TET தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும், எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் வழக்கம், ஆசிரியர்களிடையே பரவலாக உள்ளது.
இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. டியூஷன் சேர முடியாத மாணவர்கள், ஒதுக்கப்படும் நிலை உருவாகிறது மற்றும் ஆசிரியர்களின் பணி அக்கறையும் குறைகிறது. தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே அவர்கள் தனி அக்கறை காட்டுகின்றனர். பிற மாணவர்களை கண்டுகொள்ளாமல் விடும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இல்லையேல், அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment