Friday, July 26, 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

           இரட்டைப்பட்ம் வழக்கு வருகிற திங்கட்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில் ஒருவரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளவர்களுக்காவது நீதி கிடைக்க
           கேட்டுக்கொள்ளப் போவதாக நம்மிடம் தெரிவித்தார். இவ்வழக்கு சம்பந்தமாக திரு.கருணாலயபாண்டியன் மற்றும் திரு.ஆரோக்கியராஜ் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

செய்தி பகிர்வு : திரு. முத்துப்பாண்டியன்

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு


           மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன்   01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013).

             01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.

PG Asst TRB - Answer Key download july 2013 |tamilnadu trb pg assistant exam result date

           Did you completed the trb pg assistant recruitment exam and want to confirm that what you have written in the exam is correct or wrong.
           We will update the answer keys soon in our website, you can download them in pdf format from the below links. Links will appear after we update answer keys. Answer keys will also be available on the trb official website, it will be updated after the two or three days of exam.
Subject Code
Subject
Question (or) Answer Keys
13PG01Tamil
13PG04Physics
13PG07Zoology
Question
13PG08History
13PG10Economics
Question
13PG12Political Science
Question
13PG15Micro-Biology
Question
13PG16Bio-Chemistry
Question
13PG17Telugu
Question
13PG03Mathematics
13PG06Botany
13PG14Physical Education Director Grade I
Question
13PG11Commerce
13PG02English
Question
13PG09Geography
Question
13PG05Chemistry  Question
13PG13Home Science
Question

Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013


          3 நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.

            01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது தற்போது 01.01.2006 முதல் இந்த ஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்


        6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

         மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

             6-வது ஊதியக்குழு சம்பள உயர்வில், குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

           இந்தக்குழு, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருததுக்களை கேட்டது. இதைத்தொடர்ந்து குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

              இந்த நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

              குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை சம்பள உயர்வு அளித்து நேற்று ஒரே நாளில் தனித்தனியே துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசின் இந்த உத்தரவின்மூலம் 43 பிரிவுகளைச்சேர்ந்த 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து துறைவாரியாக பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.

                இது குறித்து, என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிமூர்த்தி கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களின் நீண்ட கால மனக்குறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்த்து வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வுபெறும் நிலை ஏற்படும், இந்த ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் இதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிததுக் கொள்கிறேன்’’ என்றார்.

DEOs Promotion & Transfer Proceedings

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 உயர் / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவு.



பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

          SCERT - PREVENTION OF SEXUAL EXPLOITATION OF GIRL & CHILD SAFETY AWARENESS TRG | உயர்தொடக்கப்பள்ளி பெண் ஆசிரியர் -களுக்கு குழந்தைப் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி 02.08.2013 முதல் 04.09.2013 வரை நடத்த உத்தரவு


அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

           SMC MEETING TO BE CONDUCTED LAST FRIDAY OF EVERY MONTH | ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை கூட்டவதை உறுதிப்படுத்தவும் அவ்வாறு நடைபெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு

No comments:

Post a Comment