமாறுதல் ஆகிய "கவுன்சிலிங்' நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் நேற்று முதல் வினியோகம் ஆரம்பம்

          நேற்று முதல் புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுகங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இருக்கும்.
             ஒரு புகைப்படத்திற்க்கு பதிலாக ரூபாய் நோட்டுகளின் நடுவே உள்ள டிரான்ஸபரென்ட் பக்கத்தில் காந்தியின் உருவம் மாதிரி உங்கள் பாஸ்போர்ட் போட்டு பக்கத்தில் உங்களின் இன்னொரு உருவம் (கோஸ்ட் இமேஜ்) இருக்கும். கடைசி பக்க டீட்டெயில்ஸ் 35 ஆம் பக்கத்திலும் மாறி வரும். இது ஹைடெக் பாஸ்போர்ட் நேற்று முதல் எந்த வித அதிக‌ கட்டணம் இன்றி வழங்கப்பட்டாலும் நேற்றூ சவுதி அரேபியாவில் இந்தியாவில் இருந்து எந்த தகவல் இல்லாததால் இமிகிரேஷனில் 200 பேரை தடுத்து நிறுத்தியிருக்கின்ரனர், இது போல பல நாடுகளிலும் இந்த பிரச்சினை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்க படுவதால் தயவு செய்து பழைய பாஸ்போர்ட் அல்லது இந்தியாவின் ஏதாவது ஒரு போட்டோ ஐடியை எடுத்து சென்றால் நல்லது.
சி.டி.இ.டி.,(CTET) தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

           சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
              மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஆசிரியர்களுக்கான ‘மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை’ ஆண்டுக்கு இரண்டு (ஜனவரி, ஜூலை) முறை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, மத்திய தீபத்திய பள்ளிகள், அந்தமான் நிக்கோபார், சண்டிகர் போன்ற யூனியன் பிரேதேசங்களில் உள்ள மத்திய பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.

          இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் 1ம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் இரண்டையும் எழுதலாம். 1 முதல் 8 வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள், இரண்டு தாள்களையும் எழுதலாம்.

             இத்தேர்வுக்கு ஏப்.16 வரை விண்ணப்பிக்கப்பட்டு, தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட முக்கிய நகரங்களில் ஜூலை 28 அன்று காலை, மாலை என நடக்க இருக்கிறது.

           ஜூலை 3 முதல், ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம். கடந்த ஆண்டு வரை 1.30 மணிநேரமாக இருந்த தேர்வு நேரம், 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

          தாள் 1 காலை 9.30ல் தொடங்கி நன்பகல் 12.00 மணி வரையிலும், தாள் 2, மாலை 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

            பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.
            இதுகுறித்து கால்நடை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை: கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப உள்ளிட்ட இளநிலை பட்ட படிப்புகளில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் உள்ள, 18 மையங்களில், கடந்த, 13ம் தேதி துவங்கி, வரும், 31ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

        பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன், 3ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 600 ரூபாய்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 300 ரூபாய். வரும், 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளன.

          எனவே, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்போர், பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பலாம். ஆனால், அதன் பிறகு, 3ம் தேதிக்குள் அனுப்புவோர், அசல் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து, பல்கலைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

D.El.Ed (D.T.Ed) Application Form | 2013-2014 -தொடக்கக்கல்வி பட்டைய படிப்பிற்கான விண்ணப்படிவம்

மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்

          மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த கலந்தாய்‌வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவி்த்துள்ளது.
                திருத்தி அமைக்கப்பட்ட கால அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை
   ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த
பல்கலைக்கழகங்களுக்கு தொடக்கக் கல்வித்துறை எனில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராலும் பள்ளிக் கல்வித் துறை எனில் தலைமையாசிரியராலும் அனுப்பப்பட்டு மெய்த்தன்மைச் சான்று (Genuinneness) பெறுவது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
           கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படித்தோரின் சான்றை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய போது "அசல் பட்டச் சான்றையும் அசல் மதிப்பெண் பட்டியலையும் அனுப்பினால் தான் மெய்த்தன்மைச் சான்று வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டு பல்கலைக் கழகத்திலிருந்து கடிதம் திருப்பப்பட்டுள்ளது. எனவே இனிமேல் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு உண்மைத்தன்மைச் சான்று கோரி அனுப்பும் போது அசல் சான்றிதழ்களை அனுப்பினால் கால விரயமும் கூடுதல் அஞ்சல் செலவும் தவிர்க்கப்படலாம்.
              உண்மைத் தன்மைச் சான்று பெறப் பல்கலைக் கழகத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வரைவோலையாகச் செலுத்தப்பட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல்வழி/கல்லூரி) பயின்றுள்ள அரசுப்பணியாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விச் சான்றுக்கு உண்மைத்தன்மை அறிய எவ்விதக் கட்டணமும் இல்லை.
THANKS : TESTF

உதயமாகும் புதிய படிப்புகள்

          சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.
           இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், அதிகமானோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500யை தாண்டி விட்டது. ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மற்ற இடத்தில் உள்ள மாணவர்களுக்கும் சென்றடைகிறது.

          சமுதாய சிக்கல்களை தீர்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை, இன்ஜினியர்கள் உருவாக்க வேண்டும். மருத்துவம், எரிசக்தி, நவீன கம்ப்யூட்டர்கள், தொலைதொடர்பு போன்ற துறைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த, இன்ஜினியரிங் அவசியம்.

            மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நீர்வளம், வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவைகளை, இன்ஜினியரிங் துறையின் உதவியுடன் தான் சமாளிக்க முடியும்.

         பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி, இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், போட்டோனிக்ஸ் போன்ற துறைகள் எதிர்காலத்தில் வளர்ச்சியை சந்திக்கும் என நம்பப்படுகிறது.

          காயமடைந்த, பாதிப்படைந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்புகளையும், திசுக்களையும் சீராக்குவதன் குணப்படுத்த பயோடெக்னாலஜி ஆய்வுகள் நடந்து வருகின்றன. பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்துக்கும் இன்ஜினியரிங் அறிவு அவசியம்.

        நானோ சயின்ஸ், நானோ இன்ஜினியரிங் ஆய்வுகள் பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கும் நமக்கு உதவுகின்றன.

        செயற்கை உறுப்புகளை தயாரிக்கவும், சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தவும் நானோபொருட்கள் உதவுகின்றன.

             பொருளின் அளவை குறைக்கவும், அதன் திறனை மேம்படுத்தவும் போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

இயற்கை பேரிடர்களை முன் கூட்டியே அறியும் வகையிலான பொருட்களை உருவாக்குவது பற்றி, மெட்டீரியல் சயின்ஸ் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இன்ஜினியர்கள், தொழில்நுட்ப, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான வரையறைக்குள் செயல்பட்டு, சாதிக்க வேண்டியது அவசியம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு - 1

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை

No comments:

Post a Comment