IGNOU- B.Ed Hall Tickets for June 2013, Term End Examination
|
பணியில் உள்ள மாற்று திறனாளி ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்த பொதுக்கல்வி மற்றும் சிறப்புக்கல்வி சான்றுகளை உண்மை தன்மை சான்றுகள் பெற்ற பிறகு பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
|
"பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை
பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக் கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து, இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார், சிவதாணுப்பிள்ளை.இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள, "பிரம்மோஸ்&' ஏவுகணையின் தந்தை&' என, போற்றப்படும் இவர், பிற முக்கிய ஏவுகணைகளான, அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி உள்ளார்.
இந்திய விண்வெளி உலகின் முன்னணியாளர்களாகக் கருதப்படும், விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், அப்துல் கலாம் போன்றவர்களுடன் இணைந்து, சில காலம் பணியாற்றியுள்ள சிவதாணுப்பிள்ளைக்கு, சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, "பத்மபூஷண்&' விருது வழங்கி கவுரவித்தார்.
அதற்கு முன், "பத்மஸ்ரீ&' மற்றும் விக்ரம்சாராபாய் ஆராய்ச்சி விருது போன்ற விருதுகளையும், பல கவுரவங்களையும் பெற்றுள்ள சிவதாணுப்பிள்ளை, 1991ல் இருந்து, ஏவுகணை தயாரிப்பு தொழில்நுட்பத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
"பிரம்மோஸ்&' ஏவுகணைகள், ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின், "பிரம்மபுத்ரா&', ரஷ்யாவின், "மாஸ்கோவ்&' நதிகளின் பெயர்களை இணைத்து, "பிரம்மோஸ்&' என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணைகள், உலக அளவில் இந்தியாவின் ஏவுகணை திறனை வெளிக்காட்டி உள்ளன.
அமெரிக்காவுக்கும், ஈராக்குக்கும் இடையேயான, வளைகுடா போருக்குப் பிறகு தான், போர் ஏவுகணைகள் தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகம், மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கு, "பிரம்மோஸ்&' என்ற பெயரில், உருவம் கொடுத்தவர் சிவதாணுப்பிள்ளை என்றால் மிகையில்லை.
|
9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்
9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி தேர்வு மூலம் மாணவர்களுக்கு 60 மார்க்குகளும், ஆண்டு முழுவதும் மாணவர்களின் மதிப்பீட்டிற்கு 40 மார்க்குகளும் வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு மட்டுமே தேர்வு மார்க்குகள் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் இனி முப்பருவ கல்வி முறையின்படி இந்த பாடங்களுடன் உடற்கல்வி பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக பதிவேடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் பராமரித்து மார்க்குகளை மதிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
|
பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை
பி.எஸ்.என்.எல். சார்பில் தரைவழித் தொலைபேசி பயன்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையிலான "விடியோ டெலிபோனி' சேவை வெள்ளிக்கிழமை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவை பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொதுமேலாளர் ஏ.ஷாஜகான் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:பி.எஸ்.என்.எல். விடியோ டெலிபோனி சேவை எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தரைவழித் தொலைபேசியில் விடியோ மற்றும் வாய்ஸ் சேவையை பிராட்பாண்ட் மூலமாக வழங்குவதே இதன் முக்கிய அம்சம்.இதில் தொலைபேசி அழைப்புகள் டேட்டாக்களாக மாற்றப்பட்டு பிராட்பாண்ட் வாயிலாக அனுப்பப்படுவதால் எதிர்முனையில் பேசுபவர்களுடன் நேருக்கு நேர் முகம் பார்த்து தெளிவாகவும், தடங்கலின்றியும் பேசலாம். இதற்கென கணினி தேவையில்லை.
இதற்கான விடியோ திரை மற்றும் காமிரா உள்ளடக்கிய விடியோ தொலைபேசியை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. குறைவான கட்டண விகிதத்தில் பேசும் வசதிகள் உள்ளன.இது குறித்த விபரங்களுக்கு 94861 01049, 0422 2449400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். துணைப் பொதுமேலாளர் பி.ரத்னசாமி உடனிருந்தார்.அதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். தமிழக முதன்மைப் பொதுமேலாளர் எம்.ஏ.கான் சென்னையிலிருந்தபடியே விடியோ டெலிபோனி மூலமாகவே புதிய சேவையைத் தொடங்கி வைத்தார்.
|
டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்
கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட டேட்டா சயின்ஸ் என்ற பதம், இன்றைய நிலையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போர்ப்ஸ் மற்றும் சி.என்.என்., போன்ற முக்கிய சர்வேக்கள், டேட்டா சயின்டிஸ்ட் பணியை, இன்றைய நிலையில், மிகுந்த வளர்ச்சியடைந்த பணிகளுள் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
தகவல் என்ற சக்தி
உலகெங்கிலுமுள்ள நிறுவனங்கள், கடந்த சில,பல ஆண்டுகளின் தகவல்களை திரட்டி வைத்திருப்பதை பெரிய பொக்கிஷமாக கருதுகின்றன. ஏனெனில், அவற்றை அடிப்படையாக வைத்து, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, போட்டி உலகில் அந்நிறுவனங்கள் நிலைத்து நிற்க ஏதுவாக அமைகிறது. தேவையான டேட்டாக்களை எடுத்து சேகரிக்கும் பணிக்கு அதீத தனித்திறமை தேவைப்படுகிறது. அத்திறமையைப் பெற்றவர்கள்தான் டேட்டா சயின்டிஸ்ட்.
டேட்டாக்களின் வகைகள்
Facebook, LinkedIn மற்றும் Twitter போன்ற நிறுவனங்கள், பெரியளவிலான டேட்டா செயல்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றன. நாம் ஒரு நாளைக்கு, 2.5 quintillion வரையிலான டேட்டா பைட்ஸ்களை உருவாக்குகிறோம் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவற்றில் கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத டேட்டாக்கள் என்ற இரு வகைகள் உண்டு. சர்வேக்கள் மற்றும் feedback forms போன்றவை கட்டமைக்கப்பட்ட டேட்டா வகைகளிலும், வீடியோக்கள், பிளாக்குகள் மற்றும் posts போன்றவை, கட்டமைக்கப்படாத டேட்டா வகைகளிலும் சேரும். இத்தகைய கணக்கிலடங்காத, பல வகைகளிலான டேட்டாக்களை தேவைக்கேற்ற வகையில் பிரித்தெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே டேட்டா சயின்டிஸ்டுகளின் முக்கியப் பணி.
முடிவுகளைத் தெரிவித்தல்
தாங்கள் சேகரித்த எண்ணற்ற டேட்டாக்களிலிருந்து, தேவையான விஷயங்களை தேவையான முறையில் எடுத்து, எழுத்து வடிவில் அல்லது காட்சி வடிவில், சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த டேட்டா சயின்டிஸ்டுகள் வழங்குகிறார்கள். இந்த வகையில், ப்ரோகிராமர்களாக, அனலிஸ்டுகளாக, புள்ளியியல் நிபுணர்களாக, பொறியாளராக, ஆர்டிஸ்டாக மற்றும் கதை சொல்பவராக ஒரு டேட்டா சயின்டிஸ்ட், பல்வேறு பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.
Moneyball என்ற திரைப்படத்தை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இது நிஜக்கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படத்தில், யேல் பல்கலையில் படித்த ஒரு பொருளாதார பட்டதாரி, பேஸ்பால் திறனைத் தேர்ந்தெடுக்க, எண்களைப் பயன்படுத்துவார். ஆனால் இந்த செயல்முறையானது, விரும்பிய முடிவுகளையே தர தொடங்கிய பின்பு, அது நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவெனில், ஒரு டேட்டா சயின்டிஸ்ட்டின் திறமை, பல்வேறு துறைகளிலும் ஜொலிக்கக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்த திறன்கள்
புள்ளியியல் என்பது டேட்டா சயின்ஸ் செயல்பாட்டின் இலக்கணம்(Grammar) போன்றது மற்றும் அதுதான் அதற்கான அடிப்படைத் திறன். பெரியளவிலான டேட்டா அமைப்புகளுக்கு, புள்ளியியல் மாதிரிகளை கட்டமைத்தல் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வை பயன்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில், இத்துறை சார்ந்த ஒருவர் நிபுணத்துவம் பெறுவது அவசியம். மேலும், code எழுதுவதிலும் வல்லமை பெறுதல் அவசியம். ஆனால் இந்த code எழுதும் செயல்முறை, தொழில்நுட்ப வளர்ச்சியினால் இனிவரும் காலங்களில் தேவைப்படாது என்று கூறப்படுகிறது.
இவைத்தவிர, டேட்டா சயின்டிஸ்டுகள், சிறந்த கம்ப்யூடேஷனல் மற்றும் எண் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய வணிக சூழலுடன் பொருந்திய அறிவுடன், சொற்கள் மற்றும் காட்சி வகையிலான, வலுவான தகவல் தொடர்பு திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
உயர்ந்தபட்ச தகுதிகள்
அதிகபட்ச ஆர்வம், பிரச்சினைக்கு உள்ளே சென்று ஆராயும் மனப்பாங்கு, முக்கிய கேள்விகளுக்கு சரியான பதில்களை கண்டடைதல் போன்றவை, இத்துறை நிபுணர்களுக்கான சிறந்த தகுதிகள். இதனால்தான், டேட்டா நிபுணர்கள், டேட்டா சயின்டிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.ஒரு செயல்பாட்டு இயற்பியல் அறிஞர், சாதனங்களை வடிவமைக்க வேண்டும், தரவை சேகரிக்க வேண்டும், பல்வேறான சோதனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவரை, இயற்பியல் வல்லுநர், கணிப்பொறி அறிவியல், கணிதம் அல்லது பொருளாதார நிபுணர் ஆகியோருக்கு சமமாக ஒப்பிடலாம்.
டேட்டா சயின்ஸ் துறையில் நுழைதல்
வலுவான டேட்டா மற்றும் கம்ப்யூடேஷனல் அம்சங்களைக் கொண்ட எந்த துறையை சார்ந்தவரும், டேட்டா சயின்டிஸ்ட் என்ற நிலைக்கு வர முடியும். மானுடவியல் மற்றும் தொல்லியல் துறையை சார்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள்கூட, தங்களின் அதிகளவு தரவு பயன்பாட்டு திறனால், டேட்டா சயின்டிஸ்ட் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர். இயற்பியல் அறிஞர், ப்ரோகிராமர், கணிதவியல் நிபுணர், கலை நிபுணர் உள்ளிட்ட பல தகுதி நிலைகளில் ஒரு டேட்டா சயின்டிஸ்ட் பொருந்தி வந்தாலும், தொழில்முனையும் பண்பானது அவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகளில் ஒன்றாகும்.
துறைக்குள் நுழைதல்
ஒருவர் எப்படி டேட்டா சயின்டிஸ்ட் ஆகலாம்? டேட்டா சயின்டிஸ்ட் என்ற பணி நிலைக்கான ஆள் தேவை எண்ணிக்கைக்கும், படித்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கும் பெருத்த இடைவெளி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு சில கல்வி நிறுவனங்கள்தான், தகுதியான முறையில் இப்படிப்பை வழங்குகின்றன. அதேசமயம், எம்.பி.ஏ., படித்த ஒருவர், தனது தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டு, புள்ளியியல் மென்பொருள் ப்ரோகிராமில் சான்றிதழ் பெறலாம்.
நீங்கள் ஐ.டி., துறையில் இருந்தாலும், எம்.பி.ஏ., படித்து இத்துறைக்குள் நுழையலாம். ஏனெனில், வணிகத்தைப் புரிந்துகொள்ளல் மற்றும் அதை வழங்குதல் போன்ற திறன்கள் அவசியமானவை. அதேசமயம், புள்ளியியல் திறன் அமைப்பை வளர்த்துக் கொள்ளுதல் என்பது சற்று சிக்கலானது. இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்களே, SAS மற்றும் SPSS போன்ற புள்ளியியல் tool -களில் முறையான பயிற்சிகளை வழங்குவதோடு, பகுப்பாய்வு மற்றும் புள்ளியியல் மாடலிங் தொழில்நுட்பங்களில் அடிப்படைத் திறனையும் வழங்குகின்றன.
நீங்களும் ஒரு டேட்டா சயின்டிஸ்ட்
Kaggle எனப்படும், உலகின் மிகப்பெரிய டேட்டா சயின்டிஸ்ட் அமைப்பு, புள்ளியியல் மற்றும் அனலிடிகல் அவுட்சோர்சிங் செயல்பாட்டிற்கு தேவையான புத்தாக்க தீர்வுகளை வழங்குகிறது. இந்த அமைப்பானது, டேட்டா சயின்ஸ் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் நல்ல அனுபவம் பெற்று, live data -வுடன் பணிபுரிந்து, சிறிய மற்றும் பெரியளவிலான பணப் பரிசுகளையும் பெறும் வகையில் பல்வேறான அம்சங்களைக் கொண்ட ஒரு விளையாட்டாக அத்துறையை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த அமைப்பின் பணிகளிலேயே முக்கியமானது, இத்துறையில் புதிதாக நுழைவோர், தங்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அடிப்படை ஆதாரமாக இருப்பதுதான். இந்த அமைப்பை பற்றி மேலும் தகவல் அறிய www.kaggle.com.
டேட்டா சயின்ஸ் என்பதன் எதிர்காலம்
உருவாக்கப்படும் டேட்டாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. இத்துறை நிபுணர்கள், எதிர்காலத்தில், பல்வேறான நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுவார்கள். இத்துறை நிபுணர்களுக்கான தேவைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, எதிர்காலம் பிரமாதமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
|
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்
"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:
அரசின் தற்போதைய கவுன்சிலிங் முறை, தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிராக உள்ளது. இதனால், அதிக மதிப்பெண் எடுத்தும், தகுதியானவர்களுக்கு முதுகலையில் இடம் கிடைக்காமல் போகிறது. எனவே, அதிக மதிப்பெண் எடுத்தும், இடம் கிடைக்காமல் இருக்கும் காத்திருப்போர் பட்டியலை, பொதுவான காத்திருப்போர் பட்டியலாக வெளியிட வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மத்திய அரசால் நடத்தப்படும் கவுன்சிலிங் முறையைப் போல, தமிழக அரசும் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். இவ்வாறு ரவீந்திரநாத் கூறினார்.
|
பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.
விண்ணப்பங்கள் வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாள். அதே போல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இதுவரை, 32 ஆயிரத்து 50 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை இன்று மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
|
ஆங்கில மொழித்திறன் பயிற்சி நுழைவுத்தேர்வு: 803 பேர் பங்கேற்பு
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் 235 மணி நேர பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் கலந்துரையாடல் திறன் வளர்த்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
|
2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம்
கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி செய்து, வினாத்தாளை வாங்கிய, நாகை மாவட்ட வணிக வரித் துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மே, 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.
கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி நடந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இது குறித்து, சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு, ஜூலை, 30ம் தேதி, டி.என்.பி. எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6,695 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 4.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வானவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரோக்கர்களிடம் வினாத்தாள் வாங்கித் தேர்வு எழுதியோர் பற்றி விசாரித்து வந்தோம். அதிரடி திருப்பமாக, கடலூர் மாவட்டம், பண்ருட்டி, பத்தரக் கோட்டையைச் சேர்ந்த சீராளன் மகன் ரவிக்குமார், 32, கடந்த, 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வின் போது, கடலூர் புரோக்கர்கள் மூலம் வெளியான வினாத்தாளை வாங்கியதும், தேர்வு எழுதி, தற்போது, நாகை மாவட்ட வணிக வரித் துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, ரவிக்குமாரை கைது செய்துள்ளோம். மேலும் மோசடி செய்து, தேர்வு எழுதி, அரசுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
|
பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்
ஒரு காலத்தில் படிக்க வழியின்றி, கூலி வேலைக்கு சென்ற குழந்தை தொழிலாளர்கள், தற்போது பிளஸ் 2 தேர்வில், 1,000 மதிப்பெண் எடுத்து, சாதனை படைத்துள்ளனர். இவர்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.
சிவகாசியைச் சேர்ந்த மாரீஸ்வரன், சேலத்தைச் சேர்ந்த நந்தகோபால், பிளஸ் 2வில், 1,097 மற்றும் 1,110 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையிலும், கயிறு திரிக்கும் குழந்தை தொழிலாளியாக இருந்தபோது, தொழிலாளர் நலத்துறையால் மீட்கப்பட்டவர்கள்.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளால், ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவானதை அடுத்து, 1987ல், மத்திய, மாநில அரசு உதவியோடு, "தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு திட்டம்" கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, செங்கல் சூளை, ரைஸ் மில், பீடி கம்பெனி, ஓட்டல் ஆகிய இடங்களில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட, 15 மாவட்டங்களில் செயல்படும், 341 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயில்கின்றனர். மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள், எந்த வகுப்பில் பள்ளிப் படிப்பை கைவிடுகின்றனரோ, அதிலிருந்து இரண்டு ஆண்டுகள், இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி கற்கின்றனர். பின், மற்ற மாணவர்களுடன் இணைந்து, சாதாரண பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர். படிக்கும் காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் 150 ரூபாயும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, 500 ரூபாயும் உதவித் தொகை தரப்படுகிறது. மேலும், மதிய உணவு, விடுதி வசதி, பஸ் பாஸ் என, அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 70 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பேர் மருத்துவப் படிப்பையும், 82 பேர் பொறியியல் படிப்பையும் மேற்கொள்கின்றனர். இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 504 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 30 மாணவர்கள், 1,000க்கும் மேலும், 50 மாணவர்கள், 950க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பட்டாசு தொழிற்சாலை குழந்தை தொழிலாளி மாரீஸ்வரன்: சிவகாசியில், பட்டாசு தொழிற்சாலையில, விவரம் தெரிஞ்சதில இருந்து, எட்டு வயது வரை, வேலை செஞ்சேன். ஒரு நாள், எங்க அம்மா, இலவச படிப்பு சொல்லித் தர்றாங்கன்னு ஸ்கூல சேர்த்து விட்டாங்க. அதுவரைக்கும் நான் பள்ளிக்கே போனதில்லை. ஒன்பது வயசுல தான், முதன் முதலாக ஸ்கூல பாத்தேன். கஷ்டப்பட்டு படிச்சு, பிளஸ் 2ல, 1,097 மார்க் வாங்கி இருக்கேன்; பொறியியல் படிப்பிற்கும் விண்ணப்பிச்சுருக்கேன். கயிறு திரித்த குழந்தை தொழிலாளி நந்தகோபால்: வீட்டுல கஷ்டத்தால, 10 வயசு வரைக்கும் கயிறு திரிக்கிற தொழில் செஞ்சுட்டு இருந்தேன். அப்பா, அம்மாவும் கூலி வேலை தான் செய்யுறாங்க. அவங்களுக்கு படிப்பு பத்தி விழிப்புணர்வு இல்லை. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வந்து, என்னை பள்ளியில் சேர்ந்து படிக்க வைச்சாங்க. பிளஸ் 2வில், 1,110 மார்க் வாங்கியிருக்கேன். பொறியியல் படிப்பில சேர உள்ளேன். தையல் வேலை செய்த நித்யா: அப்பா உடல் நலம் சரியில்லாததால், ஆறாவது படிப்பை பாதியில நிறுத்திட்டேன். அப்புறம், அம்மா கூட, தையல் வேலைக்கு உதவியா இருந்தேன். நான் படிக்காம வீட்டுல இருக்குறத பார்த்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிங்க, என்னை பள்ளியில் ஏழாவதுல சேர்த்தாங்க. பிளஸ் 2ல, 1,108 மார்க் வாங்கியிருக்கேன். அடுத்து, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிச்சிருக்கேன். நெசவு தொழிலாளி முத்துகுமார்: வீட்டுல கஷ்டம் காரணமாக, மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பாதியில நின்னுட்டேன். நெசவு வேலை செஞ்சுட்டு இருக்கும் போது, என்னை நான்காவது படிக்கச் சொல்லி, பள்ளியில் சேர்ந்து விட்டாங்க. குடும்ப கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கஷ்டப்பட்டு படிச்சேன். பிளஸ் 2ல, 1,024 மார்க் வாங்கியிருக்கேன். இப்ப, பொறியியல் படிக்கப் போறேன். நெசவு தொழிலாளி வினிதா: எங்க அப்பா, நான்காவது படிக்கும் போது, இறந்துட்டாரு. அதனால, வீட்டுல கஷ்டம்ன்னு என்னை மேல படிக்க வைக்கல. அம்மா கூட, நெசவு தொழில் செய்ய உதவியாக இருந்தேன். என்னை மறுபடியும், ஐந்தாவது படிக்க, ஸ்கூல சேர்த்து விட்டாங்க. பிளஸ் 2ல, 1,033 மார்க் எடுத்திருக்கேன். எனக்கு, பி.காம்., பி.சி.ஏ., படிக்கணும்ன்னு ஆசை. மேல படிக்க வசதி இல்லை. இம்மாணவர்களுக்கு, உதவி செய்ய விரும்புவோர், 044 - 2432 6205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். |
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
பள்ளிப் படிப்பானாலும், பட்டப் படிப்பானாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்தால் மட்டுமே, சீனியாரிட்டி அடிப்படையில், அரசுப் பணி, ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பதிவு செய்த அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்க முடியாது என்பதால், கடந்த தி.மு.க., ஆட்சியில், 300, 200, 150 ரூபாய் என்ற வகையில், பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாதத்தில் ஒரு முறை, தனியார் நிறுவனங்களை அழைத்து, பதிவுதாரர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் முழுவதும், தற்போதுள்ள 37 வேலைவாய்ப்பு மையங்களில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், 13.9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை, 82.7 லட்சமாக உள்ளது. இம்மாத இறுதிக்குள், மேலும் 20 லட்சம் பேர், பட்டியலில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வந்து காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ஆன்-லைன் ; முறையில், படித்த பள்ளிகளிலேயே, பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு பெருமைப்படுகிறது. ஆனால், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டுகொள்வதில்லை. பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, பதிவு புதுப்பிப்பதை, சம்பந்தப்பட்ட பதிவுதாரர்கள் தவிர்த்து வருகின்றனர். அரசுக்கு எந்தவித வருவாயும் இல்லாமல் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகம் தேவைதானா? அதனால், மக்களுக்கு எவ்வித பயனுமில்லை; அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தான் பெருமளவில் பயனடைகின்றனர் என, கூறப்படுகிறது. மாவட்ட பதிவுதாரர்கள் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கு, இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவற்றை மாற்ற, புதிய தொழில் நிறுவனங்களை துவங்கி, மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் முறையை, தமிழக அரசு கொண்டு வர வேண்டும். தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்தால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில், ஆட்களை பணிக்கு எடுத்துக் கொள்ள, அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்த வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், அரசுப் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, பதிவுதாரர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். |
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Tuesday, May 21, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment