Friday, December 7, 2012


ஆசிரியர்கள் கண்காணிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம்


ஆசிரியர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பெற்றோர் 15, ஆசிரியர் 5 பேர் கொண்ட மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது. இவர்களில் ஆறு பேர், பள்ளி நிர்வாகத்தை கண்காணிக்க தேர்வு செய்யப்படுவார்கள். 

குழு தலைவராக பெற்றோர், செயலாளராக தலைமை ஆசிரியர் இருப்பர். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் வருகை, இடைநின்றல் மாணவர்களை சேர்த்தல்,கட்டட வசதி, ஆசிரியர் மாற்று பணி செய்வதை கண்காணிக்கும் அதிகாரமும், இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் (+2) வகுப்பு அக்டோபர் 2012 தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் 07.12.12 அன்று வெளியிடப்படுகிறது, சான்றிதழ்களை 17 முதல் 19.12.12 வரை தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் - அரசு தேர்வு இயக்ககம் செய்திக்குறிப்பு


பள்ளி , ஆசிரியர் மற்றும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி துறையின் வழிக்கட்டுதல்கள் - செயல்முறை


பொறியியல் உதவிப்பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 22.04.2012 அன்று நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 151 உதவி பேராசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியீட்டு தமிழக அரசு ஆணை.


வழக்கறிஞர்களுக்கு 9ம் தேதி தகுதித் தேர்வு


வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி, கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்றால், பார் கவுன்சில் நடத்தும், தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தகுதி தேர்வுக்கு, தமிழகத்தில் படிக்கும் சட்ட மாணவர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தகுதி தேர்வை கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என, பார் கவுன்சில் கூறியது.

கடந்த, ஜனவரியில் நடந்த, தகுதி தேர்வில், 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது, இம்மாதம், 9ம் தேதியன்று, தகுதி தேர்வு நடக்க உள்ளது. சென்னையில், நான்கு, திருச்சியில், இரண்டு, கோவையில், இரண்டு, மையங்களில் தேர்வு நடக்கிறது. 

இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், டி.செல்வம் கூறியதாவது: தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவலை பார் கவுன்சிலின் இணைய தளத்தில் பெறலாம். 

நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள, தேர்வு மையத்துக்கு, ஒரு மணி நேரம் முன்பாக சென்று, அங்குள்ள மேற்பார்வையாளரை அணுக வேண்டும்.

வழக்கறிஞர் அடையாள அட்டையை காண்பித்து, தேர்வு எழுதலாம். தகுதி தேர்வை, நல்ல முறையிலும், பார் கவுன்சில் நிர்வாகிகளின் மேற்பார்வையில், இந்த தேர்வு நடக்கிறது. தேர்வை அமைதியாக நடத்த, போலீசாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. தேர்வை தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, டி.செல்வம் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு : சென்னை பல்கலை ஆய்வு


ஆசிரியர்கள் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றிய ஆய்வை, சென்னை பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை, திருவள்ளுவர் மாவட்டங்களில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 

ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் என, இரு மாவட்டங்களிலும் உள்ள, 100 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கிராமப்புற, நகர்ப்புற ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாடுகள், தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த, ஆசிரியர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனரா, அதற்கு நேரத்தை செலவு செய்ய விரும்புகின்றனரா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 

ஆய்வு முடிவை அடிப்படையாக வைத்து, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு, அரசு பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் (பொறுப்பு), மாதேஸ்வரன் கூறியதாவது:
முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பின், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவு, ஆசிரியர்களுக்கு உள்ளதா என்பதை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கம். இன்னும், மூன்று மாதங்களில் இந்த ஆய்வின் முழு தகவல் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment