Wednesday, December 26, 2012

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது

டிச.27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும்.

2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்கு கட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர் என கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.
ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா?

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் தாளில் 10621 பேரும், இரண்டாம் தாளில் 8722 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்தமாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 19000 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல்வர் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இம்மாதம் 17ம் தேதியே பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் பணியில் சேர கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதில் 2 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். 3 பேர் எம்.எட் தேர்வுக்கு தயாராகி வருவதால் மே மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இவர்கள் தவிர மற்றவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

பணி நியமனம் பெற்றவர்களில் பலர் வேறு பணியில் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வார்களா என்ற சந்தேகம் உள்ளது.
முன் அனுமதி பெறா மல் பணியில் சேராமல் இருந்தால் 3 முறை பள்ளிக் கல்வித் துறை மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கான விளக்கம் அளிக்காமல் இருந்தால் அவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது. சான்று சரிபார்ப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.

அவர்கள் இப்போது சான்று சரிபார்ப்புக்கு வரத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையே, பணி நியமனம் பெற்று ஆசிரியர் பணியில் இதுவரை சேர்ந்துள்ளவர்கள் யார் யார் என்ற விவரத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும்.

மேலும், பணியில் சேராமல் உள்ளதன் காரணத்தையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த விவரங்கள் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தொடக்க கல்வித்துறைக்கும் இன்று விவரங்கள் வருகின்றன.
பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை அனைத்து அரசு / தனியார் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2013 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி அறிக்கை சமர்பிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பல்வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தாலும், அவர்கள் பணியில் சேர்ந்த்து பின் தகுதியுள்ள விடுப்பு எடுத்து படிப்பை தொடரலாம், படிப்பை முடித்து மீண்டும் பணியில் சேரலாம் - பழைய அரசாணை


(இது தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்துள்ள புதிய ஆசிரியர்கள் தாங்கள் படித்து வந்த கல்வியை தொடர பொருந்தும் என அறியப்படுகிறது)
பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020" இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்" போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்

கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது.

இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, 4 சதவீதம் பொறியியல் கல்லூரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லூரிகளில், 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட போது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும் போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவிற்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே, இந்நிலைக்கு முக்கிய காரணம். கடந்த, 1978 முதல் 1990 வரை தொழில் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள், 5,300 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, 1,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சில பள்ளிகளில், இப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மிகவும் சொற்ப சம்பளத்திற்கு, ஆசிரியர்களை நியமித்து உள்ளனர். 

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்காமல், மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற தவறான காரணங்கள் கூறி, பள்ளிகளில், இத்துறை மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் நல்லப்பன் கூறியதாவது: 

கடந்த, 2007 ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யவும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், காலி பணியிடங்களை நிரப்பவும், எவ்வித நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இப்பிரிவுகள் துவக்கப்படுவதும் கிடையாது. 

மத்திய அரசு, கடந்த முறை தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, 100 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை. தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, பல பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பணி மூப்பு, தகுதிக்கு ஏற்ப, பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எவ்வித பதவி உயர்வும், எங்களுக்கு இல்லை என்பது, வேதனைக்குரியது. 

மேலும், 27 ஆண்டுகள் பணிபுரிந்தும், நடைமுறை சிக்கல் என்ற பெயரில், 400 ஆசிரியர்கள் ஓய்வூதியம், பிற உதவிகள் ஏதும் இன்றி, ஓய்வு பெற்று உள்ளனர். இதுபோன்று, தொழில் கல்வி பாடப்பிரிவில் பாகுபாடு காட்டுவது சரியல்ல. இதற்கு, அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு - Dinamalar

பள்ளி கல்வித்துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மணி, ஓய்வுபெற்றதும், ஆசிரியர் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய இடைநிலைக் கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார்.

பொது நூலகத்துறை இயக்குனர் பணியிடமும், காலியாக உள்ளது. இதை, தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கூடுதலாக கவனித்து வருகிறார்.

நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த வரை, நூலகத் துறை இயக்குனராக நியமிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, கூடுதல் பொறுப்பு நிலையே தொடரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால், அதிகாரிகள் மட்டத்தில், விரைவில் மாற்றங்கள் வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேர்வுத்துறை இணை இயக்குனர் தங்கமாரி மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களின் பதவி உயர்வால், இரண்டு, இணை இயக்குனர் பணியிடங்கள் காலி ஏற்படும். நூலகத் துறையில், ஒரு இணை இயக்குனர் பணியிடம், ஏற்கனவே காலியாக உள்ளது. இந்தப் பதவியை, கண்ணப்பன், கூடுதலாக கவனித்து வருகிறார். 

எனவே, பணிமூப்பு பட்டியலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூன்று பேர், இணை இயக்குனர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இந்த மாற்றங்கள் அனைத்தும், புத்தாண்டு பிறந்ததும் நடவடிக்கைக்கு வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. 

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,' என்றார்.

No comments:

Post a Comment