Friday, December 21, 2012


அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை

     அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 
 
 
 தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. இம்மாநாட்டில், மாவட்டங்கள் தோறும் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

இறுதியில், சிறப்பாகச் செயல்பட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகளை, முதல்வர் வழங்கினார். மாநாட்டு முடிவில், முதல்வர், மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன், மாவட்ட வாரியாக, 343 அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அவர் பேசும் போது, "மக்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் வழங்குவதில், நாம் உதவி செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைய, இந்த மாநாடு மூலம், பல்வேறு ஆலோசனைகள், திட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன,&'&' என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும். ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு, கம்பளி இணைந்த சீருடை வழங்கப்படும்.

தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும்.

விருதுநகர், தர்மபுரி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன என்றார்.

 
பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்படும்' என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இத்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் முக்கியமானது. முப்பருவ கல்வி முறையில், முழுமையான தொடர்
கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளிகள், மாணவர்கள் கல்வித் தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்குவதற்கான ஒப்புதல் போன்ற பணிகளில், டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தற்போது, 75 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன.டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல், இந்தாண்டு ஜனவரியிலேயே தயாரிக்கப்பட்டு, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எவ்வித அறிவிப்பும், இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: காலியாக உள்ள, டி.இ.ஒ.,க்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பணிமூப்பு பட்டியலில், 15 தலைமையாசிரியர்களுக்கு சரியான, "ரெக்கார்டு' இல்லை. பொதுவாக, 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டுமென்றால், பணிமூப்பு பட்டியலில் உள்ள, 100 பேருக்காவது, "ரெக்கார்டு'கள், பணிப் பதிவேடு சரியாக உள்ளதா என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது வழக்கமான நடைமுறை. "ரெக்கார்டு' பிரச்னை உள்ள தலைமையாசிரியர்கள் குறித்து அவர்களுக்கு மேல் பணியாற்றிய டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம் சரியான ஆவணங்கள் கேட்டு பெற்று வருகிறோம். காலிப்பணியிடங்கள் நேர்மையாக நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment