Tuesday, January 7, 2014

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்

      ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

        இந்த ராக்கெட் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். தகவல் தொடர்பு சேவைக்காக, 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
          கடைசி நேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள் கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18 மணி முதல் தொடங்கியது. அந்த கவுன்ட் டவுன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.18 நிமிடத்திற்கு ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு

         இன்று (07.01.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் பிற்பகல் 12.30 மணிக்கு 37வது வரிசையாக விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான  இருதரப்பு விசாரணை அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.
 
          இதையடுத்து  நீதியரசர்கள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Science Study Material

  • Revision Test ( Chemistry Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium
  • Revision Test ( Physics Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium


Maths Study Material


Maths 1 Mark Questions (All Units) With Shuffled  Order -

Prepared by Mr. S.SELVAM, Mr. P.ASHOK KUMAR, Dept of Maths, GHSS SOWDHAPURAM

No comments:

Post a Comment