Tuesday, December 25, 2012

சமச்சீர் கல்வி முறையில் 2013 பொதுத் தேர்வுகள் எழுதும் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள் அமைத்தல் சார்பாக அறிவுரைகள் வழங்கி தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவு.

8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ்

பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், அலுவலகங்களில் உதவியாளர் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாக கருதப்படுகிறது. இத் தேர்வெழுத வயது வரம்பு இல்லாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிலும் இத்தேர்வை எழுதுகின்றனர்.

"இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்" நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகளில் முறையாக பயிலும் மாணவர்களை மட்டுமே 8ம் வகுப்பு வரை தோல்வியடைய செய்யக் கூடாது என தேர்வுத்துறை அறிவித்தது.

இந்த புதிய திட்டம் கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் 22.62 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
SSLC பொதுத்தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியல் பள்ளி அளவிலேயே ONLINE மூலம் தயாரித்தல் தேர்வு கட்டணம் மற்றும் செலுத்தும் தேதி- அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் முக்கிய அறிவுரைகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு
கடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. 
இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒரு இளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில்  இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.

இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று  இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும்  உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும்,  100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு  நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன்  உத்தரவிட்டார்.
இரட்டை பட்டங்கள் பணிநியமனத்திற்கோ பதவியுயர்வுக்கோ செல்லாது என 14.08.2012 அன்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது, தீர்ப்பிற்கு முன் மற்றும் பின் பள்ளிகல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மற்றும் அண்ணாமலைப் பல்கலைகழத்தால் வெளியிடப்பட்ட கடிதங்கள் மற்றும் தீர்ப்பு நகல்

மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க புதிய நடைமுறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், மாற்றுத் திறனாளி தேர்வாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், புதிய நடைமுறையை, தேர்வுத் துறை கொண்டு வந்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் செயல் தன்மையை பொறுத்து, தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்குதல், தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர் நியமனம் உள்ளிட்டவை குறித்து பரிந்துரை செய்து, கல்வித் துறை வாயிலாக, தேர்வுத் துறைக்கு, கருத்துரு அனுப்பப்படும்.  இதை உறுதி செய்த பின், மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் சலுகை வழங்கப்படும். நடப்பாண்டில், இம்முறையை எளிமையாக்கி, தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. 

பள்ளிகளுக்கு தேர்வுத் துறை அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் சொல்வதை, எழுதுபவர் நியமனம் குறித்த கருத்துருக்கள், தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, தாமதமாகக் கிடைக்கிறது. எனவே, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து, இம்மாணவர்கள் குறித்த குறிப்பிட்ட சான்றிதழ்களை பெற்று, உடனடியாக அனுப்ப வேண்டும். 

பார்வையற்றோர் என்பதை நிரூபிக்கும் வகையில், அரசு கண் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்; உடல் ஊனமுற்றவராயின், தேர்வு எழுத இயலாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர் என, வழங்கப்பட்ட சான்றிதழ்; தேர்வரின் முழு அளவிலான போட்டோ, சொல்வதை எழுதுபவர் நியமனம் அல்லது கூடுதல் நேரம் வழங்க வேண்டிய மாணவர்கள் விவரம் ஆகியவை குறித்து, தக்க ஆதாரங்களுடன் கருத்துருக்கள் வழங்க வேண்டும். 

காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு, முதன்மை மொழி அல்லது ஆங்கில மொழியிலிருந்து, தேர்வு விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான கருத்துருவும் அனுப்ப வேண்டும். "டிஸ்லெக்சியா' குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தேவைப்படும் சலுகைகள் வழங்கக் கோரும் விண்ணப்பங்களை, அரசு மருத்துவர்கள் அல்லது மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய அரசு மருத்துவக் குழு வழங்கும் சான்றிதழ், பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் பரிந்துரை சான்றிதழ் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனமான, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் வழங்கும் சான்றிதழ்களுடன், விண்ணப்பிக்க வேண்டும். 

செய்முறை தேர்வுக்கு விலக்கு கோரும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விவரம், பள்ளிகளில் இருந்து, கல்வி மாவட்ட வாரியாக தொகுத்து வழங்க வேண்டும். இவை, வரும், ஜன., 9ம் தேதிக்குள், அந்தந்த தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனரகத்துக்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாக, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை, கடந்தாண்டு அரசு அறிமுகப்படுத்தியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு, கல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம் பேருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தற்போது, முதலாமாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினி குறித்த போதிய அறிவு இல்லாத காரணத்தால், பாடல்களை கேட்கவும், சினிமா பார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார் உள்ளது. மேலும், சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.
அரசின் மடிக்கணினிகள், தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்கு அமோகமாகக் கிடைக்கின்றன. கேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, கூடுதல் விலைக்கு கேரளாவில் விற்கின்றனர் என்ற புகார், பரவலாக எழுந்திருக்கிறது; அரசுக்கும் பல புகார்கள் சென்றுள்ளன.

மடிக்கணினி விற்பதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், மடிக்கணினியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியை கொண்டு வர வேண்டும்; இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது: ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை, விற்பனை செய்வது வேதனைக்குரியது. கல்லூரியில் உள்ள வரை, மாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில் பயன்படுத்தும் வகையில், கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை, விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதிக்காக காத்திருக்கும் பொதுத்தேர்வு அட்டவணை- dinamalar

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.

மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனரகம், மும்முரமாக செய்து வருகிறது. பிளஸ் 2 மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், பிளஸ் 2 மட்டுமில்லாமல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் சேர்த்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 

முதல்வரின் அனுமதிக்காக, தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. இது தொடர்பான கோப்பு, முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, இரு வாரங்களாக காத்திருக்கிறது. அட்டவணையைப் பார்த்து, இறுதி செய்து, முதல்வர் அனுமதி வழங்கியதும், அவை வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், தேர்வு அட்டவணையை, மாணவர்கள், பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். எனவே, அட்டவணையை, விரைவில் வெளியிட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி

"குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாசார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.

வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர். பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தொலைக்காட்சி சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu


(October- 2012)

Chennai-4 (Professional & Executive)AriyalurChennai-4 (Technical Personnel)
Chennai-4Chennai-35 (Unskilled)Coimbatore
Coimbatore (Technical Personnel)Chennai-4 (Physically Handicapped)Dindigul
ErodeCuddaloreKarur




KrishnagiriKancheepuramNagapattinam
NagercoilMaduraiPerambalur
PudukottaiNamakkalSalem
SivagangaiRamanathapuramTheni
TiruvannamalaiThanjavurTirunelveli
ThiruvallurThoothukudiTrichy
UthagamandalamThiruvarurVillupuram
VirudhunagarVelloreMadurai (Professional & Executive)
TiruppurDharmapuri 
 
Employment Exchanges Act                
 
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers  
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
Tamil/English        Telugu        Kannada        Malayalam       Urdu 
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list.  Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.
Class Xth - Supplementary Examinations Results - October 2012New

பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் வானவியல் வகுப்பு

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் குறித்த 3 நாள் குளிர்கால வகுப்பு நடைபெற உள்ளது.

டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வகுப்புகளில் சூரிய குடும்பம், சந்திரன் குறித்த தகவல்கள், நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, பால்வெளி மண்டலம் உள்ளிட்டவை பற்றி கற்றுத் தரப்படும். இவ்வகுப்பில் 7,8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன், வானவெளிகளை நவீன டெலஸ்கோப் மூலம் பார்க்கும் வசதியும் இவ்வகுப்பில் செய்யப்பட்டுள்ளது.

காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இவ்வகுப்புகள் நடைபெறும். முன்பதிவு செய்யும் முதல் 50 மாணவர்கள் மட்டுமே குளிர்கால வானவியல் வகுப்பில் கலந்து கொள்ள முடியும். மேலும், விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 044 - 24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
2012-13 மூன்றாம் பருவ பாடநூல்கள் 26.12.2012 முதல் பள்ளிகளுக்கு வழங்கவும், தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகள் 22 வட்டாரங்களில் உள்ள விற்பனை மையங்களில் விடுமுறை நாட்களிலும் பெற்று கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு

No comments:

Post a Comment