Tuesday, July 30, 2013


G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்

          நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

          அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

           அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

          இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 

         பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது. 

நமது விளக்கம்:

           31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )

          1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

               இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

             இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம். 

           தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

                சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம். 

                OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

           OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.

                  உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். 

               இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் கூடுதலாக இந்த 3% பெற இயலும்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்ட்

மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்

        "ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.

         சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.

          கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது.

          கண்ணில் தூசி விழுந்தால், கசக்கக் கூடாது; லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வந்துவிடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், டூவீலர்களில் செல்பவர்கள், கண்ணாடி அணிவது அவசியம். சிறிய மண்துகள், தூசிகளால் கண் வலி ஏற்படும்.

           கண் எரிச்சல், கண் சிவந்திருந்தால் மருந்து வாங்கி இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் ஒரு சொட்டு விடலாம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பார்வை மற்றும் அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்," என்றார்.

திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு


          வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
 
         இதன்படி, அணிவகுப்பில் மாணவ, மாணவியர்களின் வருகை எண்ணிக்கை, தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கொடியேற்றம், கொடிபாடல், உறுதிமொழி, சர்வ சமய வழிபாடு, திருக்குறள் மற்றும் விளக்கம், இன்றைய சிந்தனை, தமிழ் மற்றும் ஆங்கில செய்திகளை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

          அணிவகுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சி முகாமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment