Wednesday, July 17, 2013


தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை - தினமலர்

             மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

              மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர். 

                இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், "பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பு - 2013-14ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தி பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை வெளியீடு
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–பழங்குடியினருக்கு பயிற்சி சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க தமிழக அரசு விசேஷ ஏற்பாடு

          ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறச்செய்யும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 ஆசிரியர் தகுதித்தேர்வு
              மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு, தமிழகத்தில் 23.8.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

              இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், சுயநிதி பள்ளிகளிலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க முடியும். தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மார்க்) எடுத்தால், தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

தேர்ச்சி விகிதம் மிகக்குறைவு
             அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டுமுறை தகுதித்தேர்வை நடத்தியது. இரண்டிலும், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பினரின் மிகக்குறைவாக இருந்தது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் அல்லது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பயிற்சி
               ஆனால், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால் தேர்ச்சி மதிப்பெண் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியாக கூறிவிட்டது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான காலி இடங்கள் அப்படியே இருக்கும் என்றும், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் அவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

               இந்த நிலையில், ஆதி திராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், மதம்மாறிய ஆதி திராவிடர்கள் ஆகியோரை தகுதித்தேர்வில் வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்? பயிற்சி வகுப்புகள் எவ்வளவு காலம்? பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கலாமா? என்பது உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இதற்கான பணிகளை ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மேற்கொண்டு வருகிறது.
11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு
                   தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன.

                   இந்த ஆண்டு ஸ்ரீரங்கம், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், ஜோலார்பேட்டை, செய்யார் உள்பட 11 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் செய்யாறு கல்லூரி நீங்கலாக எஞ்சிய 10 கல்லூரிகளுக்கும் தலா 18 விரிவுரையாளர் பணி இடங்கள் வீதம் 180 விரிவுரையாளர் பணி அடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்து உள்ளார்.

                மொத்தம் உள்ள காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினீயரிங் சாரா பாடப்பிரிவுகளும் அடங்கும். இந்த காலி பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2,527 இடங்கள் நிரம்பின

           ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

             4,419 மாணவர் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த, 8ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 2,527 மாணவர்கள் சேர்ந்தனர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில், 90 சதவீதம் பேர், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், 10 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளிலும் சேர்ந்தனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 கடந்த ஆண்டு, 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 14,473 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இடங்களில், 14.86 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. விண்ணப்பித்த மாணவர்களில், 1,892 பேர், "ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழக அரசு உத்தரவு.


               பள்ளிக்கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - மாவட்டத்திற்கு சிறந்தபள்ளியை தேர்ந்தெடுத்து தொடக்கப்பள்ளிக்கு ரூ.25000/-ம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000/-ம், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75000/-ம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100000/- வழங்க தமிழக அரசு உத்தரவு.


Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2013

Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(June -2013)

Chennai-4 (Professional & Executive)Chennai-4
ErodeKrishnagiriNagercoil
PudukottaiSivagangaiTiruvannamalai
ThiruvallurUthagamandalamVirudhunagar
TiruppurAriyalurChennai-35 (Unskilled)
Chennai-4 (Physically Handicapped)CuddaloreKancheepuram
MaduraiNamakkalRamanathapuram
ThanjavurThoothukudiThiruvarur
VelloreDharmapuriChennai-4 (Technical Personnel)
CoimbatoreDindigulKarur
NagapattinamPerambalurSalem
TheniTirunelveliTrichy
VillupuramMadurai (Professional & Executive)

List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list. Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.

தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்

           "சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

              முந்தைய, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டன. எனினும், "சமச்சீர் கல்வி பாடத்திட்டம், முந்தைய மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களுக்கு நிகராக இல்லை. தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும்" என, தனியார் பள்ளிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.

             இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருவதையும், தனியார் பள்ளி நிர்வாகிகள் கோடிட்டு காட்டுகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சராசரியாக, ஆண்டுக்கு 50 பள்ளிகள் முதல் 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிதாக முளைத்தபடி உள்ளன.

               சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வலுவாக இல்லாததால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளன என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எட்டாம் வகுப்பு வரை செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, மெட்ரிக் இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                        இது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தரமாக இல்லை என்ற, தனியார் பள்ளி நிர்வாகிகளின் வாதம் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில், தற்போது 3,737 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, அடுத்த, மூன்று ஆண்டுகளில் 4,000த்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                         இது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டம், தரமாக உள்ளது. அதில், எவ்வித சந்தேகமும் இல்லை. கல்வி வியாபாரம் செய்பவர்கள் தான், இந்த திட்டத்தை குறை கூறுகின்றனர். தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் வலுப்படுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறோம்.

                சி.பி.எஸ்.இ., பள்ளியை துவங்க வேண்டும் எனில், பல லட்சம் ரூபாயை செலவழிக்க வேண்டும். ஆனால், மெட்ரிக் பள்ளியை, சில லட்சம் ரூபாய் செலவில், துவங்கி விடலாம். அதனால், மெட்ரிக் பள்ளியை துவங்குகின்றனர். ஆனாலும், காலப்போக்கில், மெட்ரிக் பள்ளியை, அப்படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றி விடுகின்றனர். இப்படி, பல பள்ளிகள் மாறியுள்ளன." இவ்வாறு அவர் கூறினார்.

                    கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், "சமச்சீர் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், எப்படி இவ்வளவு பள்ளிகளை, புதிதாக ஆரம்பிப்பர்? எனவே, பாடத்திட்டத்தில் குறை என்று கூறுவது எல்லாம் பொய். பாடத்திட்டம், தரமாகவே உள்ளது. வரும் ஆண்டுகளில், பாடத்திட்டத்தின் தரம், மேலும் உயரும்" என, தெரிவித்தன.

               மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டதாவது: "ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், நந்தகுமார், மாவட்ட அளவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், பிளஸ் 1 சேர்வதற்காக, தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை, தடுத்து நிறுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளிலேயே, பிளஸ் 1 சேர வைத்து, அவர்களுக்கு, மாவட்ட அளவில் உள்ள சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, பாடம் நடத்த, ஏற்பாடு செய்துள்ளார்.

                மேலும், மூன்று மாணவர்களுக்கும்,சாப்பாடு, அவர்கள், பள்ளிக்குச் சென்று வர, போக்குவரத்து வசதி என, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தி உள்ளார்; இது, வரவேற்கக் கூடியது." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

                பொதுவாக, அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவியரிடம், "இலவசமாக, தரமான கல்வி தருகிறோம்" எனக் கூறி, அப்படியே, தனியார் பள்ளி நிர்வாகிகள், அழைத்துச் சென்றுவிடுவர். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை, மேலும் மெருகேற்றி, மாநில அளவில், "ரேங்க்" பெற வைத்து, பள்ளியை, விளம்பரப்படுத்தி விடுகின்றனர். இதற்கு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், "செக்" வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                    இதே பாணியை, மற்ற மாவட்ட கலெக்டர்களும் பின்பற்றினால், வரும் ஆண்டுகளில், பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் பல்வேறு இடங்களை, அரசு பள்ளி மாணவர்களே பிடிப்பர்.

கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி
             "ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது" 
           பெற்றோர், தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் தமிழக அரசு, துவக்க பள்ளியில் முதல் வகுப்பிலும், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலும், ஆங்கில வழி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.

             இதற்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யாமல் இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே, பெற்றோர் இத்திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு
             மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி  நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

            இந்த ஆட்சியில், விழாவுடன், கூடுதலாக, மாவட்ட வாரியாக, சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

               இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது

               : மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment