Friday, July 12, 2013

செய்தி

மாணவர் சேர்க்கை படிவம்/ மாதாந்திர அறிக்கை/ சம்பளப்பட்டியல் தொடக்க நடு நிலைப் பள்ளிகளுக்கு உரியது

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

University of Madras UG Degree Examination April 2013 Results | சென்னை பல்கலை இளங்கலை தேர்வு April 2013 முடிவுகள் வெளியீடு


சி.இ.ஓ., மாற்றம்

               பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

           கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் பணியிடம், இயக்குனர் நிலையில், பாடநூல் கழகச் செயலர் பணியிடம் மற்றும் நூலகத்துறை, தேர்வுத் துறையில், இரு இணை இயக்குனர் பணியிடங்கள் ஆகியவை காலியாக உள்ளன.

           இரு இணை இயக்குனர்கள், பதவி உயர்வு நிலையில் உள்ளனர். எனவே, முதன்மை கல்வி அதிகாரிகளாக உள்ள, நான்கு பேர், இணை இயக்குனர்களாக, பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர். இணை இயக்குனர்கள் மாற்றங்களால், இயக்குனர் அளவிலும், மாற்றங்கள் நடக்கும் என, பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

           எனினும், பல்வேறு காரணங்களால், அதிகாரிகள் மாற்றம், தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார், விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) மாற்றப்பட்டுள்ளார்.

                தனி சி.இ.ஓ., ராமசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில், ரெகுலர் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

             டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.

              எனவே, ஓரிரு நாளில், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியல் வெளியானதும், இணை இயக்குனராக, கன்யா பொறுப்பேற்பார் என, கூறப்படுகிறது.சி.இ.ஓ.,க்களை தொடர்ந்து, தற்போதைய இணை இயக்குனர்கள் மற்றும் பல இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு

        வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.


           ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

           இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

          பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

            நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன.

          "காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098" என்ற எண் மூலம், "சைல்டு லைன்" அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என அச்சடிக்கப்பட்டுள்ளது.

            இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment