Friday, May 10, 2013

மாறுதல் படிவங்கள் (word format)


3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.


சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:
பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு

"ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் கல்வி பட்டப் படிப்பு வரை படிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்.

இதேபோல், பார்வையற்ற மாணவர்களின், வாசிப்பு உதவியாளர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப, 1,500 முதல், 3,000 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும். கால்கள் பாதிக்கப்பட்ட, 400 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர், இனி, 1,000 பேர்களுக்கு வழங்கப்படும். 

மனவளர்ச்சி குன்றியோருக்கு, சிகிச்சை அளிக்க, 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்படும். பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், முடநீக்கு வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு, இப்பிரிவு செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
பி.சி., - எம்.பி.சி., கல்வி உதவி தொகை: வருவாய் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

"கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

 
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான, 68 விடுதிகளுக்கு, நடப்பாண்டில் சொந்த கட்டடங்கள், 87 கோடி ரூபாயில் கட்டப்படும். இதில், 47 விடுதிகள், 100 மாணவர்கள் தங்கும் வகையிலும், 21 விடுதிகள், 50 மாணவர்கள் தங்கும் வகையிலும் கட்டப்படும். 

இவற்றில், சூரிய மின் உற்பத்தியும் அமைக்கப்படும். மேலும், ஐந்து பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், மூன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், ஒரு சீர் மரபினர் விடுதிகள், 2.50 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படும். 767 விடுதிகளைப் பராமரிக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், கல்வி உதவித் தொகை பெற, ஆண்டு வருவாய், 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 

இந்த இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்க, 50 சதவீத மானியம் அளிக்கப்படும். இதன் மூலம், 785 விவசாயிகளுக்கு, 3.84 கோடி ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு, சென்னை, எழும்பூரில், 4.27 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிரவுண்டு நிலம் கிரயமின்றி அளிக்கப்படும். இந்த நிலத்தில், 4 கோடி ரூபாயில், அலுவலகக் கட்டடம் கட்டப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
2013 - 2014ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாநில அரசின் கீழ் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவித்து தமிழக அரசு உத்தரவு

நாளை (11.05.2013) அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

இன்று (10.05.2013) பல மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் AEEOக்களின் மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆன AEEOக்களிடமிருந்து மாறுதல் விண்ணப்பங்கள் ஆகியவற்றை நாளை (11.05.2013) தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஒப்படைக்க DEEOக்கள் இருப்பதாக அறியப்படுகிறது. 


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவியுயர்வு கலந்தாய்வு மற்றும் விண்ணப்பங்கள் அளிப்பது குறித்த தகவல்கள் நாளை (11.05.13) DEEOக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும் - TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்

1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?

இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில்  இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.


2. சென்ற ஆண்டு பயன்படுத்திய மாறுதல் விண்ணப்பப் படிவத்தையே இந்த ஆண்டும் பயன்படுத்தலாமா?

இன்றோ, நாளைக்குள்ளோ இயக்குனரகம், கலந்தாய்வு விதிமுறைகள் குறித்த முழுமையான செயல்முறையையும் படிவத்தையும் வெளியிடும். அதுவரை காத்திருந்து அதை பின்பற்றுவதே சரியாக இருக்கும்.


3. இந்த வருட கலந்தாய்வு இணைய (ONLINE) வழியில் நடைபெற வாய்ப்புண்டா? 

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கலந்தாய்வு தேதிகள் ஒரே தேதியில் இல்லாமல் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுவதால், இணையவழியில் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.
பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - 193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2013 மாதத்திற்கு சம்பளம் வழங்க ஆணை



மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்



              தமிழகத்தில்  வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் 
 
 இருவர் முதலிடம்
              நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் அபினேஸ், ஜெயசூர்யா 1200க்கு 1189 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.


           நாமக்கல், வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெயசூர்யாவும், நாமக்கர் க்ரீன்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ்ம் மாநில அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடத்திலும் இரண்டு பேர்
              எஸ். வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பழனிராஜ் என்ற மாணவர் 1200க்கு 1188 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதேப்போல, ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஆர். அகல்யா 1188 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

3வது இடத்தில் 9 மாணாக்கர்
         மேலூர், கோசக்குலத்தில் உள்ள சிஇஓஏ மெட்ரிக் பள்ளி மாணவி ராஜேஸ்வரி, நாமக்கலைச் சேர்ந்த குறிஞ்சி மெட்ரிக் பள்ளி மாணவி கலைவாணி, நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் விஷ்ணு வர்தன், இதேப் பள்ளியைச் சேர்ந்த கண்மணி, மனோதினி, கிருஷ்ணகிரி எஸ்வி மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ரவீனா, செங்கல்பட்டு சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதிதா, பென்னேரி சுவாமி மெட்ரிக் பள்ளி மாணவி பூஜா எஸ் குமார், ஆவடி நசரேத் மெட்ரிக் பள்ளி மாணவி முத்து மணிகண்டன் ஆகியோர் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

               விவரங்கள் முறையே மாவட்டம்-தேர்வு எழுதியவர்கள்-தேர்ச்சி அடைந்தவர்கள்-தேர்ச்சி சதவிகிதம்-பள்ளிகளின் எண்ணிக்கை என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி:  23450 - 22050 - 94.03 - 195
திருநெல்வேலி:  34645 - 32777 - 94.61 - 259
தூத்துக்குடி:  19020 - 18157 - 95.46 - 153

ராமநாதபுரம்:             14596 - 13024 - 89.23 - 107
சிவகங்கை:                  14470 - 13287 - 91.82 - 121
விருதுநகர்:                    21224 - 20348 - 95.87 - 173
தேனி:                               13465 - 12600 - 93.58 - 102
மதுரை:                           34295 - 32159 - 93.77 - 253
திண்டுக்கல்:                   20748 - 18643 - 89.76 - 160
ஊட்டி:                             7756 - 6519 - 84.05 - 70
திருப்பூர்:                         21836 - 20283 - 92.89 - 159
கோயம்புத்தூர்:            36070 - 33527 - 92.5 - 308
ஈரோடு:                             26786 - 25254 - 94.28 - 176
சேலம்:                                  35996 - 32182 - 89.4 - 234
நாமக்கல்:                      30228 - 28537 - 94.41 - 175
கிரிஷ்ணகிரி:               19618 - 16319 - 83.18 - 134
தர்மபுரி:                          19549 - 16855 - 86.22 - 123
புதுக்கோட்டை:              17146 - 14909 - 86.95 - 122
கரூர்:                                     10025 - 9126 - 91.03- 83
அரியலூர்:                            7746 - 5805 - 74.94 - 58
பெரம்பலூர்:                         7839 - 7101 - 90.59 - 58
திருச்சி:                                 29776 - 27923 - 93.78 - 201
நாகப்பட்டினம்:                   17525 - 14843 - 84.7 - 108
திருவாரூர்:                            13464 - 11112 - 82.53 - 97
தஞ்சாவூர்:                       27181 - 24471 - 90.03 - 184
விழுப்புரம்:                      34977 - 27292 - 78.03 - 228
கடலூர்:                                    28765 - 21058 - 73.21 - 182
திருவண்ணாமலை:   26425 - 18474 - 69.91 - 170
வேலூர்:                              41061 - 33311 - 81.13 - 291
காஞ்சிபுரம்:                  42102 - 35675 - 84.73 - 292
திருவள்ளூர்:                      37837 - 32308 - 85.39 - 278
சென்னை:                     51281 - 47086 - 91.82 - 406
புதுச்சேரி:                        12552 - 11071 - 88.2 - 107
ஆந்திரப்பிரதேசம்:  43 - 43 - 100 - 1
துபாய்:                                16 - 16 - 100 - 1


200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?

               அதிகளவில், கணித பாடத்தில் 2352 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை விபரம்;
கணிதம் - 2352 பேர்
இயற்பியல் - 36 பேர்
வேதியியல் - 1499 பேர்

உயிரியல் - 682 பேர்
தாவரவியல் - 11 பேர்
புள்ளியியல் - 18 பேர்
கணிப்பொறி அறிவியல் - 1469 பேர்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - 1 பேர்
கணிதம் - 2352 பேர்
வரலாறு - 5 பேர்
பொருளியல் - 417 பேர்
வணிகவியல் - 1336 பேர்
கணக்கியல் - 1815 பேர்
வணிகக் கணிதம் - 430 பேர்.

தமிழ், ஆங்கிலம், விலங்கியல், புவியியல், அரசியல் அறிவியல், ஹோம் சயின்ஸ் போன்ற பாடங்களில், ஒருவர்கூட, முழு மதிப்பெண் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment