Sunday, December 2, 2012


துறைத்தேர்வு - Collections


Sl.No 
Department Exam Materials
  Download
Size 
 1
Account Test Materials - ( Pages 1 to 25 )
2
Account Test Materials - ( Pages 26 to 48 )
3
Account Test Exercise Materials


EO
 

4
EO Exercise Materials


DI


5
DI Paper 1 - Materials - ( Pages 1 to 25 )

6
DI Paper 1 - Materials - ( Pages 26 to 47 )
   
7
DI Paper 2 - Materials
          
   
8
DI Paper 1 & 2 Important Points

All
9
  All 6 Papers Exercise Materials



 

நடுநிலைப்பள்ளியில் பயிலும் SC/ST 6,7 மற்றும் 8 வகுப்பு 

குழந்தைகளுக்கு புதிய அணுகுமுறையிலான கல்வி மூலம்

 2 நாள் வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்க SSA செயல்முறை


SASTRA UNIVERSITY - B.Ed (Distance Mode) Advt. and Prospectus 2013 -2014


IGNOU - RC, Madurai B.Ed.-2013 Admission Counselling



தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதிய பிரச்னை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும், தேர்வு நிலை தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தேதி என வரையறை இன்றி, தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை தகுதி பெறும் போது தர ஊதியம் ரூ.5400 என நிர்ணயம் செய்ய அரசைக் கேட்டுக் கொள்வது என அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் வீ.பாலமுருகபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் செ.ஜார்ஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் உரிய அரசாணைகளை வெளியிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் செயலர் நியமன ஒப்புதலின் போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கற்பிப்பு மானியத்தை நிறுத்தம் செய்யக் கூடாது.

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்.

விருதுநகர் மாவட்டத் தலைவர் செல்வமுருகேசன், மாவட்டச் செயலாளர் ஆதிநாராயணன், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீராம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார தலைவர் டேனியல் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் குமார் ஈவேரா நன்றி கூறினார்.
 

TET - Paper 2 - பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்


    பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" எனவும் அரசுக்கு நோட்டீஸ்அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 
 உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசுகள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள்,வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம்.
அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது.
நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி
நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" என்றார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

தனியார் பள்ளிகள் வரம்பிற்குள் மெட்ரிக் பள்ளிகள் வராது


     தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வராது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனைத்தும், சென்னைப் பல்கலை, மதுரை பல்கலையின் இணைப்பு பெற்றிருந்தது. பின், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைகழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டியதில்லை என, முடிவெடுக்கப்பட்டது.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான போர்டு உருவாக்க, 1977ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மெட்ரிக்குலேஷன் போர்டுக்கு, மெட்ரிக் பள்ளிகள் அளிக்க வேண்டிய நிதி பங்களிப்பு குறித்து, 2002ம் ஆண்டு, அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, கிருஷ்ணகிரியில் உள்ள டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாக சங்கம், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்&' பிறப்பித்த உத்தரவு: மெட்ரிக் பள்ளிகள் போர்டின் ஒப்புதல் பெற்று, மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகள், 1978 ஜூன் மாதம், அமலுக்கு வந்தது.

இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாகவும், மெட்ரிக் பள்ளிகள் பேணும் குணாதிசயங்கள் காரணமாகவும், தனியார் பள்ளிகள் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படவில்லை.

மனுதாரர்கள், மெட்ரிக் பள்ளிகள் என்ற அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள, ஒரு பக்கம் விரும்புகிறது. மறுபக்கம், அரசாணையின் மூலம் நிதிச்சுமை ஏற்படுவதால், இத்தகைய வழக்குகளை தொடுக்கின்றனர். இவர்கள், மெட்ரிக் பள்ளி அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை.

தனியார் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும், தனித் தனியானவை. "தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக் பள்ளிகள் வராது என்பதால், அந்தப் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது&' என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சதாசிவம் இருந்த போது, இந்த உத்தரவை பிறப்பித்தார். அவரது உத்தரவில், நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்&' உத்தரவிட்டுள்ளது.
 

Health News!




அவசியம் படிக்கவும்...!
ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது...

No comments:

Post a Comment