Wednesday, May 8, 2013


15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு

"பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட, 15 நிமிடங்களில், பள்ளி தகவல் பலகையில், தேர்வு முடிவுகளை காட்சிப்படுத்த வேண்டும். இதை, செயல்படுத்த தவறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்" என , பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிடுவதில், புது நடைமுறைகளை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதை மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session
VIT UNIVERSITY - EEE Department கலந்தாய்வு தேதி வெளியீடு


            வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல்  கலந்தாய்வு துவங்க உள்ளது.
 
           கடந்த மாதம் ஏப்ரல் 15 முதல் 30 வரை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை அடுத்து, மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

           மே மாதம் 13ம் தேதி திங்கட்கிழமை முதல் 18ம் தேதி சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

2013-14ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்கை அறிவிப்பு


விண்ணப்பம் விநியோகம் : மே13-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி

கோவாவில் நடந்த அபாகஸ் போட்டி தமிழக மாணவர்கள் சாதனை

             கோவா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் நெல்லை, குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
 
 
           கோவா மாநில தலைநகர் பனாஜியில் தேசிய அளவில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஐ.எம்.ஏ.,எனப்படும் அபாகஸ் போட்டி நடந்தது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

           தமிழகத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து 15 பேர் கலந்துகொண்டனர். பாளை.என்ஜி.,காலனி சவுத் இந்தியா நாலெட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் தலைமையில் 7 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

              இதில் ஹரிஹரராஜ், சுஜித் குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். குமரி மாவட்டம் தெரிசனங்தோப்பு பகுதியை சேர்ந்த கவுஷிகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் பயிற்சியாளர் அய்யப்பன் தலைமையில் சென்ற மாணவர்களில் அருண், சுடலையாண்டி, பிரவின் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். லட்சுமி, தங்கம் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.

               சாதனை படைத்த மாணவ, மாணவிகளை அவர்களின் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


+2 விற்க்குப்பிறகு படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

 
         பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.

 எப்படி திறன்களை கண்டுகொள்வது?

             உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என கண்டு கொள்ளுங்கள். திடீரென்று அந்தத் துறையின் மேல் ஆர்வம் வந்திருக்கிறதா? அல்லது இயற்கையாகவே அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதா என்பதை காணவும்.

                             எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

பெற்றோர்கள்/ ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாமா?

           உங்கள் தனித்திறமையை, அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித் திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.

               அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள், கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த மாதிரியான ஆலோசகர்களை அணுகலாம்?

               பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதை ஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டு அந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எது?

                    படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான். படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என கூற முடியாது.

ஆர்வத்துடன் படிப்பதற்கு அவசியமானவை என்ன?

மிகுந்த ஈடுபாடு.
அர்ப்பணிப்பு உணர்வு.
படிப்பின் மேல் காதல்.
புரிந்து கொள்ளும் ஆர்வம்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.

No comments:

Post a Comment