Wednesday, July 31, 2013

BT To PG Maths & Physics Promotion - Revised Panel


TET ல் இடஒதுக்கீடு கோரி வழக்கு


             ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

                        மனுவை தாக்கல் செய்த பழனிமுத்து கூடுதல் பிரமாண பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு விசாரித்துள்ளது. மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TET: பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி., தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை

          "பள்ளி பாடப்புத்தக அட்டையில் இருந்து கூட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படலாம்; எனவே, புத்தகங்களை, ஒரு வரி விடாமல், முழுமையாக படிக்க வேண்டும்" என, டி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு, பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

          தமிழ் பாடம் குறித்து, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங்" பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன்: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோர், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள, பள்ளி பாடப்புத்தகங்களை, முழுமையாக படித்தாலே, எளிதில் வெற்றி பெறலாம். 

           தமிழ் பாடத்தை பொறுத்தவரை, புத்தக அட்டையில் இருந்து கூட, கேள்விகள் கேட்கப்படலாம். அனைத்து புத்தகங்களையும், ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது, கேள்விக்கு உடனே பதிலளிக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து, பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

           சமூகத்தில் நடக்கும் செய்திகள், பெரும்பாலும் கேள்விகளாக அமையும். சமூக நிகழ்வுகளையும், அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், சாதாரண கேள்விகளும், குழப்பும் வகையில் கேட்கப்படும். அந்நேரத்தில், யோசித்து நிதானமாக பதிலளிக்க வேண்டும். 

           நம்மை ஏமாற்றும் வகையில், கேட்கப்படும் கேள்விகளுக்கு உஷாராக பதிலளிக்க வேண்டும். தமிழை பகுத்து படிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 

             கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் பயிற்சி மையநிர்வாக இயக்குனர் வெங்கடாசலம்: அடிப்படை கணிதம், சூத்திரங்களை முழுமையாக படிப்பதோடு, பயிற்சி செய்து பார்க்க வேண்டும். 

          மனப்பாடம் செய்து படிப்பதை விட்டு விட்டு, புரிந்து படிக்க கற்று கொள்ள வேண்டும். தேர்வுக்கு படித்தால் மட்டும் போதாது, படித்ததை தேர்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்று கொள்ள வேண்டும். 

             போட்டி தேர்வு, நம் அறிவுக்கு நடத்தப்படும் தேர்வு அல்ல; நம் அறியாமையை சோதிக்க நடக்கும் தேர்வு. தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்.

               ஆங்கில பாடம் குறித்த எளிய, டிப்ஸ்களை,வழங்கும், பயிற்சி மைய நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி: குழப்பமான மொழியான ஆங்கிலத்தை, அவசியம் கற்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது இல்லை.

நன்றி : தினமலர்

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

         "மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

        மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

          சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு" அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும். 

           இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

           நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். 

           மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.

           அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். "கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என இயக்குனர் பதிலளித்தார்.

நன்றி : தினமலர்

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?
          பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

           இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது.

மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது. 

இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.

நன்றி:  தினமலர்

Tuesday, July 30, 2013


பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு

   பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவின் படி:

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் -           திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை  இயக்குநர் - திரு.இளங்கோவன் 
RMSA இயக்குனர் -                                          திரு.சங்கர் 
TRB இயக்குனர் -                                             திருமதி. வசுந்திரதேவி 
SCERT இயக்குனர் -                                      திரு.கண்ணப்பன் 
மெட்ரிக் பள்ளி இயக்குனர்                    திரு. பிச்சை 
பாடநூல் கழக இயக்குநர் -                   திரு.அன்பழகன் 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுத் தேர்வு வினத்தாள்கள் -
ஒன்பதாம் வகுப்பு

 நன்றி :  ரா.தாமோதரன் ,தமிழாசிரியர்,மேலட்டூர்

கிளிக் செய்க

ஆசிரியர் செயல்பாடுகளை  நினைவில் வைத்துக்கொள்ள தேவையானப் படிவம்

நன்றி :  ரா.தாமோதரன் ,தமிழாசிரியர்,மேலட்டூர்

கிளிக் செய்க



G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்

          நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

          அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

           அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

          இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 

         பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது. 

நமது விளக்கம்:

           31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )

          1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

               இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

             இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம். 

           தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

                சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம். 

                OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

           OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.

                  உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். 

               இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் கூடுதலாக இந்த 3% பெற இயலும்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்ட்

மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

        "ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.

         சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.

          கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது.

          கண்ணில் தூசி விழுந்தால், கசக்கக் கூடாது; லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வந்துவிடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், டூவீலர்களில் செல்பவர்கள், கண்ணாடி அணிவது அவசியம். சிறிய மண்துகள், தூசிகளால் கண் வலி ஏற்படும்.

           கண் எரிச்சல், கண் சிவந்திருந்தால் மருந்து வாங்கி இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் ஒரு சொட்டு விடலாம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பார்வை மற்றும் அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்," என்றார்.

திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு


          வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
 
         இதன்படி, அணிவகுப்பில் மாணவ, மாணவியர்களின் வருகை எண்ணிக்கை, தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கொடியேற்றம், கொடிபாடல், உறுதிமொழி, சர்வ சமய வழிபாடு, திருக்குறள் மற்றும் விளக்கம், இன்றைய சிந்தனை, தமிழ் மற்றும் ஆங்கில செய்திகளை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

          அணிவகுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சி முகாமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் துவக்கி வைத்தார்.

Monday, July 29, 2013


இலவச கல்வி உபகரணங்களை அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அங்கு கட்டட வசதிகள் இல்லாமல் உள்ளது என தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
          அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாவிலுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் நடந்தது.

           ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசுகையில், "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகைப் பதிவு செய்து விட்டு, தங்கள் சொந்த வேலைகளை கவனிக்கின்றனர். எனது தலைமையில் 4 தலைமை ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
             தாமதமாக பள்ளிக்கு வருவதும், பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இனி தவறுகள் நேர்ந்தால் கண்காணிப்புக்குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
              அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் பேசும் போது, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 40 பள்ளிகளில், போதிய கட்டட வசதி இல்லை.
             அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பரவலாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. நியாய விலைக்கடை மற்றும் டாஸ்மாக்கிற்கு நேரடியாக லாரிகள் மூலம் பொருட்களை அனுப்புவது போன்று இலவச கல்வி உபகரணங்களையும் அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
"ஆசி­ரி­யர்கள் மொழி, பண்­பாட்டையும் கற்றுத்தர வேண்டும்"

            'மாண­வர்­க­ளுக்கு பாடத்­தோடு, மொழி, பண்­பாட்­டையும் ஆசி­ரி­யர்கள் கற்று தர வேண்டும்" என எழுத்­தாளர் மனுஷ்­ய­புத்­திரன் பேசினார்.
         "தின­மலர்" சங்­கமம் இக்­க­ரையும், அக்­கரை(ற)யும் என்ற தலைப்பில் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாண­வர்­களின் விவாத மேடை நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்­தது. கல்வி புரட்சி நிகழ்ச்­சியில், தமி­ழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மதி­ய­ழகன் பேசி­ய­தா­வது:
           தமி­ழ­கத்தில் மாண­வர்­க­ளுக்­காக ஊட­கங்கள், நாளி­தழ்கள் எத்­த­னையோ நிகழ்ச்­சிகள் நடத்­து­கின்­றன. ஆனால், அத்­தனை நிகழ்ச்­சி­க­ளுக்கும் வித்­திட்­டது, தின­மலர் நாளிதழ் தான். தமி­ழ­கத்தில் அமை­தி­யான முறையில் கல்விப் புரட்­சியை, தின­மலர் நடத்தி கொண்­டி­ருக்­கி­றது.
          மாண­வர்­க­ளிடம் மன அழுத்தம் காணப்­ப­டு­கி­றது. கல்­வி­யா­ளர்கள் ஆராய்ச்சி செய்து, சமச்சீர் கல்வி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அந்த திட்­டத்­திற்கு ஒரு பக்கம் வர­வேற்பும், மற்­றொரு பக்கம் எதிர்ப்பும் இருக்­கி­றது.
               மாண­வர்கள் மன அழுத்தம் இல்­லாமல் படிக்க வேண்டும் என்­ப­தற்­காக, &'சங்­கமம்&' நிகழ்ச்சி நடத்­தப்­ப­டு­கி­றது.இவ்­வாறு, அவர் பேசினார்.
விவாத மேடையில், ஆசி­ரி­யர்கள் சார்பில், தாயு­மா­னவன், ஆனந்தன், கலைச்­செல்வி, குருபிரபு, லட்­சு­மி­பதி, லுாயிஸ், பால­கி­ருஷ்ணன், பெற்றோர் சார்பில், கோபால், அம்­பிகா, கும­ரேசன், கீர்த்­தி­வாசன், நாக­ராஜன், சண்­மு­க­சுந்­தரம், மாண­வர்கள் சார்பில், பாலாஜி, சுவாதி, சித்ரா, பவித்ரா, அர்ச்­சனா, சண்­மு­க­சுந்­தரம், சர­ணவன் உட்­பட, 21 பேர் கலந்து கொண்டனர்.
மாண­வர்­க­ளுக்கு மன அழுத்தம் ஏற்­ப­டு­வ­தற்கு என்ன காரணம்? குழந்­தை­க­ளுக்கு அடிப்­படை சட்ட உரிமை வழங்­கப்­ப­டு­கி­றதா? மாண­வர்­க­ளுக்கு நவீன தொழில் நுட்ப சாத­னங்­களை வாங்கி கொடுப்­ப­தாலும், கைச்­செ­ல­வுக்கு பணம் வழங்­கு­வ­தாலும் அவர்­களின் படிப்பு பாதிக்கப்­ப­டுமா?
மனப்­பாடம் செய்­வதால், மாண­வர்­களின் ஆளுமை வளர்ச்சி பாதிக்­குமா? உள்­ளிட்ட, பல்வேறு கேள்விக் கணைகள், விவாத மேடையில் தொடுக்­கப்­பட்­டன. அதற்கு, ஆசிரியர்களும், பெற்­றோரும், மாண­வர்­களும் உட­னுக்­குடன் தங்கள் பதில்­களை பதிவு செய்து, விவாத மேடையை, பய­னுள்ள கருத்­து­களை வெளிப்­ப­டுத்தும் கள­மாக மாற்­றினர்.
கெடுக்கும் சமூக வலைதளங்கள்: விவாத மேடையின் நடுவர், மனுஷ்­ய­புத்­திரன் பேசியதாவது: ஆசி­ரி­யர்­க­ளுக்கும், மாண­வர்­க­ளுக்கும் உள்ள இடை­வெளி அதி­க­ரித்து விட்டது. பெற்றோர், தங்கள் குழந்­தை­களை பணம் சம்­பா­திக்கும் இயந்­தி­ர­மா­கவும், பந்தயத்தில் ஓடும் குதி­ரை­க­ளா­கவும் கரு­து­கின்­றனர்.
"வீடியோ கேம்ஸ்" போன்ற கேளிக்­கை­களும், சமூக வலைதளங்­களும், குழந்­தை­களை பாதிக்­கின்­றன. மாண­வர்கள் மனப்­பாடம் செய்து படிப்­பதால், மட்டும் ஆளுமை வளர்ச்­சியை அடைந்து விட முடி­யாது. விளை­யாட்டு துறையில் மாண­வர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
பாடங்­களை சரி­யாக நடத்­தாத, திறமை இல்­லாத ஆசி­ரி­யர்­களை தான் மாண­வர்கள் வெறுப்பர். மாண­வர்­க­ளிடம் ஆசி­ரி­யர்கள் பாகு­பாடு காட்டக் கூடாது. மாண­வர்­களை அடிக்க கூடாது. மாண­வர்­க­ளுக்கு பாடத்தை கற்­பிப்­ப­தோடு, மொழி, பண்­பாட்­டையும் கற்­பிக்க வேண்டும். மாண­வர்­களின் முன்­னேற்­றத்­திற்கு பெற்றோர், ஆசி­ரி­யர்கள், சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இவ்­வாறு, அவர் பேசினார்.
உள­வியல் நிபுணர் கிர்த்­தன்யா கிருஷ்­ண­மூர்த்தி பேசு­கையில் கூறி­ய­தா­வது: ஸ்கூல் என்ற வார்த்­தைக்கு, வாழ்க்­கையை முழு­மை­யாக வரை­மு­றைப்­ப­டுத்த, சமு­தாயம் ஏற்­ப­டுத்தி தரும் கூடம் என்ற பொருள் உண்டு.
ஆசி­ரி­யர்கள் சரி­யாக பாடம் கற்று தர­வில்லை என்ற குறை­களை மாண­வர்கள் சொல்லக் கூடாது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மாண­வர்­க­ளுக்குள் உரு­வாக வேண்டும். பிற­ரிடம் அன்பு, பாசத்தை வெளிப்­ப­டுத்தி மாண­வர்கள் பழக வேண்டும். இவ்­வாறு, அவர் பேசினார்.
விவா­த ­மே­டையில் பங்­கேற்று, வெளியே வந்த மாணவ, மாண­வியர் தெரி­வித்த கருத்துக்கள்:
பவானி, கிழக்கு தாம்­பரம், அரசு மகளிர் மேல்­நிலை பள்ளி: தின­மலர் நாளிதழ் நடத்­திய சங்கமம் நிகழ்ச்சி மாணவ, மாண­வி­ய­ருக்கு பய­னுள்­ள­தாக இருந்­தது. ஆசி­ரி­யர்கள் தெரிவித்த கருத்­துக்­கள், எங்கள் மனதில் பசு­ம­ரத்தில் அடித்த ஆணி போல் பதிந்து விட்­டது. அவர்­களின் அறி­வு­ரையை ஏற்று, நாங்கள் பாடங்­களை கவ­ன­மாக படிப்போம்.
ஆதித்­தியா, ஆசான் மெமோ­ரியல் பள்ளி: இந்நி­கழ்ச்­சியில் பங்­கேற்­றதை பெரு­மை­யாக கருது­கிறேன். எனக்கு தெரி­யாத பல முக்­கிய தக­வல்களை தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுக்கு என்­னென்ன கஷ்­டங்கள் இருக்­கி­றது என்­பதை புரிந்து கொண்டேன். பெற்றோர் தரும் கைச்­செ­ல­வுக்­கான பணத்தை வீணாக செலவு செய­மாட்டேன்.
விக்னேஷ், இந்து மேல்­நி­லை­ பள்ளி: சங்­கமம் நிகழ்ச்சி நல்ல பய­னுள்­ள­தாக அமைந்­தது. நிறைய விஷ­யங்­களை தெரிந்து கொண்டேன். பெற்­றோரும், ஆசி­ரி­யர்­களும் பாராட்டும் வகையில், நன்­றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்­பட்­டுள்­ளது.
மனோஜ் குமார், மோதிலால் பள்ளி: ஆசி­ரி­யர்­க­ளிடம் மாண­வர்கள் நட்­பாக பழக வேண்டும். எந்த ஒரு நல்ல செய­லையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்­வத்தை இந்த நிகழ்ச்சி ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
தீப­லட்­சுமி, எஸ்.எம்.ஜே.வி., பள்ளி: யதார்த்­த­மா­கவும், வெளிப்­ப­டை­யாகவும் நடந்த கலந்­து­ரை­யாடல் கூட்டம் மாணவ, மாண­வி­ய­ருக்கு மிகவும் பய­னுள்­ள­தாக இருந்­தது. உடற்­ப­யிற்சி அவ­சியம் என்­பதை புரிந்து கொண்டேன். மன­ அழுத்தம் குறைந்­த­தாக உண­ரு­கிறேன்.
சமையலர்களுக்கு புதிய பயிற்சி: ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு விடிவு

           தமிழகத்தில் உள்ள, அனைத்து விடுதி சமையலர்களுக்கும், அந்தந்த நலத்துறை நிர்வாகம், புதிய பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்பட்டது.
         ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,300 விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 உண்டு உறைவிட பள்ளிகள்; பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இந்த விடுகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி உள்ளனர்.
          இவர்களுக்கு மூன்று வேளை உணவும், சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில், உணவில், இனிப்பு வகைகளும் அளிக்கப்படுகிறது.
               இந்நிலையில், பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்தனர்; அதே போல், தமிழகத்தில் விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள, விடுதி சமையலர்களுக்கு, புதிய பயிற்சி அளிக்க, நலத்துறைகள் திட்டமிட்டு உள்ளன.
             இப்பயிற்சியில், சுகாதாரமான முறையில் உணவைச் சமைப்பது, அவற்றை முறையாகப் பாதுகாப்பது, ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களிடம் எவ்வாறு மனிதநேயத்துடன் பழக வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படும் என, தெரிகிறது.
              இப்பயிற்சிகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு, ஓரளவு அமல்படுத்தப்பட்டால் கூட, மாணவர்களுக்குச் சுகாதார சீர்கேடு பாதிப்புக் குறையும் வாய்ப்பு ஏற்படும்
இந்திய வம்சாவளி நிபுணர்களுக்கு அமெரிக்க நிறுவன விருது

              கணிதம் மற்றும் அறிவியலில் ஆய்வு மேற்கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
          அமெரிக்க நிறுவனமான, "சிமென்ஸ்" ஆண்டுதோறும், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்து வருகிறது.
            இவ்வகையில், இந்த ஆண்டு, நான்கு இந்தியர்கள் உட்பட, 13 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கணிதத் துறையில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர், கண்ணன் சவுந்தர்ராஜனுக்கும், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர், ராஜீவ் அலூருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
             இது தவிர, கணினி அறிவியலில் கணிதத்தின் பயன்பாடு பற்றிய பாடப்பிரிவில் வல்லவரான, சலீல்வதான், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். கணினி அறிவியில் இவர் மேற்கொண்ட சிறந்த ஆய்வை பாராட்டி, இவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
             கான்பூர் ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்று, ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செந்தில், இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இயற்பியலில் இவருடைய ஆய்வை பாராட்டி, சிமென்ஸ் நிறுவனம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
                    இவர்கள் அனைவருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தலா, 60 லட்சம் ரூபாய், "ஸ்காலர்ஷிப்" வடிவில் வழங்கப்படும்.

"இருபதாம் நூற்றாண்டு பாடங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது"


         இருபதாம் நூற்றாண்டு பாடங்களால், மாணவர்கள் தற்போதுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது, என பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.
         காரைக்குடி அழகப்பா பல்கலை பாடத்திட்ட மேம்பாட்டு மையம் சார்பில், பாட திட்ட அமைப்பும், அதன் வளர்ச்சியும் குறித்த கருத்தரங்கம் பதிவாளர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:
          "தற்போதுள்ள உலகளாவிய போட்டியை, எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் தேவைக்கேற்ப புதுமையான பாடத்திட்டங்களையும், நெகிழ்வான பாடத்திட்டங்களையும், வழங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
           20ம் நூற்றாண்டு பாடங்களை வைத்து, மாணவர்கள் தற்போது உள்ள பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாது. எனவே இளங்கலை பாடத்திட்டத்தினை, உலக தர நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு மாணவர்களிடையே, விஞ்ஞான திறனையும், மேலாண்மை திறனையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
                 இளங்கலை, முதுகலை பாடங்கள் செயல்முறை விளக்கத்தோடு இணைந்த கல்வியாக இருக்க வேண்டும். மாணவர்கள் நவீன கட்டமைப்பு, தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்," என்றார்.
முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்: சத்துணவு மையங்களுக்கு உத்தரவு

          முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டார்.
        ஊட்டி அண்ணா கலையரங்கில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ் நடந்த ஒரு நாள் பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது:
           "சத்துணவு வழங்கும் பணியாளர்கள் சத்துணவு மையங்கள், சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்து வேண்டும். மதிய உணவு வழங்குவதற்கு முன்பு சமையல் பாத்திரங்கள் சுத்தமாக பராமரித்திருக்க வேண்டும். தரமான காய்கறிகள் கீரை வகைகளை பயன்படுத்தி உணவை தரமான முறையில் தயாரிக்க வேண்டும்.
           மதிய உணவை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் உண்ட அரைமணி நேரத்திற்கு பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி பின்பே பள்ளியை விட்டு செல்ல வேண்டும்.
              குழந்தைகளுக்கு எக்காரணத்தை கொண்டு பாதி முட்டை வழங்க கூடாது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்க வேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும். இம்முறைப்படி அனைத்து பணியாளர்களும் குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும்." இவ்வாறு கலெக்டர் பேசினார்.
காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்


         "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
          கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு அனைத்து மன்ற துவக்க விழா நடந்தது. விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
          "இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காஃபி மற்றும் டீ ஆகியவற்றை பயிரிட காடுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவில் வளர்ந்திருந்த தரம் நிறைந்த மரங்களை எல்லாம், ஆங்கிலேயர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
           மேற்கு தொடர்ச்சி மலை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருந்தது. அதிலிருந்து 300, 400 அடி உயரத்தில் மரங்கள் இருந்தது. தற்போது அந்த மரங்கள் எல்லாம் காணவில்லை. கடந்த 1900ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 நாட்களுக்கு மேல் மழை பெய்தது. 1950ம் ஆண்டுகளில் 200 நாட்கள் மழை பெய்தது. தற்போது ஆண்டுக்கு 50 நாட்களில் மழை பெய்வது இல்லை. இதற்கு காரணம் மரங்களை வெட்டியதுதான்.
           கடந்த 1950வது ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது படிப்படியாக குறைந்து எட்டு சதவீதமாக உள்ளது. இதனால், பருவமழை தவறி விட்டது. பருவமழையை நம்பி, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கினர். ஆனால், பருவமழை தவறி விட்டதால், விவசாயிகளால், சாகுபடி பணிகளை கணிக்க முடியவில்லை. புயல் மழையை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376

          மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது.
             அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டு தோறும், 6 - 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறாளிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.
        அந்தந்த யூனியன் பகுதியில் உள்ள, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு, கடந்த ஏப்., 10ம் தேதி, மாநிலம் முழுவதும் துவங்கியது.
             கணக்கெடுப்பு பணியின் போது சேகரித்த விவரங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 6 - 10 வயது வரை, 18,216 பேரும், 11 - 14 வரை, 29,160 பேரும் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
         அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், 4,587 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 462 பேரும் பள்ளி செல்லாமல் உள்ளனர். மேலும், தேனி மாவட்டம், 545 பேர், கன்னியாகுமாரி, 551 பேர், புதுக்கோட்டை மாவட்டம், 572 பேர் என, குறைந்த அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
          கண்டுபிடிக்கப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது.
              தமிழகம் முழுவதும், ஐந்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளி குறித்து கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
         தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 836 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடந்த கணக்கெடுப்பில், பாலக்கோட்டை அடுத்த, அய்தாண்டஹள்ளி அரசு தொடக்கப் பள்ளியில், 3 மாணவர் மட்டும் படிப்பது தெரியவந்து உள்ளது. இங்கு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பில் தலா, 1 மாணவர் என, மொத்தம், 3 மாணவர்களே படித்து வருகின்றனர்.
             இப்பள்ளி குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
              இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
             அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் கூட, தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் விளைவாக இது போன்ற நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில், 5க்கும் குறைவாக உள்ள படிக்கும் மாணவர்களால் அரசுக்குச் செலவு ஏற்படுவதை விட, அங்கு பணியாற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு முழு ஈடுபாடு உடன் கல்வி கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

           2013-14ம் கல்வி ஆண்டு அரசு பொது தேர்வுகளில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த, ஆலோசனை கூட்டம், சென்னையில், ஆக.,1, 2ம் தேதிகளில் நடை பெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட சி.இ.ஓ., கூடுதல் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர்.
      கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில், கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர்கள் இதில் பேசுகின்றனர். கூட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுதேர்வில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் குறித்து விவாதப்படுகிறது.

         பள்ளியின் தரம், அனைவருக்கும் கல்வி திட்ட கட்டுமான பணிகளால் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா, இல்லையா போன்றவை குறித்தும், சி.இ.ஓ.,க்களிடம் கருத்துக் கேட்டு, கல்வித்துறை செயலர் ஆலோசனை வழங்க உள்ளார்.
          தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட சி.இ.ஓ.,க் களிடம், சரியான விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "பள்ளியின் தரம், வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து, சி.இ.ஓ.,க்களிடம் விபரம் கேட்கப்படும். " என்றார்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம்

           உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

        தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதி இல்லாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

         அதன் பிறகும் அவர்கள் பணியில் தொடர்ந்ததால் சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலி இடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
 
6வது ஊதிய கமிஷன்

           6வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம். 

          நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது.

          எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 ஐ அறிவித்தது. 

          எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியதே எள்முனையளவு தான் என்பது நாம் பெற்ற முதல் ஏமாற்றம். ஆம். 

           அன்று இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது 5200 – 20200 + தர ஊதியம் 2800 ஆக அடிப்படை ஊதியம் ரூ 8000/-. ஆனால் அன்று இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையிலே பெற்று வந்த ஊதியம் ரூ4500 + ரூ2250 = ரூ 6750/- வளரூதியங்கள் இல்லாமல். பெற வேண்டியது ரூ.8370/-. இதில் எதிலும் நமக்கு வழங்காமல் ரூ8000/ மட்டும் நமக்கு வழங்கி, முதல் முறையாக இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விடவும் குறைவான ஊதியத்தை வழங்கிய முதல் ஊதியக்குழு எனும் பெருமையை தட்டிச் சென்றது. 

              பின்னர் ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் இந்த முரண்பாடுகளை சுட்டி காட்டி பேசிய பொழுது, மத்திய அரசு வழங்கிய 9300 எனும் முதல் நிலையை வழங்காமல், பெருக்கு விகிதத்தின் படி கிடைக்கப்பெற்ற ரூ 8370/ மட்டும் அடிப்படையாக அனுமதித்து, கிரேடு சம்பளத்தில் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை. 

ஆக மத்திய அரசு அனுமதித்த ஊதியத்தில் முதல் நிலையில் 830ம், தர ஊதியத்தில் 1400 ஆக மொத்தம் ரூ2230 01.06.2006ல் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு 01.06.2009க்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 + 2800 = ரூ 8000/- மட்டுமே நிர்ணயம் செய்து , நியமனத்தின் போது 01.06.2009க்கு முன், 01.06.09 க்கு பின் எனும் இரு வேறு நிலைகளை இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் அனைத்து சங்கங்களும் இணைந்து மாநிலந் தழுவிய அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு படியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த இது 01.01.2011 முதல் ரூ 750/ ஆக தனிப்பட்ட ஊதியமாக அனுமதிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஆணையானது பட்டதாரி / தொடக்கப்பள்ளி ஆசிரிராக பதவி உயர்வின் போது, 01.01.2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்கள், 01.01.2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்கள் எனும் இரு வேறு நிலையை உருவாக்கியுள்ளது. இந்த 750யும் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள். ஒரு சில மாவட்டங்களில் அரசாணையின்படி அனுமதிக்கப்படும் நிகழ்வும், பல மாவட்டங்களில் முடியாது 750ஐ அனுமத்தித்தால் அதிக சம்பளம் கணக்கு வருகிறது என்று அங்கலாய்ப்பு வேற! ஏற்கனவே அரைகுறையாக அனுமதிக்கப்பட்டதில் பெறுவதற்குள் அடுத்த பதவிவுயர்வும், சம்பளக் கமிஷனும் வந்து விடும் போல் உள்ளது.

அரசாணைகளை பொறுத்தமட்டில INTENTION OF THE READER IS THE DECISION OF THE G.O. HANG HIM, NOT LEAVE HIM என்ற ஒரே வாக்கியத்திற்கு அவனை தூக்கிலிடு விட்டு விடாதே!!

அவனை தூக்கிலிடாதே விட்டுவிடு HANG HIM NOT, LEAVE HIM என முரண்பாடாக இருவேறு பொருள் கொள்வதுண்டு. அது போல்

இந்த நிலையில் ஓரேயொரு கலங்கரை விளக்கமாக கண்ணுக்கு தெரிந்த மூவர் குழு அறிக்கையும் வெளிவந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்தியுள்ளது கூட நமக்கு வேதனையை தரவில்லை. டிப்ளமோ படிப்புகளுக்கு தர ஊதியமாக ரூ.4200 அனுமதிக்கப்பட்டாலும், இடைநிலை ஆசிரியப்படிப்பிற்கான டிப்ளமோவிற்கு மட்டும் ரூ2800 என்பது வழங்கப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் வென்றதில்லை! இதற்கு முன் நாம் பெற்ற சலுகைகளும் உரிமைகளும் நாம் போராடி பெற்றவையே! சுதந்திரம் கூட சும்மா கிடைக்கவில்லை. நினைத்து பார்த்து நமது இயக்கங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வடிவம் கொடுப்போம்! தோள் கொடுப்போம்! பல பட்டங்களையும், டிப்ளமோ படிப்புகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியப் படிப்பிற்கான அடிப்படை ஊதியத்தை வரப் போகும் சமுதாயத்துக்கு பெற்றுத் தருவோம்.
நன்றி : திரு. ரக் ஷித்


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY

TamilGeography
EnglishEconomics 
MathematicsCommerce 
PhysicsPolitical Science 
ChemistryHome Science
BotanyPhysical Education Director Grade I 
ZoologyMicro - Biology 
HistoryBio - Chemistry

Sunday, July 28, 2013

2013-2014 - 1st std to 8th std -CCE முதல் பருவம் -வாரவாரி பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)

முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
இதுமட்டுமின்றி கீழ்க்கண்டவைகள் பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

=>5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று
 எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
=>TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் 
போதுமானது)
=>6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்
=>6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட்
        வேண்டும்
=>6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக
 பராமரிக்கப்பட்வேண்டும்
=>5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித 
அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் 
வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும்
பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்படவேண்டும்

NEWS

Which number replaces 
the question mark?









இன்னும் சில வருடங்களில் .............இதுவும் நடக்க கூடும்!











எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?

தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அதன்படி, தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களும், பொருளாதாரம், மனையியல், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர முடியும்.

இவர்கள் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி), அந்தப் பாடத்தில் பி.எட். படிப்பில் சேர முடியாது. 4 ஆண்டுகளில் இரட்டைப் பட்டப் படிப்பு முடித்தவர்களும் சேர முடியாது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள்.

ஆனால், அவர்களின் முதுநிலைப் பட்டப் படிப்பு மதிப்பெண்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான படிப்புகள்:   
பயன்பாட்டு இயற்பியல், புவி-இயற்பியல், உயிரி- இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின் கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், இளநிலை புவியியல் படிப்பின் கீழும், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பற்றிய பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்கள்
பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், பி.எட். படிக்க வேண்டுமானால், முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட படிப்புகளின்கீழ் பி.எட். படிப்பில் சேர விரும்புவோர், குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறாமல் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியும்.

குறைந்தபட்ச மதிப்பெண் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் முதுநிலை பட்டதாரிகள், மனையியல் படிப்பின்கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளநிலை பட்டப் படிப்பில் முதல் பிரிவில் தமிழைப் படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பி.எட். படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 43 சதவீதமும், ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வித் தகுதியுடையோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண்களும், எம்.பில். பட்டப் படிப்பு முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும்,  பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும் கூடுதல் மதிப்பெண்களாக வழங்கப்படும். அத்துடன் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. (பி அல்லது சி சான்றிதழ்) பெற்றவர்களுக்கும், விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கும் மேலும் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். பி.எட். படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

          கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

           ராணுவம், எல்லைபாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் போன்ற பதவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தான் அடிப்படை கல்வித்தகுதியாக உள்ளது. இது போல மாநில அரசின் பல போட்டி தேர்வுகளுக்கு இதே கல்வி தகுதிதான் கோரப்படுகிறது. இப்படிப்பட்ட தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது அதன் உண்மைத்தன்மை சோதனை செய்யப்படுகிறது.

           இதற்காக சான்றிதழ் நகலுடன், வேலை வழங்கும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் கேரள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புகிறது. இவ்வாறு அனுப்பும் கடிதங்களை பரிசீலித்து, சான்றிதழ்களை சரிபார்த்து பதில் அனுப்ப மாத கணக்கில் கால விரயம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை வழங்குதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

              இப்படிப்பட்ட காலவிரயத்தை தவிர்க்கவும், போலி சான்றிதழ்கள் புழக்கத்தில் வருவதை தடுக்கவும் வசதியாக ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக தனி யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவை தயாரிக்கப்பட்டு தேவைப்படும் துறைக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் கேரள தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று சான்றிதழ்களை சரிபார்க்க முடியும்.

               இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கேரள அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு


         அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

             இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.