Tuesday, December 4, 2012

TET Selection List for Paper 1 & 2 will be published soon


ஆசிரியர் பணிக்கான இறுதி தகுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இறுதி பட்டியல் இன்று (04.12.12) மாலை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Paper 1 - Passed: 9,664  (M-          / F-         )
Paper 2 - Passed: 8,718  (M- 2875 / F-5843 )
Both 1&2 Passed: 956    (M-   383 / F-  573 )

Qualified without Certificate: 5

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி

 ஆசிரியர்களுக்கு சிக்கல்- dinamalar


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும் போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்" என, கூறப்பட்டு உள்ளது. 

இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாணையின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

மேலும், அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு அரசாணை நகலை அனுப்பி, ஒப்புதல் பெற்று, கோப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை மூலம், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

இதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையினால், தமிழகத்தில் உள்ள, "சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பணி நியமனம் பெறுபவர்கள், ஐந்தாண்டுகளுக்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்" என்ற தமிழக அரசின் முந்தைய அரசாணையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

அரசாணை தெரிவித்துள்ளபடி, 2010 ஆக., 23க்கு பின் என, குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டதே, தற்போதைய, அ.தி.மு.க., அரசில் தான். தேர்வு நடத்தப்பட்டதோ, 2012 அக்., 14ம் தேதி தான். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் அரசு சம்பளம் வழங்கி வரும் நிலையில், புது அரசாணையால், இனிமேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடுமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. 

பெரும்பாலான அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், நகரப்பகுதிகள் என்றால், 15 லட்ச ரூபாய் வரையிலும், கிராமப்புறங்கள் என்றால், எட்டு லட்ச ரூபாய் வரையிலும், "நன்கொடை&' என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிய பின் தான் பணியில் சேர்ந்துள்ளனர்.அவர்கள், "இனி சம்பளம் கிடைக்குமா?&' என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் , தன் பங்கேற்பு ஓய்வூதிய இரத்து உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறித்தி TNPTF ஐந்து கட்ட போராட்டம் அறிவிப்பு


3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் அரசு/நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வட்டாரத்திற்கு 20 (BRTs & Others) கருத்தாளர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 07.12.12 அன்று பயிற்சியளிக்க - சுகாதாரத்துறை செயல்முறை



பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற வழிகாட்டி கையேடு!


No comments:

Post a Comment