Tuesday, May 14, 2013

01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-14ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில் கடந்த டிசம்பர் 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது எனவும், பொதுவாக புதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் தேதி முதல் குறைந்தபட்சம் ஓராண்டு  பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது விதி என்றும், எனவே டிசம்பர் 2012ல்
நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இம்மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற தகுதியில்லை, இது குறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார். எனினும் இதுகுறித்து நமது TNKALVI சார்பாக மேற்படி ஐயங்களுக்கு விடை காண தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மேற்படி தகவல்கள் குறித்த நிலை நமது வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும்.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மே 21 பிற்பகலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மே 20 பிற்பகலும் நடத்த உத்தரவு.

2013-14ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 21.05.2013 அன்று முற்பகலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 20.05.2013 முற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  தற்பொழுது 20.05.2013 பிற்பகல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், 21.05.2013 பிற்பகல்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முறையான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - நெறிமுறை கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

DEE - TRANSFER & PROMOTION GUIDELINES ISSUED REG - PROC CLICK HERE...

*13.05.2013 முதல் 17.05.2013 - ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

*18.05.2013 முதல் 20.05.2013 - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்களது ஒன்றியத்திலுள்ள அனைத்து மாறுதல் விண்ணபங்களையும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

*21.05.2013 முதல் 23.05.2013 - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ABC படிவங்களை தயார் செய்ய வேண்டும்.

*23.05.2013 - மாவட்டம் விட்டு மாவட்டம் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திற்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

* பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு மூலம் தற்பொழுது வழங்கப்படும் .

* பொது மாறுதல் வழங்கும் போது முதலில் ஒன்றியத்திற்குள் / நகராட்சிக்குள் உள்ள ஆசிரியர்களுக்கு மாறுதல் அளித்துவிட்டு, பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களில் 2012-2013ஆம் கலியாண்டில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி மாறுதல் அளிக்கப்பட வேண்டும். 

*2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை இந்த ஆண்டும் நீடிக்கிறது.

2003ல் தொகுப்பூதிய ஆசிரியர்களின் 2 ஆண்டு பணி முறிவு காலத்தை இரத்து செய்ய மார்க். கம்யூ னிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவர் கே.பாலபாரதி, வெள்ளியன்று (மே 10) பள்ளிக்கல்வித் துறை மானியக்கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு:
ஆசிரியர் அமைப்புகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறையில் அரசு எடுத்துள்ள நல்ல நடவடிக்கைகளை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வரவேற்கிறார்கள். சமச்சீர் கல்வி மற்றும் மாணவர்களுக்கு வழங்கி யிருக்கக்கூடிய 14 வகையான விலை யில்லா பொருட்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரி தும் உதவிகரமாக இருக்கிறது. ஒரே நாளில் 21 ஆசிரியர்களுக்கு பணி உத்தரவை முதல்வர் வழங்கியிருப்பது பாராட்டுக்குரி யது என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இந்த அடிப்படையில் ஆசிரியர்கள் பலர் தங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் நிச்சயம் அவர் அதை நிறைவேற்றித்தரு வார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித் துள்ளனர்.

தொடக்கப்பள்ளி ஆசி ரியர்கள் இலவச பொருட்களை பள்ளி களுக்கு கொண்டுவருவது உள்பட பல் வேறு வேலைகளை செய்கிறார்கள். அந்த பொருட்களை வாகனங்கள் மூலமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்கும் அந்த பொருட்களை இறக்கி வைப்பதற்கு பள்ளிகளில் உதவியாளர் ஒருவரை நிய மிக்கவேண்டும். மணியடிப்பதில் இருந்து குப்பைகளை கூட்டி பெருக்கும் பணிகள் வரை ஆசிரியர்கள் தான் செய்யவேண்டி யுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் உதவியா ளர் என்ற நியமனமே இது வரை இல்லை. எனவே அந்த ஆசிரியர்களுக்கு உதவி செய்ய உதவியாளர்களை நியமிக்கவேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் 6வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாட்டை நீக்கவேண்டும். 2003ல் தொகுப்பூதிய ஆசிரியர்களின் 2 ஆண்டு கால பணிமுறிவு என்று அறிவிக்கப்பட் டதை ரத்து செய்யவேண்டும். கடந்த கால அரசு செய்த தவறை களையவேண்டும்.

ஊர்புற நூலகர்களாக பலரை நியமித்து பெண்களுக்கு இளைஞர் களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கள் சிறப்பு ஊதியம் பெற்று வருகிறார்கள். அவர்களது பணியை நிரந்திரப்படுத்தி னால் கிராமப்புற மக்களிடம் வாசிப்புத் திறனை அதிகரிக்கமுடியும். வேளாண் கல்வி ஆசிரியர்கள், தொழில்கல்வி ஆசிரி யர்கள், கணினி முடித்திருப்பவர்கள் ஆசி ரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் பணி வழங்கப்படவில்லை. அவர் களுக்கு பணி வழங்கவேண்டும்.
ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட்., பட்டதாரிகள் வலியுறுத்தல்

நாளை முதல் ப்ளஸ் 2 பாடபுத்தகம்?

ப்ளஸ் 2 பாட புத்தகம் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாவரவியல், விலங்கியல் புத்தகங்கள் மட்டும் பின்னர் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தும் அரசின் அறிவிப்பு பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை சிறு கிராமம் போல் ஆக்கிவிட்டது. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில், ஆங்கில அறிவு மிக முக்கியமானது ஆகும். வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் அறிவு களஞ்சியங்களை, ஆங்கிலம் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும், ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே, பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆங்கில அறிவு இல்லாமல், உலகத்தோடு ஒட்ட வாழ்வது என்பது அரிதான செயலாகி விட்டது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளும் தற்போது ஆங்கில கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதை கண்கூடாக காணலாம்.

ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அறிந்து, ஏழை பெற்றோர்களும் மிகவும் கஷ்டப்பட்டு ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, படிக்க வைத்து வருகின்றனர். இதனால், தனியார் ஆங்கிலப்பள்ளிகள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க, அரசு பள்ளிகள் நாளுக்கு நாள் நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைய துவங்கியுள்ளது. ஆனால், தங்கள் வசதியையும் மீறி, ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, தங்கள் குழந்தைகளை பலரும் படிக்க வைத்து வருகிறார்கள். இதனை, ஆங்கில மோகம் என கூறி சிலர் கொச்சைப்படுத்தினாலும், ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.

தற்போது, பல அரசு பள்ளிகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளின் நிலை மற்றும் ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு, கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை துவங்கியது.

தற்போது, தேவைப்படும் அனைத்து பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, வருவாயில் பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளனர். இதன்மூலம், அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என்பது உண்மை.

ஆனால், ஆங்கில வழி கல்வியை மிகவும் தரமான முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். எனவே, ஆங்கில வழி கல்வியை துவங்கும் முன், தகுதி பெற்ற ஆசிரியர்களை இனம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆங்கில வழி கல்வியில், மாணவர்கள் பாடங்களை ஆங்கில வழியில் கற்பதை விட, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்ற தகுதியை பெற வேண்டும் என்பது தான் கட்டாய தேவையாகிறது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் கொண்ட ஆழமான மொழி அறிவு மிக முக்கியம்.

தனியார் ஆங்கில வழி பள்ளிகளில், மாணவர்களுக்கு இதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதே தகுதியில் அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்றால் மட்டுமே, அரசின் நோக்கம் முழுமையடையும்.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல, ஆங்கில வழி கல்வி என்பது முக்கியமல்ல. அதன் முழு பலன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், சிறப்பான ஆங்கில அறிவு பெற்று, அனைத்து சவால்களையும் சமாளிக்கும் திறனைப் பெறவேண்டும்.

இல்லாத பட்சத்தில் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு, தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் திறமையும், தகுதியும் உள்ளவர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.

துவக்கப்பள்ளி முடிக்கும் அரசுப்பள்ளி மாணவன், ஆங்கிலத்தில் சிறப்பாக, சரளமாக பேசும் திறன் உள்ளவனாக வெளியே வர வேண்டும். அதற்கான தகுதியுடைய ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருக்க வேண்டும்.

கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான திட்டங்களை தீட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏழை மாணவனும் ஏற்றம் பெறும் அரசின் இத்திட்டம், முழுமையாக வெற்றி பெறும் நிலை கல்வித்துறையிடம் உள்ளது.

இந்த சிறப்பான வாய்ப்பை நழுவ விடாமல், முழு வெற்றியை பெறச்செய்து, நம் எதிர்கால சந்ததியினர் உயர வழிவகுப்போம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை - நாளிதழ் செய்தி

உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"விளையாட்டு துறையை மேம்படுத்த, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், விளையாட்டை வளர்க்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகளில் இல்லாத குறையை, இதுவரை போக்கவில்லை.

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 13.83 லட்சம் மாணவர்களுக்கு, வெறும், 70 உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற நிலை தான் இப்போதும் இருக்கிறது" என, உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மட்டுமே, அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். உடற்கல்வியையும், உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி கல்வித்துறை, ஓரங்கட்டிவிட்டது என, உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

ஒரு அரசு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற, குறைந்தபட்ச நிலையையாவது, தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின், நீண்ட கால கோரிக்கை. ஆனால், புதிய ஆசிரியர் நியமன அறிவிப்பில், உடற்கல்வி ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவதே கிடையாது என்றும், அவர்கள் புலம்புகின்றனர்.

ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், 14.63 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது.

ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு நடுநிலைப் பள்ளிகளில், 13.83 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இத்தனை லட்சம் மாணவர்களுக்கு, வெறும், 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருக்கின்றனர்.

பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் கிடையாது.

2,488 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, உடற்கல்வியை அளிக்க, உடற்கல்வி இயக்குனர் - நிலை 1ல், 340 பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் - நிலை 2ல், 89 ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த மோசமான நிலையை போக்க வேண்டும், போதுமான உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதும், உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை கவனிக்க, உடற்கல்விக்கு என, தனி இணை இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பதும், இந்த ஆசிரியர்களின், நீண்டகால கோரிக்கை.

இந்த கோரிக்கைகளுக்கு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில், விடிவுகாலம் பிறக்குமா என, ஆசிரியர் எதிர்பார்த்தனர். ஆனால், உடற்கல்விக்கு என, தனி இணைய இயக்குனரை நியமிப்பது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருவதாக மட்டும், அமைச்சர் வைககைச் செல்வன் அறிவித்தார்.

ஆனால், புதிய உடற்கல்வி ஆசிரியர் நியமனம் குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இது, அந்த ஆசிரியர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், எங்களுக்கு விடியல் கிடைக்கும் என, எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைவது தான் மிச்சம். எங்களை, அரசும், அதிகாரிகளும், சுத்தமாக கண்டு கொள்வதில்லை.

கல்வித்துறை விழாக்களுக்கு ஏற்பாடு செய்வது, அழைப்பிதழ்கள் கொடுப்பது, பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தான், எங்களது காலம் கழிகிறது. விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கென, முதல்வர், அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

ஆனால், விளையாட்டுகளை வளர்க்க வேண்டிய அளவிற்கு, உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்கிறார்களா, அவர்களின் நிலை என்ன என்பது குறித்து, எப்போது அறிகிறாரோ, அப்போது தான், எங்களுக்கு விடிவு கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் வேதனையுடன் கூறினர்.
லண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்
சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எச்டி., பட்டம் பெற்ற ராஜேந்திரகுமார், தற்போது லண்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆசிரியராக, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
மேலும் 2012ம் ஆண்டு கார்டிப் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி உள்ளது.

இவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

நான் சென்னை சைதாபேட்டை செயின்ட் மேரி பள்ளியில் துவக்க கல்வியும், ஆசான் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளிக்கல்வியும் படித்தேன். 1988ல் எம்.ஏ. ( பொது நிர்வாகம்) முடித்த பிறகு, 1995ல் பி.எச்டி., பெற்றேன். தற்போது லண்டனில் ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள கணக்காயர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன்.

பட்டம் முடித்தபிறகு சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய உறவினர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் என்பதால், நானும் ஆசிரியர் பணியையே தேர்வு செய்தேன். என்னுடைய ஆசிரியர்கள் பலரை, எனக்கு இந்த தொழிலில் முன்னோடிகளாக கருதுகிறேன்.

இந்த ஆசிரியத் துறையில், நாம் தொடர்ந்து நமது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரிட்டனில் கல்வி முறை, யதார்த்தமாக, நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது; ஆனால் இந்தியாவில், இதற்கு மாறாக, பாடங்களை மட்டும் அடிப்படையாக கொண்டதாக உள்ளது. நான் என்னுடைய பணி மூலம், என்னுடைய மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். ஆசிரியர் என்ற முறையில், எனக்குத் தெரிந்த விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மாணவனாக இன்னும் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறிவைத் தேடுவதென்பது, ஒரு தொடர்நிகழ்வாகும்; எனக்கு எல்லாம் தெரியும் என்று எவருமே கூறிக் கொள்ள முடியாது.

சென்னையில் இருந்தபோது சென்னை மட்டுமே உலகமாக எனக்குத் தோன்றியது; கிணற்றுத் தவளையாக இருக்கக்கூடாது என்பதை அப்புறம்தான் உணர்ந்து கொண்டேன். வாழ்‌க்க‌ை ஒருமுறைதான்; எனவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உலக அனுபவத்தைப் பெற வேண்டும். இந்திய மாணவர்கள் ஒருமுறையாவது வெளிநாட்டில் படிகக வேண்டும்; அப்போதுதான், அவர்களுக்கு பன்னாட்டு கலாச்சாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலும். எதிர்காலத்தில் சர்வதேச நிறுவனங்களில் பணி புரியநேரும்போது பயனுள்ளதாக இருக்கும்.

உலகின் எதிர்கால மாக்கெட், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்க நாடுகளிடையே உள்ளது. இதில் இந்தியா அடுத்து 20 ஆண்டுகளில் முக்கிய பங்காற்றும். சீனாவை விட இளைய சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால், இந்தியா உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும். அந்நிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்புள்ள இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும்.
கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?
அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக, எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், தற்போது முறையே, 165, 150, எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது குறித்து, கடந்த மார்ச் இறுதியில், எம்.சி.ஐ., குழு, இக்கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது.

மேலும், கடந்த ஆண்டு, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், அதிகரிக்கப்பட்ட, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்த ஆண்டும் அனுமதி அளிப்பது தொடர்பாகவும், திருவண்ணாமலையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருவது குறித்தும், எம்.சி.ஐ., குழு தனித்தனியாக ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில், அவற்றின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்குமா என்பதில், "சஸ்பென்ஸ்" நீடிக்கிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூன், 18ம் தேதி துவங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டு, கூடுதலாக, 242 பேர் வரை சேர வசதியாக, கலந்தாய்வு துவங்கும் முன், எம்.சி.ஐ., தன் ஆய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என, டாக்டர் கனவில் இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோருகின்றனர்.

இதன் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவர்களில், "கட்-ஆப்&' மதிப்பெண் அடிப்படையில், 242 பேருக்கு, முதல் கட்ட கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர, வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், அவர்கள், தனியார் கல்லூரிகளில் இருந்து, அரசு கல்லூரிகளில் சேர்ந்தபின், தாங்கள், லட்சக்கணக்கில் செலுத்திய, கல்வி கட்டணத்தை திரும்ப பெற, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், போராட வேண்டி இருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பொதுச் செயலர் ஜெயலால் கூறியதாவது: ஆய்வுக்குப் பின், எம்.சி.ஐ., கேட்கும் ஆவணங்களை, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் தருவது, மத்திய அரசிடம் நடைமுறை அனுமதி பெறுவது போன்றவற்றுக்கான காலஅளவை பொறுத்தே, எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த, தன் ஆய்வு முடிவை, எம்.சி.ஐ., தெரிவிக்கிறது.

இம்முடிவு, கலந்தாய்வு துவங்குவதற்கு முன் தெரிந்தால், மாணவர்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். இவ்வாறு ஜெயலால் கூறினார்.

No comments:

Post a Comment