Tuesday, December 11, 2012



முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது


சான்றிதழ் சரிபார்பிற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களைப்போல் இவர்களையும் பேருந்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பள்ளிக்கல்வி துறையில் இருந்தது முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Direct Recruitment of PostGraduate Assistants for the year 2011 - 12 - After Certificate Verification Individual Query is Published


click here for Direct Recruitment of Post of PostGraduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12
Direct Recruitment of Post of PostGraduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12
PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERFICATION
As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 27.05.2012. A total No. of 151441 candidates appeared for the written examination. Out of this, 8420 candidates were absent for the Examination and 143021 candidates attended the written Examination. After completion of written Exam, the Board released the list of 3103 candidates and they were called for Certificate Verification in the Teachers Recruitment Board website on 29.07.2012. The Certificate Verification was conducted on 03.08.2012. As per the direction of Hon’ble High of Court of Madras dated 01.10.2012, the Board revised answer keys for all subjects and revalued OMR answer sheets of all the candidates appeared for the written Examination and the merit list was released in the website on 18.10.2012. Based on the revised merit list 6267 were called for Certificate Verification on 30.10.2012.
Now, the Board has released the provisional selection list of Post Graduate Assistants in all subjects expect Botany, which has been withheld as per the interim direction of the Hon’ble High Court in WP22243 of 2012 and M.P. No. 1 of 2012 dated 03.09.2012. The interse seniority of the candidates will be given later, which is subject to the outcome of the appeal made in the judgment of W.P.Nos. 21170, 21171, 21172, 21387, 21231, 21232, 21946, 21947, 21779, 21716, 21868, 22073, 21683, 21114, and 25353 of 2012 and connected M.Ps. and W.P.(MD) Nos. 10551, 10662, 10927, 10819, 11025, 10705,10706, 10994, 10667, 11213, 10960, 11065, 8518, 11391 & 10679 of 2012 and connected M.Ps. dated 01.10.2012
The Board has decided, on humanitarian consideration give another chance to the absentees and those who have not produced Certificates in January 2013. Appropriate number of posts have been kept unfilled.
Further communication regarding postings and placements will be issued by the concerned departments.
Results for Indian Culture, Home Science, Political Science and minority languages will be released separately
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.


தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர்கள் TRB - தேர்வு நுழைவுச்சீட்டை (Hall Ticket) அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


மகாகவி பாரதியாரின் 131வது பிறந்தநாள் (11.12.12): அமைச்சர்கள் மரியாதை


மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சர்கள் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 131வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கும், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு தலைமை கொறடா, சென்னை மாநகர மேயர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கல்வி மட்டுமே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது

கல்வி மட்டுமே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், செவாலியர் விருது பெற்ற திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீட முன்னாள் துணைவேந்தர் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமியை பாராட்டி அவர் மேலும் பேசியது:
இந்த சிறிய கிராமமான சு.நாவல்பாக்கம் பல்வேறு சிறந்த வேத பண்டிதர்களை பல நூற்றாண்டுகளாக உருவாக்கி வருகிறது. அதில் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி மணிமகுடத்தில் வைத்த வைரமாக இந்த கிராமத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார். இவர் பல்வேறு பாடங்களில் பண்டிதராக இருக்கிறார்.

இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கல்வி மட்டுமே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அல்லது குரு ஆகியோர்தான் இந்த சமுதாயத்தில் ஆண்களையும், பெண்களையும் சிறந்தவர்களாக மாற்ற கூடிய திறன் படைத்தவர்களாக உள்ளனர். அடுத்தவருக்கு கல்வியை போதிப்பதால் மட்டுமே சிறந்த சமுதாயம் உருவாகாது. தான் கற்பிக்கும் முறைக்கு ஏற்ப தன்னையே முன்னுதாரணமாக கொண்டிருப்பவர்களால் மட்டுமே சமுதாய மாற்றம் ஏற்படும்.

உண்மையான ஆசிரியர் என்பவர் புத்தக அறிவையும் தாண்டி சிந்திப்பவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக இருப்பர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த குருவாக என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமியை பாக்கிறேன்.

அனைத்து மதங்களும் சமதர்மம், அமைதி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. ஆனால் மனிதநேயம் என்பது மதங்களை தாண்டி மனிதர்களிடம் சென்றடைவதாகும். உலகில் சகோதரத்துவமும் அமைதியும் சகிப்புத்தன்மையும் உருவாக நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் ஆளுநர்.

பின்னர் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி ஏற்புரையாற்றினார். முன்னதாக என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி எழுதிய "வியுபத்தி வாதம் பாகம் 2' என்ற நூலினை ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

டாக்டர்கள் கஸ்தூரி, கண்ணன், விழா நிர்வாகி என்.டி.சேஷாத்ரி, கல்லூரித் தாளாளர்கள் பி.முனிரத்தினம், டி.கே.பி.மணி, பா.போஸ், வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் புனிதவள்ளி குப்புசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment