Monday, December 24, 2012

12th Std - Study Materials


(+2) பன்னிரெண்டாம் வகுப்பு மார்ச் 2013 தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலை இணையவழியில் (Online) சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் ஆகியவற்றை 31.12.12 க்குள் முடிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு

BC/ MBC மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு விலையில்லா சிறப்பு வழிக்காட்டிகள் வழங்கவும், அரசு/ நிதியுதவி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு/ சிறப்பு கற்பிப்பு கட்டணங்களையும் அரசே வழங்க - அரசு செய்தி வெளியீடு

தொடக்க/ நடுநிலை/ மேல்நிலை/ உயர்நிலை நிதியுதவிப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெறாமல் 23.08.2010க்கு பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளிக் கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர் பணியிடம் விரைவில் நியமனம்

   பள்ளி கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.
விலையில்லா லேப்-டாப் விற்பவர், வாங்குபவர் மீது கடுமையான நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

     தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா லேப்டாப் வழங்கி வருகிறது. இதற்காக, கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் வழங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப்கள் மறைமுகமாக 5 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் , சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

அந்த பணத்தில் சில மாணவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், குடும்ப வறுமைக்காக விற்பனை செய்யும் மானவர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கோவை கல்லூரி கல்வி இணை இயக்குனர் கதிரேசன் கூறுகையில், "விலையில்லா லேப்டாப் என்பது மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது; இதை விற்பது என்பது சட்டப்படி குற்றம். அரசின் சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்பது தவறு; விலையில்லா லேப்டாப் விற்பதும், வாங்குவதும் தெரிந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?

    மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வைப் பொறுத்தவரை, பலவிதமான மாற்றங்கள், மாநிலங்களின் பங்கேற்பு, பிராந்திய மொழிகள் தொடர்பான பிரிச்சினை மற்றும் தயாராவதற்கான குறுகிய காலம் போன்ற சிக்கல்களால், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் நிலைமை ஒன்றும் அவ்வளவு மோசமல்ல.

இத்தேர்வுக்கான பாடத்திட்டமானது, பலவிதமான மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்த பிறகே, CBSE, பள்ளிக் கல்வி வாரியங்களின் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இப்பாடத்திட்டத்தை தயாரித்துள்ளன. மருத்துவ கல்வியில், பல அம்சங்களையும் சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் ஏற்கிறார்களா?

இந்த பொது நுழைவுத்தேர்வானது(NEET), மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள், அகில இந்திய பிஎம்டி தேர்வு மற்றும் தனிப்பட்ட முறையில் கல்லூரிகளால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றுக்கு பதிலாகவே நடத்தப்படுகின்றன. இத்தேர்வை ஏற்றுக்கொள்வதில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உடன்படவில்லை என்றாலும், பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டு விட்டதாகவே கூறப்படுகிறது.

MCI பட்டியலிட்டுள்ள மொத்தம் 271 மருத்துவக் கல்லூரிகள், 2013ம் ஆண்டின் NEET தேர்வின்கீழ் வருகின்றன. இக்கல்லூரிகளில், மொத்தம் 31,000 இடங்கள் உள்ளன.

கலந்துகொள்ளாத கல்வி நிறுவனங்கள்

AIIMS என்ற நாட்டின் முதன்மையான மருத்துவக் கல்வி நிறுவனம், தனது உயர்தரத்தை பாதுகாக்கிறேன் என்று கூறி, இத்தேர்வில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது. பொதுவாக, மத்திய அரசின் உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தமக்கென தனி விதிமுறைகளை வைத்துள்ளன. எனவே, அவை இதுபோன்ற பொது நுழைவுத்தேர்வு முறைகளில் பங்கேற்பதில்லை.

தயாராதல்

இந்த புதிய நுழைவுத்தேர்வுக்கு தயாராவதில், மாணவர்கள், சில பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. தங்களின் சில பழைய வழிமுறைகளை களைந்துவிட்டு, பல புதிய வியூகங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேசமயம், தெளிவான திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இத்தேர்வானது, வெறும் மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இத்தேர்வை வெற்றிகொள்ளும் வகையில், மாணவர்களை தயார்செய்யும் பொறுப்பு, கல்வி நிறுவனங்களிடமும் உள்ளது என்பதை மறக்கலாகாது.

தேர்வின் வடிவம்

உங்களின் திட்டமிடலை தெளிவாக மேற்கொள்ள, தேர்வு வடிவத்தை நன்கு அறிந்துகொண்டால்தான் முடியும். எனவே, அதைப்பற்றி இப்போது அறிந்துகொள்ளலாம். முந்தைய ஆண்டு வரை நடத்தப்பட்ட All India Pre - Medical Test -ல், மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

மொத்தம் 3 மணிநேரங்கள் நடைபெறும் இத்தேர்வில், 1/4 என்ற அளவில் நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இந்த நெகடிவ் மதிப்பெண் முறை, இந்த NEET தேர்விலும் தொடரும். ஆனால், இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளில், தலா 45 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.

ஆலோசனைகள்

இத்தேர்வை CBSE நடத்துவதால், NCERT புத்தகங்களை முழுமையாக, தெளிவாக படித்துவிட வேண்டும். கொடுக்கப்படும் எண்களை விரைவாக புரிந்துகொள்ள வேண்டும். NCERT புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து exercise -களையும் சிறப்பாக செய்து முடிக்கும் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி முடிக்கும் பயிற்சியைப் பெற, மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண, நிமிட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால், நிஜத் தேர்வை எழுதும் முன்பாக, குறைந்தபட்சம் 15-20 மாதிரித் தேர்வுகளை எடுத்துக்கொண்டு பயிற்சி பெறுவதே, உங்களின் இலக்கினை அடைய உதவும்.

NEET -யுடன் ஒப்பிடும்போது, CBSE -ல், 11 மற்றும் 12ம் வகுப்புகளின் பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் இருக்கும். எனவே, பாடத்திட்டத்துடன் ஒரு நெருக்கமான ஒப்பீட்டை, கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

பழைய AIPMT தேர்வுகளின் கேள்வித்தாள்களை எடுத்துப் பார்த்து, அதனடிப்படையில் பயிற்சி பெறுவதும் பயனளிக்கும்.

உங்களுக்கான உதவி

மாணவர்களுக்கு, NEET தேர்வை எளிதாக்கும் வகையிலான வியூகங்களுடன், பல கல்வி நிறுவனங்கள் தயாராக களத்தில் உள்ளன. உதாரணமாக, கர்நாடக தேர்வுகள் அத்தாரிட்டி, இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், Capacity - building programme என்ற திட்டத்தை வைத்துள்ளது. பலவிதமான புதிய வழிமுறைகள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுடன், பல கோச்சிங் நிறுவனங்களும், களத்தில் தயாராக உள்ளன.

அன்றாட தயாரிப்புகள்

எந்த செயலுக்குமே, திட்டமிட்ட கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. பாடத்திட்டம் மிகவும் விரிவானதாக இருப்பதால், உங்களின் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டத்தை, ஒரு நாளுக்குரியது அல்லது ஒரு வாரத்திற்கு உரியது என்கிற ரீதியில் வகுத்துக் கொள்ளவும். அதன் முடிவில், உங்களது செயல்பாட்டின் வெற்றியை மதிப்பிட்டுக் கொள்ளவும்.

ஏதாவதொரு பாட அம்சம் உங்களுக்கு புரியவில்லை எனில், அதை உரியவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற தயங்க வேண்டாம். மேலும், பிரிவு வாரியாகவும் மாதிரி தேர்வைஎழுதி பயிற்சி பெறலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கும் செல்லும் முன்பாக, உங்களின் முந்தைய நிலையின் பலவீனங்களை கண்டிப்பாக சரிசெய்து கொள்ள வேண்டும். படித்த பகுதிகளை, திரும்ப திரும்ப படித்துப் பார்ப்பது மிகவும் நல்லது. ஆலோசனைகளை சரியாக கடைபிடித்து, கடினமாக உழைத்தால், நீங்கள் மருத்துவராவது நிச்சயம்.

தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

      தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

     தமிழகத்தில் டி.இ.டி., தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார்.

கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, புதிய ஆசிரியர்களுக்கு பாடமெடுப்பது, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்த, புதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டம் தயார்

    அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.     கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும். இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, "ஆன்-லைனில்' சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்-லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது. பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது. ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.
தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

      பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

     பழைய முறையில் மாணவ, மாணவியர் விபரங்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும், எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விபரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இம்முறை மாணவ, மாணவியர் விபரங்களை, இணையதளம் வழியாகப்ப திவு செய்யும்படி, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியரிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மின்தடை அதிக அளவில் உள்ளது. பள்ளி நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. ஒரு மாணவனின் விபரங்களைப் பதிவு செய்ய, குறைந்தது பத்து நிமிடங்களாகிறது.

மாணவனின் புகைப்படத்தை, கணினி ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மாணவர்களின் பிறந்த தேதி, 98ம் ஆண்டு ஜூன் மாதமாக இருந்தால், பதிவு செய்ய முடிகிறது. அகற்கு மேல் இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, கணினி ஏற்றுக் கொள்வதில்லை.

எனவே, தேர்வுத்துறை இயக்குனர் கூறியபடி, ஜனவரி மாதம் நான்காம் தேதிக்குள், அனைத்து மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வது சிரமம். மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாணவ, மாணவியரின் விபரங்கள், பழைய முறைப்படி குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அவற்றை மீண்டும் இணையதளத்தில் பதிவு செய்ய காலதாமதமாகும்.

எனவே, பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதித்தது போல், பழைய முறையை பின்பற்றி, திருத்தங்களை மட்டும் இணையதளம் மூலம் மேற்கொள்ள, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (டிச. 24) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

        அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும்.
       தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஜனவரி 2 முதல் 4 வரை தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் மார்ச் 2013 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த தனித் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

No comments:

Post a Comment