Saturday, January 4, 2014



ஜனவரி 4: கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் பிறந்த தினம் இன்று


சிறுவனாக அப்பாவின் பட்டறையில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஊசி குத்தி ஒரு கண்பார்வை போனது ; இன்னொரு கண்ணிலும் பார்வை பரிவுக்கண் நோய் தாக்கப்பட்டு போனது . மனம் தளர்ந்து போகாமல் இசையை கற்றார் இவர் ; இவரின் ஆர்கன் இசை ஒலிக்காத தேவாலயங்களே இல்லை என்கிற அளவுக்கு தேறினார் .

பிரெஞ்சு படைகள் இரவில் செய்திகளை புள்ளிகளை கொண்டு பரிமாறிக்கொள்ளும் முறையை பற்றி கேள்விப்பட்டார் அதையே சில புத்தகங்களை வாசிக்க பயன்படுத்த ஆரம்பித்தார் . ஆறு புள்ளிகளை கொண்டு தடவி வாசிக்கிற முறையில் தன் கண்ணை குத்திய ஊசியைக்கொண்டே முறையை உருவாக்கினார் . அவர் உயிருடன் இருக்கும் வரை இம்முறை அமலுக்கு வரவில்லை .அவர் காசநோயால் இறந்து இரண்டு வருடங்கள் கழித்தே அம்முறை அமலுக்கு வந்தது .இருளில் இருந்த அவரைப்போன்ற நண்பர்களுக்கு வெளிச்சத்தின் சாளரங்களை திறந்துவிட்ட அவரை நினைவு கூர்வோம்

_ பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment