Saturday, December 15, 2012
குழந்தைகளின் ஞாபக சக்தியை 

அதிகரிக்க சில எளிய டிப்ஸ்


பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க..
நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல் .

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்

யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் .

4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
Example - news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை

8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.


மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைத்து படிக்க வேண்டும்

 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்


ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில், எஸ்.கே.பி., கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டு விழா, மற்றும் பள்ளியின் பொன்விழா மற்றும் கட்டடங்களின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், "அரும்பெரும் சக்தியை கண்டுணர்ந்து வெற்றி பெறுவேன்" என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:

நான் எனது வாழ்வில், ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது, அரிய சில அருமையான புத்தகங்கள் என் வாழ்வின் எண்ணங்களை மாற்ற உதவியாக இருந்தது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றே படித்து, எழுதி பார்ப்பதுடன், உள்மனதில் ஓவியம் போன்று பதிய வேண்டும்.

வீட்டில் பெற்றோர் உதவியுடன் ஒரு சிறு நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது படிக்க வேண்டும். விடா முயற்சியிருந்தால், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

உறக்கத்திலே வருவதல்ல கனவு; உன்னை உறங்காவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே, இளைஞர்களின் வாழ்க்கையில் கடுமையாக உழைத்து, அறிவை தேடி, விடாமுயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். பள்ளி செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், கலாம் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.
ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும்.

இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம்.

முதல்வர் ஜெயலலிதா கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment