Sunday, January 19, 2014

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்ரிதழ் பெறும் படிவம்-
அரசாணை எண் 145 நாள் 30.09.2010

CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பருவத்தேர்வு வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்"-டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பருவத்தேர்வு வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. "தாள்-2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட "செமஸ்டர்" வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால் "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது டி.ஆர்.பி.,யின் உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்ட வண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும் கைகாட்டுவதால், சான்று பெற முடியாமல் தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர்.
கல்லூரியில் அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்த போது "முடிவு நிறுத்தி வைப்பு" (வித் ஹெல்டு) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பல்கலைகள், "கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என பதில் கூறுகின்றன.
கல்லூரிகளில் கேட்டால், "பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை" என கூறுகின்றனர். "பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை" என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதனால் சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், "செமஸ்டர்" வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது.
"புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில் அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று "செமஸ்டர்" வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என தெரியவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த டி.இ.டி., தேர்வுகளிலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல, இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி:

சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு  பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில்  பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது.
இதற்காக சிறப்பு தேர்வும்  நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின், பணி நிரந்தரப்படுத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்  அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு  நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட் டவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடந்த மறுதேர்விலும் சுமார் 480 பேர் தேர்ச்சி  பெறவில்லை. 

அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில்,  தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 20  தவறானது. இதற்கு விடை எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் கொடுத்தால், அவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.   இல்லாவிட்டால் மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை உயர்  நீதிமன்றம் விசாரித்து தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும்  கணினி ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சசிதரன்  ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரனும், அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல்  அரவிந்த் பாண்டியனும் ஆஜராகி வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உ த்தரவிட முடியாது, மனுவை தள்ளுபடி செய்கிறோம். தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனுதாரர்கள் கோரியதை ஏற்க முடியாது’’  என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

மார்ச் 3ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள், இம்மாத இறுதியில் வழங்கநடவடிக்கை:
வரும், மார்ச் 3ல் இருந்து, 25 வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத் துறை, தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், 'தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில், பள்ளி அளவில் திருத்தங்கள் இருந்தால், 20ம் தேதிக்குள், மாற்றம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 21 முதல், 23 வரை, அந்த திருத்தங்களை, இணையதளம் வழியாக, மாவட்ட கல்வி அலுவலர்கள், சரி செய்ய வேண்டும்' என, 32 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள், திருத்தங்களை பதிவு செய்ததும், அந்த விவரம், நேரடியாக, சென்னையில் உள்ள, 'டேட்டா சென்டரில்' பெறப்படும். பெறப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 8 லட்சத்து, 26 ஆயிரத்து, 67 மாணவர்கள், தேர்வை எழுதுகின்றனர். பிளஸ் 2 செய்முறை தேர்வு, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என்பதால், இம்மாத கடைசி வாரத்தில், 8.26 லட்சம் மாணவர்களுக்கும், பதிவு எண்களை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 27ம் தேதியில் இருந்து, 31ம் தேதிக்குள், மாணவர்களுக்கு, ஏழு இலக்கங்கள் கொண்ட பதிவு எண் வழங்கப்படும்.

No comments:

Post a Comment