Wednesday, July 24, 2013

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.


>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

GOVT ORDERS FIRST SPELL  CLICK HERE...

GOVT ORDERS SECOND SPELL CLICK HERE...


ஜூன் / ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள்  25.07.2013    நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய 83,510 தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண்
சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறை அடங்கிய பாடத்தினை தேர்வு எழுதிய சில தனித்தேர்வர்கள் செய்முறை குறித்த ஆவணத்தை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைந்து சமர்பிக்காததால், அவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனித்தேர்வர்களின் மார்ச் 2013 பருவத் தேர்வெழுதிய பதிவெண் தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் tally ஆகாததால், அவர்களுடைய தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனித்தேர்வர்கள் உடனடியாக அவர்கள் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழினை ஒப்படைக்க வேண்டும் என தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment