Saturday, January 11, 2014


எஸ்.எஸ்.எல்.சி - சமூகவியல் மாதிரி வினாத் தாள் - 

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடி குறித்த விளக்கம் (Rebate under section 87A)
ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு HRA, HBA, INTEREST மற்றும் பிரிவு 80C / 80D சேமிப்பு போக வரி கட்ட வேண்டிய நிகர தொகை ரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ கழித்து கட்டினால் போதுமானது. 

(Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less)

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

இந்தியாவில், அரசு மற்றும் தனியார் என சேர்த்து, மொத்தம் 381 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட 50,000 இடங்கள் உள்ளன. நாட்டில், தற்போதைய நிலையில், 2,000 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலை உள்ளது.
ஆனால் அதை, 1,000 பேருக்கு 1 மருத்துவர் என்பதாக மாற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், அப்பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.
மத்திய மற்றும் மாநில மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான, மத்திய நிதியுதவி திட்டம் தொடர்பாக, இந்திய சுகாதார அமைச்சகத்தால், ஒரு செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7,500 கோடிகள். மாநில அரசுகளின் பங்கு ரூ.2,500 கோடிகள். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, இதற்கான நிதிப் பகிர்வு விகிதாச்சாரம் 90:10 என்ற அளவில் இருக்கும்.
ஒரு MBBS இடத்திற்கான தோராயமான மொத்த முதலீடு ரூ.1.20 கோடி. MBBS இடங்களை இந்தளவு அதிகரிப்பது இதுவரை நாட்டில் நடக்காத ஒன்றாகும்.
மத்திய அரசின் உதவியுடன், மாநிலங்களில் 58 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கும் சுகாதார அமைச்சகத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலமாக, 5,800 புதிய MBSS இடங்களை உருவாக்க முடியும்.
கடந்த 2000ம் ஆண்டிலிருந்து, சுமார் 9,300 புதிய MBBS இடங்களை அரசு உருவாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை, 1950 - 2000 ஆகிய காலத்திற்கு இடைபட்ட 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை விட அதிகம்.
கல்வியின் வெற்றி என்பது என்ன? - பிரணாப் விளக்கம்
வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா எவ்வளவு விரைவாக இணைகிறது என்பதை நிர்ணயிப்பதில்தான், நாம் மக்களுக்கு வழங்கும் கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி மேலும் கூறியதாவது: 12வது ஐந்தாண்டு திட்டத்தில், ஆண்டிற்கு 9% வளர்ச்சியை எட்ட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துறைகளில் அதிக முதலீடுகளை, கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
மேலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன், ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சிறந்த வெளிநாட்டு தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், வெளிநாடுகளிலிருந்து பல சிறந்த ஆசிரியர்களை நம் கல்வி நிறுவனங்களுக்கு வரவழைத்து, நம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்குமாறு கோர முடியும்.
இந்தியாவில், தற்போது, 659 பட்டம் அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களும், 33,023 கல்லூரிகளும் உள்ளன. அதேசமயம், உலகத்தரத்தில் ஒருசில கல்வி நிறுவனங்களே உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்திய தொழில்துறையினரும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment