Monday, January 6, 2014

IGNOU MED - 2014 Counselling Schedule Now Announced-Counselling Schedule for MED-2014 (RC Chennai)

Schedule of Counselling for MED-2014 at Regional Centre  - Chennai
CATEGORIES
DATE
TIME
CUT OF MARKS
1
General Merit
20-01-2014
10.00 AM
58 TO 65
2
Reserved Category (SC)
20-01-2014
10.00 AM
54 TO 57
3
Reserved Category (ST)
20-01-2014
10.00 AM
40 TO 44
4
Reserved Category (OBC-NCL)
20-01-2014
10.00 AM
55 TO 57
5
Reserved Category (PWD)
20-01-2014
10.00 AM
54 (Tie case)

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள்,

அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த, இத்திட்டம், இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான, நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர்பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை, 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என, நியமித்து, திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

NMMS EXAMINATION - Online New Link Added.

விரைவில் ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை.


படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

சான்றிதழ்களை சரிபார்க்கலாம்

கம்ப்யூட்டர் வாயிலாக இல்லாமல் ஆட்கள் மூலமாகவே இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க் கப்பட்டு வருகின்றன. இதனால், தேவையற்ற கால விரயம் ஏற் படுவதுடன் பணிச் சுமையும் கூடு கிறது. இதனால், சான்றிதழ் சரி பார்க்கக் கேட்டு அனுப்பப்படும் கடிதங்கள் மாதக் கணக்கில் கூட தேங்கிவிடுகிறது. இத்தகைய தேக்க நிலையை மாற்றுவதற்காக, ஆன்-லைன் மூலமாக சம்பந்தப் பட்டவர்களே சான்றிதழ்களை உட னுக்குடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது அரசுத் தேர்வுத் துறை இயக்கு நரகம்.

முழுவீச்சில் பதிவேற்றப் பணிகள்

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறையினர் ‘தி இந்து’விடம் தெரி வித்ததாவது: ’’1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வழங்கப்பட்ட 10மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசுத் தேர்வுத் துறை வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள்.

இதுவரை 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம்

இதுவரை சுமார் 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. எஞ்சியவையும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு விரைவில் இந்தத் திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார்.அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் நாங்களே அனுப்பி விடுவோம். அவர்கள், வேறு யாருடைய மதிப்பெண் சான்றி தழையாவது சரிபார்க்க நினைத்தால் பாஸ்வேர்டை பயன் படுத்தி உடனுக்குடன் சான்றிதழின் உண்மைத் தன்மையை சோதித்து விடலாம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணை தொகை வழங்குவதற்கான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செய்தி வெளியீடு


No comments:

Post a Comment