Friday, May 24, 2013


கல்வித்துறையில் ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களா நீங்கள்..?
syllabus



இந்த இணைப்பில் Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) - http://www.tnschools.gov.in/Draft-Syllabus-For-XI-XII.html உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தின் வரைவைப் படியுங்கள். 

அடுத்த 10 ஆண்டுகளுக்கு,  பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளதா?

இப்போது அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களை உள்ளடக்கி புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? 

புதிய பாடத்திட்டம் திருப்தி அளிக்கிறதா? இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கலாம்? 




உங்கள் கருத்துகளை இம்மாதம் (மே) 27-ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். 


(குறிப்பு: புதிய பாடத்திட்டம் தொடர்பாக  நீங்கள் அனுப்பும் கருத்துகளை, scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in என்ற பள்ளிக் கல்வித் துறையின் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிடவும்.)



Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)


This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancydownload                             
Advance Tamildownload
Bio-Botany download
Bio-chemistrydownload
Bio-Zoologydownload
Business MathematicsXI , XII
Chemistry download
CommerceXI-1 , XI-2 , XII-1 , XII-2
Communicative Englishdownload
Computer Sciene download
Economicsdownload
Englishdownload
Ethics & Indian Culturedownload
Geographydownload
Historydownload
Home Science download
Mathematics download
Microbiology download
Nursing download
Nutrition & Dietetics download
Physicsdownload
Political Sciencedownload
Statistics download
Tamil XI , XII

AEEO Revised Seniority List for 2013-14 | திருத்தி அமைக்கப்பட்ட 1 லிருந்து 813 வரை வரிசையிலுள்ள 01.01.2013ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற தகுதியான ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியீடு
+2 உடனடி தேர்வு ஜூன் 2013 கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு


தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் 2 பேர் பணியிட மாறுதல் ஆணைகளை பெற்றனர். இந்த கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதாக இதில் பங்கேற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர், நெல்லை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான புதிய பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்படுமா?

தமிழகத்தில் கல்வித்துறை கடந்த 20ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக நடந்தது. தொடந்து, முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வு நடத்துவதற்கு முன் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 50 மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட் டது. ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு மே 20ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சட்டசபையில் முதல்வர் இந்த கல்வி ஆண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

மேல்நிலைப் பள்ளியாக தகுதி பெறும் 100 பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் என 900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50 தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 500 பேராவது நியமிக்கப்படலாம்.

எனவே, தரம் உயர்வு பெறும் 150 பள்ளிகளின் பெயர் பட்டியல்களை கலந்தாய்வுக்கு முன் உடனடியாக வெளியிட வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கத்தினரும் வலியுறுத்துகின்றனர். ஒருவேளை தாமதமாக பட்டியல் வெளியிடப்பட் டாலும், இதனால் உருவாகும் புதிய பணி இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தி, மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்களுக்கு உதவும் தகவல் மையம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.2013-14 கல்வி ஆண்டிற்கான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவுள்ளது. நுழைவுத்தேர்வுகள் ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்படுகிறது.இந்நிலையில் மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பங்கள் பெறுவது குறித்தும் அறிந்து கொள்ளவும் பல்கலைக்கழக நிர்வாகி உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட அலுவலகத்தில் கே பிரிவு அலுவலகம் அருகே தகவல் உதவி மையம் (MAY I HELP YOU) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள மாணவர்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மையத் தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

தேதி பின்னர் அறிவிக்கப்படும்: உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தக் கலந்தாய்வுகளுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 24 மற்றும் 25ல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான "கவுன்சிலிங்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பின் ஒத்திவைப்பதாக தகவல் வெளியானது. 

           அதிகாரபூர்வ தகவல் இல்லாததால் இன்று (வெள்ளி) "கவுன்சிலிங்' நடக்குமா இல்லையா என்று நேற்று இரவு வரை ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்தது.  
               ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மாறுதல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
உயர்நிலை தலைமையாசிரியர் கலந்தாய்வு: கோர்ட் தடையால் நிறுத்தம்
Posted: 24 May 2013 04:44 AM PDT
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2001 டிச., 31ல், முதல் நிலை மொழியாசிரியர்கள், பணி நியமனம் பெற்றவர்கள், பி.எட்., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டது. 

மற்ற பாட ஆசிரியர்களுக்கு, 2013, ஜன., 1 வரையிலான பதவி மூப்பு, கருத்தில் கொள்ளப்பட்டது. தமிழ் மொழியில், பி.லிட்., பட்டம் பெற்றவர்கள், நேரடியாக தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், பி.எட்., பட்டம் பெறாததால், தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியாது. 

கடந்த, 2001டிச., 31க்கு முன், பி.எட்., பட்டம் பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே, தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதில் தமிழ், தெலுங்கு மொழி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த தெலுங்கு ஆசிரியர் சந்திரசேகர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகல் நடக்கயிருந்த, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 

விருதுநகர் முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) அமுதவள்ளி கூறுகையில், "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, கோர்ட் தடை உத்தரவு வழங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment