Sunday, May 19, 2013


2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து, புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

                                                     
S.No.
Post
COUNSELLING DATE
PLACE
1.
Govt./Mpl Higher Secondary School Headmasters Transfer Councilling ( Within District & District to District)
20.05.2013 Monday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
2.
Govt./Mpl Higher Secondary School Headmasters Promotion Counselling
21.05.2013 Tuesday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
3.
Govt./Mpl High School Headmasters Transfer Counselling ( Within District & District to District)
22.05.2013 Wednesday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
4.
Govt./Mpl Higher Secondary School PG Assistants Transfer Counselling (Within District & District to District)
23.05.2013  Thursday @ 9.00 am
சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்


இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்


கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?


கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

             தற்போது இன்று முதல் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் புதிதாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அப்பள்ளிகளின் காலி இடங்களும் கலந்தாய்வில் பட்டியலிடப்பட்டால் மூத்த ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேவையான பள்ளிகளை தேர்ந்தெடுக்க ஏதுவாக அமையும் என கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை பள்ளி கல்வி துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என ஆசிரியர் சமூகம் விரும்புகிறது. 

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி

"குரூப்-2 தேர்வில், தேர்வு பெற்று, மூன்று மாதங்களாக பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தேர்வர்கள், விரைவில் பணி நியமனம் பெற, நடவடிக்கை எடுக்கப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் தெரிவித்தார்.
உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய்த் துறையில் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு முடிவுகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மார்ச்சில், பணியிட ஒதுக்கீடு உத்தரவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது. 2,000த்திற்கும் மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.

அவர்கள், சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று, பணி நியமன உத்தரவை கேட்ட போது, "தேர்வாணையத்தில் இருந்து, பெயர்கள் அடங்கிய, தேர்வு பட்டியல் வரவில்லை. வந்த பிறகே, பணி நியமனம் செய்யப்படுவீர்" என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், தேர்வாணையமும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்தது.

நேற்று, 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வாணையத்தை முற்றுகையிட்டனர். பின், நான்கு பேர் மட்டும், உயர் அதிகாரியை சந்தித்து, பிரச்னைகளை கூறினர். இது குறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறியதாவது:

இதற்கு முன் நடந்த குரூப் - 2 தேர்வில் தேர்வு பெற்ற, 200 பேரை, பணி நியமனம் செய்வது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், அந்த வழக்கு முடிந்ததும், அவர்களை, முதலில் பணி நியமனம் செய்துவிட்டு, அதன் பின், இவர்களை பணி நியமனம் செய்யலாம் என, இருந்தோம்.

ஏனெனில், முதலில் தேர்வு பெற்றவர்களை நியமனம் செய்யாவிட்டால், "சீனியாரிட்டி" உள்ளிட்ட பிரச்னைகள் வரும். எனினும், மார்ச்சில், பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றவர்களை, பணி நியமனம் செய்ய அனுமதிக்கலாம் என, தேர்வாணையக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, தேர்வு பெற்றவர்களை, பணி நியமனம் செய்வதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, ஒரு வாரத்திற்குள், தேர்வு பெற்றவர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்


ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை - அரசு செயலர் உத்தரவு

"ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்,'' என, பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக, தங்களது பதிவு மூப்பு விபரங்களை, சி.இ.ஓ., ஆபீஸ் மூலம், ஆன்-லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவும், இன்றுடன் முடிந்து விடும். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மே 28 முதல் பணியிடமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

முன்னுரிமை: கடந்த ஆண்டு வரை, ஆசிரியர் இடமாறுதல் செய்யும் போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்திற்கு முதலில் முன்னுரிமை தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு (2013-14) கவுன்சிலிங்கில், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் , மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதற்கு பின்னரே, முன்னாள் ராணுவத்தினர், பிற பிரிவினருக்கு முன்னுரிமை தரவேண்டும். மேலும், புகாரின் பேரில், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு முதலில் நிர்வாக காரணத்திற்கான இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டும். பின்னர், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து, புகாரின் மீது ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், பணியிட மாறுதல் ஆவணத்தில், புகாரின் பேரில் ஆசிரியருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிடவேண்டும். இது போன்ற ஆசிரியர்கள் குறித்து சி.இ.ஓ., அறிக்கைபடி, இயக்குனர் மாறுதல் செய்வார்.

சிறப்பு நிகழ்வாக, கணவன் அல்லது மனைவி திடீரென விபத்து அல்லது நோய்வாய்பட்டு இறக்கநேரிட்டால், அத்தகைய ஆசிரியர்களுக்கு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் விதிமுறையை கடைபிடிக்காமல், நேரடியாக பணியிடமாறுதல் வழங்கலாம். இது குறித்து இயக்குனருக்கு அறிக்கை வழங்க வேண்டும். இது போன்று, ஆசிரியர் கவுன்சிலிங்கில் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம் :அதிகாரி தகவல்

"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம்போல் இயங்கலாம்' என, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேள்விக்குறி:தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாமல், 2,000 பள்ளிகள் உள்ளன. இந்த பிரச்னையால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இதனால், வரும், ஜூன் 3ம் தேதி, 2,000 பள்ளிகளும் இயங்குமா, இயங்காதா என, கேள்விக்குறியாக உள்ளது.இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பதற்றத்தில் இருக்கின்றனர். தனியார் பள்ளிகளின் நில பிரச்னை குறித்து ஆய்வு செய்து, உரிய முடிவை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஏற்கனவே ஒரு முறை கூடி, பிரச்னை குறித்து ஆய்வு செய்தது.பள்ளி திறப்பதற்கான காலம்நெருங்கி வரும் நிலையில், 2,000 பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:

கால அவகாசம்:நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த மார்ச், 31ம் தேதிக்குள், அங்கீகாரம் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரச்னை குறித்து முடிவு எடுக்க, போதிய கால அவகாசம் இல்லை என, பல்வேறு மாநில அரசுகளும், பள்ளி நிர்வாகங்களும், ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பிடம் தெரிவித்தன. இதனால், கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.எனவே, தமிழகத்தில், அங்கீகாரம் பெறாமல் உள்ள பள்ளிகள், மூட வேண்டும் என்பது அவசியம் இல்லை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அந்த பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்க மாட்டோம். அந்த பள்ளிகள், வரும் ஜூன் மாதம், வழக்கம் போல் இயங்கலாம். மூன்று மாதத்திற்குள், பள்ளிகளுக்கான இடப் பிரச்னை குறித்து, ஒரு முடிவை, தமிழக அரசு எடுக்கும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

தொடர்கிறது நெருக்கடி:"பள்ளிகளை மூடமாட்டோம்' என, உயர் அதிகாரி, தெரிவித்தாலும், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது:உயர் அதிகாரியின் கருத்தை வரவேற்கிறோம். ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, கடும் குடைச்சல் தந்தபடி உள்ளனர். அங்கீகாரம் இல்லை; மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை; குடிநீர் வசதி இல்லை; கழிவறைகளில், "டைல்ஸ்' பதிக்கவில்லை என, பல காரணங்களைக் கூறி, பள்ளிகளை மூட, நெருக்கடி தருகின்றனர். இதன் காரணமாக, பல மாவட்டங்களில், பள்ளிகளை, அவர்களாகவே மூடி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில், 16ம் தேதி, ஒன்பது நர்சரி பள்ளிகளை, நிர்வாகிகளே மூடி உள்ளனர். துறையின் உத்தரவை, மாவட்ட அதிகாரிகள் மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

No comments:

Post a Comment