Wednesday, January 8, 2014

NCOME TAX & FORM 16 FORMAT

click here to download INCOME TAX & FORM 16 FORMAT

கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்பு:

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில்உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும்
என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட்1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி6முதல்8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம்1:35என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள்கூடுதல் 30மாணவர்களுக்கு 1பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்,ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணிநிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு,நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையில் கருத்துருக்கள்,உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.15 மணிக்கு தொடங்கினால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 9-15 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுஎஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு பதிலாக இந்த வருடம் முதல் முதலாக காலை 9-15 மணிக்கு தொடங்கும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்டு) பி.எல்.சுந்தரம் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலை 9-15 மணிக்கு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என கருதுகிறேன்.தேர்வு நேரம் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. இதுபொருத்தமானதாக இல்லை என நினைக்கிறேன்.மாணவர்களுக்கு பதற்றம் மாணவ-மாணவிகள் காலை 9-15மணிக்கு தேர்வுக்கு வர அதிகாலையில் எழுந்து புறப்பட தயாராக வேண்டி உள்ளது. அதனால் மாணவர்களுக்கு படிப்பதற்கான காலம் குறைவதோடு பதற்றத்திற்கும் ஆளாவார்கள்.ஆகவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் நேர மாற்றத்தை திரும்ப பெற்று ஏற்கனவே இருந்தபடி காலை 10 மணிக்கு தேர்வினை தொடங்க உத்தரவிட வேண்டுகிறேன்.இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை:

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு நேற்று மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

"தொடக்க கல்வி துறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனறர். அதேபோலபள்ளி கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களிலும் பள்ளி உதவியாளர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சீரான தேர்ச்சி விகிதம் உள்ளது. எனவேஅங்கு வேலைபார்க்கும் சுமார் 150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடவேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. ,மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கொண்டு வரப்படும் மாற்றங்களை இந்த செயற்குழு வரவேற்கிறது. அதே சமயத்தில் மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர வேண்டும்."
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது:
இதற்காக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சமூகவியல் ஆசிரியர்களுக்கு ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை அந்தந்த வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ச.கண்ணப்பன் கூறினார்.
வட்டார அளவில் பயிற்சி வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி சென்னையில் திங்கள் (ஜனவரி 6) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜனவரி 7)வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு புவியியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த ஆண்டு 46 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 9 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் புத்தகங்களைப் பயன்படுத்தவும்இதைப் பயன்படுத்தி மாணவர்களிடையே புவியியல் மற்றும் வரைப்பட ஆர்வத்தை வளர்க்கவும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது என கண்ணப்பன் தெரிவித்தார்.
இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள்உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்8- ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு செயல்பாடுகளுடன் கூடிய புதிய முறையில் புவியியல் மற்றும் வரைபடம் கற்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சிக்காக "அறிவோம் அகிலத்தைஎன்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையேட்டில் திசைகளைக் கற்பித்தல்வரைப்படத்தில் உள்ள அளவுகளை அறிமுகப்படுத்துதல்அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் பயன்பாட்டை மாணவர்களுக்கு விளக்குதல்நேரத்தைக் கணக்கிடுதல் உள்ளிட்டவை தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட செயல் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
புவி மாதிரிவரைப்படம் (மேப்)அட்லஸ் புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தல்புவியமைப்பில் உள்ள முக்கிய நிலத்தோற்றங்கள்அரசியல் மற்றும் இயற்கை உள்ளிட்ட பல்வேறு வகையான வரைப்படங்கள்வரைப்படங்களில் உள்ள குறியீடுகள் போன்றவை தொடர்பாகவும் மாணவர்களுக்கு புதிய முறையில் விளக்கும் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு மாணவரும் தங்களது இருப்பிடத்துக்கும்வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தை தாங்களே கணக்கிடும் திறனைப் பெறுவர். வரைப்பட அளவைகளும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுவதால்,வரைபடங்களில் உள்ள தூரங்களைக் கொண்டு ஊர்களுக்கு இடையேயான தூரத்தையும் அவர்கள் கணக்கிடலாம் என்று ஆசிரியர் பயிற்சியாளர்களும்மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் விரிவுரையாளர்களுமான என்.மகாலட்சுமிடி.அகிலா ஆகியோர் தெரிவித்தனர்.
வரைப்படங்கள்நிலத்தோற்றங்கள்நாடுகள் மற்றும் நேரக் கணக்கீடுஅட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகுறியீடுகள் ஆகியவைத் தொடர்பாக போட்டித் தேர்வுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன.
எனவே இத்தகைய அடிப்படைகளை மாணவர்கள் கற்றுக்கொண்டால் இந்தத் தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பயிற்சி) எஸ்.உமா கூறினார்

No comments:

Post a Comment