Tuesday, July 9, 2013

NEWS

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி
              தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை கல்வி எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
 
        கலை மற்றும் அறிவியல் கல்லாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு 28.5.2013ல் வெளியானது. இதில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணாக, பி.எச்டி., படித்திருந்தால் 9 மதிப்பெண், முதுகலை எம்.பில்., உடன் சிலட்/நெட் முடித்திருந்தால் 6 மதிப்பெண் என்றும், முதுகலை பட்டத்துடன் சிலட்/நெட் முடித்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், எம்.பில்., படிப்பு தொலை நிலைக் கல்வியில்படித்திருந்தால் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

             உயர் கல்வித் துறைற உத்தரவில், தொலைநிலை கல்வியில் எம்.பில்., படிப்பு 2007-2008 முதல் நடத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், டி.ஆர்.பி., அறிவிப்பில், 2006-2007 ஆண்டு வரை தொலை நிலைக் கல்வி எம்.பில்., படிப்பை செல்லாது என்ற உத்தரவால், அந்த ஆண்டுகளில் (2006-2007) படித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளின் பேராசிரியர்கள் கனவு கேள்விக்குறியாகி உள்ளது என, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.மதுரையை சேர்ந்த சுயநிதி கல்லூரி உதவிபேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், 2008ல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களில், முதுகலை பட்டத்துடன், தொலை நிலை கல்வியில் எம்.பில்., படித்தவர்களாக பலர் உள்ளனர். ஆனால், தற்போது "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுக்கு, தொலைநிலை எம்.பில்., படிப்பை டி.ஆர்.பி., எடுத்துக்கொள்ளாதது எந்தவிதத்தில் நியாயம், என்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் போட்டி; இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

          முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 ஆசிரியர்கள் போட்டி போடுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
 
இணையதளத்தில் ஹால் டிக்கெட்

           அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பி.எட். பட்டம் பெற்ற முதுகலை பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தார்கள். தமிழ் பாடத்தில் 600–க்கும் மேற்பட்ட காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழ் முதுகலை பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.

         இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால் இணையதளத்திலேயே ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

1.67 லட்சம் பேர் போட்டி
         முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேர் மோதுகிறார்கள். காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் தமிழ் பாடத்தில்தான் போட்டி பலமாக இருக்கிறது. தமிழ் பாடத்தில் மட்டும் 33,237 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்ச எண்ணிக்கையாக அரசியல் அறிவியல் பாடத்தில் வெறும் 30 பேர் மட்டுமே விண்ணப்பம் போட்டுள்ளார்கள். இதர பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம் வருமாறு:–

ஆங்கிலம் – 14,080

கணிதம் – 22,497

இயற்பியல் – 12,469

வேதியியல் – 12,247

தாவரவியல் – 8,150

விலங்கியல் – 10,991

வரலாறு – 18,380

புவியியல் – 1,481

பொருளாதாரம் – 9,501

வணிகவியல் – 18,330

மனையியல் – 113

உடற்கல்வி இயக்குனர் – 3203

நுண்ணுயிரியல் – 1,544

உயிரி–வேதியியல் – 1,348

தெலுங்கு – 56

எழுத்துத்தேர்வு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது...

9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table

பணியிடைப் பயிற்சி

          அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது.  தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
    பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை


Date
Day
Subject
10.07.2013
Wednesday
Maths
11.07.2013
Thursday
12.07.2013
Friday
Tamil
13.07.2013
Saturday
15.07.2013
Monday
English
16.07.2013
Tuesday
17.07.2013
Wednesday
Social Science
18.07.2013
Thursday
19.07.2013
Friday
Science
20.07.2013
Saturday
22.07.2013
Monday
Maths
23.07.2013
Tuesday
24.07.2013
Wednesday
Tamil
25.07.2013
Thursday
26.07.2013
Friday
English
27.07.2013
Saturday
29.07.2013
Monday
Social Science
30.07.2013
Tuesday

1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அகஇ சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட தொடக்கக் கல்வி உத்தரவு
32, 000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்குரிய பட்டியல் கிடைத்ததும் இந்த நியமனப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 45 நாள்களுக்குள் இந்த பணி நியமனத்தை முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்ததாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் பேருக்கும் ஹால் டிக்கெட் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 422 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அதற்கடுத்த 2 மாதங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வு எழுத 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பரில் தேர்வு முடிவு: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். அதன்பிறகு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் பட்டதாரி ஆசிரியர்களும், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 12,295 பட்டதாரி ஆசிரியர்கள், 817 இடைநிலை ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் அறிவிப்பு: விவசாயப் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள், அரசுச் சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் நியமனத்துக்கான விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு இந்த நியமனத்துக்கான பணிகள் தொடங்கும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்
ஆகஸ்ட் 17,18-ல் தேர்வு

செப்டம்பரில் தேர்வு முடிவு
817 இடைநிலை ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஹால் டிக்கெட் பதிவேற்றம்
ஜூலை 21-ல் தேர்வு
ஆகஸ்ட்டில் தேர்வு முடிவு
செப்டம்பர் அல்லது அக்டோபரில் பணி நியமனம்

12,295 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

782 சிறப்பாசிரியர்கள் நியமனம்
பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டுள்ளது
ஆகஸ்ட்டில் பணி நியமனம்

1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன
நேர்முகத் தேர்வு செப்டம்பரில் பணி நியமனம்
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பணி ஆணை வழங்க -உயர்நீதிமன்றம் உத்தரவு

2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School Grant) மற்றும் பள்ளி பராமரிப்பு (Maintenance Grant) மானியம் 2013-14 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள்

இந்த கல்வி ஆண்டில் எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014), எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

யார் யார் சேரலாம்?
தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும், மனையியல், பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர தகுதி உடையவர் ஆவர். அவர்கள் 10–ம் வகுப்பு, பிளஸ்–2, பட்டப்படிப்பு எந்த நிலையில் படித்து முடித்திருக்க வேண்டும். இவ்வாறு படிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப்படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி) அந்த பாடத்தில் பி.எட். படிப்பில் சேர இயலாது. அதேபோல் 4 ஆண்டு இரட்டை பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேரத்தகுதி இல்லை. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆனால் அவர்களின் முதுகலை பட்டப்படிப்பு மதிப்பெண்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான கல்வி தகுதிகள்
பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின் கீழும், பயன்பாட்டு இயற்பியல், புவி–இயற்பியல், உயிரி–இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களில் பட்டம் பெற்றோர், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர–உயிரியல், தாவர–உயிரி தொழில்நுட்ப பட்டதாரிகள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பட்டதாரிகள் இளங்கலை புவியியல் படிப்பின் கீழும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பட்டதாரிகள் கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல் தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பை தகுதியாக கொண்ட படிப்புகளின் கீழ் பி.எட். சேர உள்ளோர் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாமல் முதுகலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்தான்.

குறைந்தபட்ச மதிப்பெண்
ஊட்டச்சத்து மற்றும் டயட்டிக்ஸ் முதுகலை பட்டதாரிகள் மனையியல் படிப்பின் கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளங்கலை பட்டப்படிப்பில் முதல் பிரிவில் தமிழை படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பி.எட். படிப்பில் சேருவதற்கு கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுப்பிரிவினர் – 50 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர் – 45 சதவீதம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் – 43 சதவீதம்
ஆதி திராவிடர் – 40 சதவீதம்

சிறப்பு மதிப்பெண்
இளங்கலை, முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வி தகுதிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அதன்படி, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண், எம்.பில். பட்டதாரிகளுக்கு 6 மதிப்பெண், பி.எச்டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்கள் கிடைக்கும். இவை தவிர என்.எஸ்.எஸ்., என்.சி.சி. ( ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ்) இருந்திருந்தாலோ, விளையாட்டு வீரராக இருந்தாலோ மேலும் 3 மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின் படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். தேர்வு செய்யப்படும் மாணவ–மாணவிகள் அரசு டாக்டரிடம் இருந்து பெற்ற உடல்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

விரைவில் விண்ணப்பம்
நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.200 என்றும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ரூ.175 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் சலுகை கட்டணத்தில் விண்ணப்பத்தை பெறுவதற்கு சான்றொப்பம் பெறப்பட்ட தங்கள் சாதி சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு: 1.67 லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, வரும், 21ம் தேதி, 422 மையங்களில் நடக்கிறது. தேர்வெழுத உள்ள, 1.67 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கும், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஒருபக்கம், 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடக்கின்றன. 

இதற்கிடையே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய, வரும், 21ம் தேதி, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்துகிறது. ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 657 பேர், 422 மையங்களில் நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். அன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடக்கிறது.

"அப்ஜக்டிவ்" முறையில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்"டுகள், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று மாலை வெளியிடப்பட்டன. 

தேர்வர்கள், விண்ணப்ப எண்கள் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். "ஹால் டிக்கெட்" எந்த காரணம் கொண்டும், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

தேர்வு நெருங்கிவிட்டதால், அதற்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., முழு வீச்சில் செய்து வருகிறது. கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பும் வகையில், தயாராக வைக்கப்பட்டுள்ளன. 

தேர்வுக்கு, ஒருசில தினங்களுக்கு முன், சம்பந்தப்பட்ட மையங்களுக்கு, கேள்வித்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையங்களை பார்வையிட, பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழுக்களும், அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்கள், தனித்தனியாக, மாவட்ட வாரியாக சென்று, தேர்வை பார்வையிடும்.

ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் போட்டி போடுகின்றனர். அதிலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு, அதிகமான போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில், 33,237 பேர்; வணிகவியலில், 18,330 பேர்; வரலாறு பாடத்தில், 18,380 பேர்; கணிதத்தில், 22,497 பேர், தேர்வை எழுதுகின்றனர். 

குறைந்தபட்சமாக, அரசியல் அறிவியல் பாடத்தை, 30 பேர் எழுதுகின்றனர். "ஹோம் சயின்ஸ்&' பாடத்தை, 113 பேர் எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment